சிர்க்கோனியம் இருபாசுபைடு
சிர்க்கோனியம் இருபாசுபைடு (Zirconium diphosphide) என்பது ZrP2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]
பண்புகள் | |
---|---|
P2Zr | |
வாய்ப்பாட்டு எடை | 153.17 g·mol−1 |
தோற்றம் | சாம்பல் நிறப் படிகங்கள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசிர்க்கோனியட்தை மின் உருக்கலுக்கு உட்படுத்தி அதனுடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் இருபாசுபைடு உருவாகிறது.:[2]
- 2 Zr + P4 -> 2 ZrP2
இயற்பியல் பண்புகள்
தொகுசிர்கோனியம் இருபாசுபைடு தண்ணீரில் கரையாத சாம்பல் நிறப் படிகங்களாக உருவாகிறது. மேலும் இது நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மமாகும்.[3] ஈய(II) குளோரைடு படிகக் கட்டமைப்பில் இச்சேர்மம் காணப்படுகிறது.[4][2][5] சூடான செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தில் இது கரையும். வெற்றிடத்தில் சூடாக்கப்படும் போது இது பாசுபரசு மற்றும் ZrP ஆக சிதைகிறது:[6]
- ZrP2 -> ZrP + P
மேற்கோள்கள்
தொகு- ↑ Chemical Thermodynamics of Zirconium (in ஆங்கிலம்). Elsevier. 6 December 2005. p. 477. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-045753-6. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ 2.0 2.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3769. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ Grushko, Ya M. (28 May 1992). Handbook of Dangerous Properties of Inorganic And Organic Substances in Industrial Wastes (in ஆங்கிலம்). CRC Press. p. 750. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-9300-6. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "Crystal structure of zirconium diphosphide, ZrP 2". Zeitschrift für Kristallographie - Crystalline Materials 209 (4). 1 April 1994. doi:10.1524/zkri.1994.209.4.370. https://www.degruyter.com/document/doi/10.1524/zkri.1994.209.4.370/html?lang=en. பார்த்த நாள்: 7 March 2024.
- ↑ "mp-1523: ZrP2 (orthorhombic, Pnma, 62)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "циркония дифосфид - свойства, реакции". chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.