கொற்றவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி சான்றில்லை
அடையாளங்கள்: Undo Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 35:
[[File:கொற்றவை HDR.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
 
தொடக்கத்தில் மறவர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள். கலித்தொகை முருகனைச் சிவனின் மகனாகக் காட்டுகின்ற போதிலும், சிவனுக்கும், கொற்றவைக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிச் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்கள் எதிலும் பேசப்படவில்லை. கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்ககாலத்துக்குப் பிற்பட்ட நூல்கள் சிவனின் துணைவியாக உமையை முதன்மையாகப் பேசுகின்றன. எனினும் இம்மூன்று நூல்களும் கொற்றவை பற்றியும் பேசத் தவறவில்லை. திருமுருகாற்றுப்படை முருகனை "மலைமகள் மகன்" என்று உமையின் மகனாகக் காட்டுவதையும் காணலாம். இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் கலந்து காணப்படுவது அக்காலத்தில் [[சமசுக்கிருதவயமாக்கம்|சமசுக்கிருதவயமாக்கத்தின்]] தொடக்க நிலையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரமும் உமை, கொற்றவை இரண்டு பெண்தெய்வ வடிவங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இதில் கொற்றவையே முதன்மை பெறுகின்றது எனினும், முன்னரே குறிப்பிட்டபடி கொற்றவையில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தாக்கம் புலப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொற்றவை திருமாலின் தங்கையாகக் காட்டப்பட்டதுடன் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது. சமஸ்கிருதமயமாக்கல் காரணமாக சில தமிழர்கள் அவளை சமஸ்கிருத வேதங்களில் இருந்து காளி என்று தவறாகப் புரிந்து கொண்டனர் (காளி எப்போதும் ஆடைகளை அணிந்த கோட்ரவைக்கு மாறாக நிர்வாணமாக இருப்பார் இதுவே முக்கியத் தீமை).
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொற்றவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது