'''ஒன்றியமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்''' (''Union Public Service Commission'') அல்லது (UPSC), [[இந்திய அரசு|இந்திய அரசுப்]] பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும்.<ref name=":1">{{Cite web |url=http://www.upsc.gov.in/about-us/historical-perspective |title=Historical Perspective |website=www.upsc.gov.in }}</ref> இவ்வமைப்பு மத்திய அரசின் பல அரசுத் துறைகளின் பணிகளுக்கான பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.இந்திய ஆட்சிப் பணி,[[இந்தியக் காவல் பணி]], இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.[[இந்திய அரசியலமைப்பு]] பகுதி XIV -மத்திய மட்டும் மாநிலங்களின் கீழான சேவைகள் - விதிகள் 315 முதல் 323வரை)மத்திய அளவில் மற்றும் மாநில அளவில் தேர்வாணையங்களை நிறுவது குறித்து விளம்புகிறது.<ref name=":2">{{Cite web |url=http://www.upsc.gov.in/about-us/constitutional-provisions |title=Constitutional Provisions |website=www.upsc.gov.in }}</ref><ref name=":3">{{Cite web |url=http://lawmin.nic.in/olwing/coi/coi-english/Const.Pock%202Pg.Rom8Fsss(19).pdf |title=PART XIV: SERVICES UNDER THE UNION AND THE STATES |website=lawmin.nic.in |archive-url=https://web.archive.org/web/20111203131448/http://lawmin.nic.in/olwing/coi/coi-english/Const.Pock%202Pg.Rom8Fsss(19).pdf |archive-date=3 December 2011 |url-status=dead }}</ref>[[பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (இந்தியா)|மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின்]] கீழ் இந்த ஆணையம் செயல்படுகிறது.