மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
[[Image:Sa-pepper.jpg|thumb|right|மிளகு]]
'''மிளகு''' (''Black pepper'', ''பைப்பர் நிக்ரம்'', ''Piper nigrum'') என்பது பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு [[தாளிப்புப் பொருள்| தாளிப்புப் பொருளாகவும்]], மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு.
மிளகுக் கொடியின் பிறப்பிடம் [[தென்னிந்தியா]] ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், [[கன்னடம்]]:மெனசு (menasu, ಮೆಣಸು) [[மலையாளம்]]: குறு மிளகு(Kuru Mulagu) [[தெலுங்கு]]: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) [[கொங்கணி மொழி|கொங்கணி]]: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் [[தட்ப வெப்பம்|தட்பவெப்ப நிலை]] இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள [[பெப்பரைன்]] என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது