சிர்க்கோனியம் இருபுளோரைடு

வேதிச் சேர்மம்

சிர்க்கோனியம் இருபுளோரைடு (Zirconium difluoride) என்பது ZrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம் டைபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1][2]

தயாரிப்பு

தொகு

350 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிர்கோனியம்(IV) புளோரைடின் மெல்லிய அடுக்குகள் மீது அணுநிலை ஐதரசனை செலுத்தி வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் இருபுளோரைடு உருவாகிறது.[3][4]

இயற்பியல் பண்புகள்

தொகு

a = 0.409 நானோமீட்டர், b = 0.491 நானோமீட்டர், c = 0.656 நானோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் செஞ்சாய்சதுரப் படிக வடிவில் சிர்க்கோனியம் இருபுளோரைடு கருப்பு நிறத்தில் படிகமாகிறது.[3]

இச்சேர்மம் எளிதில் தீப்பற்றி எரிந்து சிர்க்கோனியம் ஈராக்சைடு உருவாகிறது.[3]

வேதிப் பண்புகள்

தொகு

800 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் சிர்க்கோனியம் இருபுளோரைடு விகிதச் சிதைவுக்கு உட்படுகிறது:[3]

2ZrF2 -> ZrF4 + Zr

மேற்கோள்கள்

தொகு
  1. Meshri, Dayal T. (26 January 2001). "Fluorine Compounds, Inorganic, Zirconium" (in en). ECT (Wiley). doi:10.1002/0471238961.2609180313051908.a01. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-48494-3. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/0471238961.2609180313051908.a01. பார்த்த நாள்: 22 July 2024. 
  2. Hawkins, Donald T. (6 December 2012). Binary Fluorides: Free Molecular Structures and Force Fields A Bibliography (1957–1975) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-6147-3. பார்க்கப்பட்ட நாள் 22 July 2024.
  3. 3.0 3.1 3.2 3.3 McTaggart, F. K.; Turnbull, A. G. (1964). "Zirconium difluoride" (in en). Australian Journal of Chemistry 17 (7): 727–730. doi:10.1071/ch9640727. பன்னாட்டுத் தர தொடர் எண்:1445-0038. https://www.publish.csiro.au/CH/CH9640727. பார்த்த நாள்: 19 July 2024. 
  4. Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065950-4. பார்க்கப்பட்ட நாள் 22 July 2024.