மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
[[Image:Sa-pepper.jpg|thumb|right|மிளகு]]
'''மிளகு''' (''Black pepper'', ''பைப்பர் நிக்ரம்'', ''Piper nigrum'') என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு [[தாளிப்புப் பொருள்| தாளிப்புப் பொருளாகவும்]], மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு.
மிளகுக் கொடியின் பிறப்பிடம் [[தென்னிந்தியா]] ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் [[தமிழ்|தமிழில்]] மிளகு எனவும், [[கன்னடம்]]:மெனசு (menasu, ಮೆಣಸು) [[மலையாளம்]]: குறு மிளகு(Kuru Mulagu) [[தெலுங்கு]]: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) [[கொங்கணி மொழி|கொங்கணி]]: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் [[தட்ப வெப்பம்|தட்பவெப்ப நிலை]] இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள [[பெப்பரைன்]] என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம்.
மிளகின் கொடி, [[இலை]] மற்றும் [[வேர்]] முதலியன பயன் தரும் பாகங்களாகும்.
 
 
 
==வரலாறு==
வரி 38 ⟶ 37:
==மிளகுக் கொடி ==
[[Image:Piper nigrum drawing 1832.jpg|left|thumb|200px|மிளகுக் கொடி ஓவியம் ]]
சுமார் நான்கு [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடிய மிளகுக் கொடி ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். படரும் கொடி வகையைச் சார்ந்த இத்தாவரம், அருகில் இருக்கும் [[மரம்]], தூண், கயிறு ஆகியவற்றை பற்றி படரும் தன்மையுடையது. இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். மிளகின் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இத்தாவரத்தின் [[இலை]]கள் சுமார் ஐந்து சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் நீளத்தில், சுமார் மூன்று சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் அகலத்தில் காணப்படுகின்றன. எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் சிறிய [[மலர்]]கள் சுமார் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள [[ஊசி]]யைப் போன்ற தோற்றமுடைய [[மலர்]]க்காம்பில் பூக்கும். மலர்கள் காய்களாக வளர்ச்சி பெறும்போது, இம்மலர்க் காம்புகள், சுமார் 15 சென்டிமீட்டர் வரை வளர்ச்சி பெறுகிறது. இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாறாமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிளகாகச் சுண்டி சிருத்துவிடும். இதுவே மிளகாகும்.
 
==பயிரிடுதல்==
மிளகு விளைச்சலுக்கு நீண்ட மழைபொழிவு, சீராண உயர் வெப்பம் மறும் பகுதி நிழல் ஆகியவை தேவை
மிளகு [[இந்தியா]]வில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து [[ஐரோப்பா]], [[சீனா]], மத்திய கிழக்கு நாடுகள், [[வட ஆப்பிரிக்கா]] மிளகு பயிரிடும் முறை பரவியது. 16ம் நூற்றாண்டில் [[ஜாவா]], [[சுமத்திரா]], [[மடகாஸ்கர்]] மற்றும் [[மலேசியா]]வுக்குப் பரவியது. மிளகுக் கொடி மிதமான ஈரப்பதமிக்க, வளமான [[மண்]]ணில் நன்கு வளரக்கூடியது. 40 முதல் 50 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டங்களாக இக்கொடியின் தண்டுப் பகுதியை, வெட்டி நடுவதின் மூலம் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பொதுவாக மரங்களின் அருகாமையில் வளர்க்கப்படும் இக்கொடி அம்மரங்களைப் பற்றி வளரும் வண்ணம் மரபட்டைகள் நிறைந்த மரங்களுடன் வளர்க்கப்படுகின்றன. முதல் மூன்று ஆண்டுகள் இத்தாவரம் மிகுந்த கவனிப்புடன் வளர்க்கப்படுகிறது. நான்காம் ஆண்டு முதல் ஏழாம் ஆண்டு வரை இக்கொடி பூத்து காய்க்கிறது. ஒவ்வொரு காம்பிலும் சுமார் 20 முதல் 30 பழங்கள் காணப்படுகின்றன. ஒரு காம்பில் உள்ள சில காய்கள் [[சிவப்பு]] நிறமாகிப் பழுத்தவுடன், காம்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. பின் வெயிலில் காய வைக்கப்பட்டு, காய்ந்தவுடன், காம்புகளில் இருந்து பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன.
 
== பதப்படுத்தும் முறைகள் ==
வரிசை 70:
 
==மருத்துவ குணங்கள்==
* [[கால்சியம]], [[இரும்பு]], [[பாஸ்பரஸ்]] போன்ற தாது உப்புக்களும், [[கரோட்டின்]],[[தயாமின்]], ரிபோபிளவின், ரியாசின் போன்ற [[வைட்டமின்]]களும் மிளகில் உள்ளன
[[சளி]], [[கோழை]], [[இருமல்]], [[விஷமுறிவு]].
* மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
* சளி, கோழை, இருமல், நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.
* மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
* உடலில் உண்டாகும் சுரத்தையும்(காய்ச்சல்) போக்கும் தன்மை உடையது.
* இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
* உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது