மென்பொருள் வழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 32:
==வழுநீக்கல்==
கணினி நிரலில் உள்ள வழுக்களை கண்டறிவதும் தீர்ப்பதுமே (வழுநீக்கல்) நிரல் எழுதுவதை விட அதிக நேரம் ஆகும் செயலாகும். சிக்கலான நிரல்கள் எழுதும் போது வழுக்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது, சிக்கலான நிரலின் சில வழுக்களை சரி செய்வதும் கடினமான செயலாகும். மூலநிரலில் உள்ள வழுக்களை கண்டறிவது சற்று சிரமமான செயலாகும், கண்டறிந்துவிட்டால் அதை சரிசெய்வது ஒப்பீட்டளவில் கண்டறிவதை விட சுலபமாகும். வழுநீக்கி என்ற மென்பொருள் வழுநீக்கலுக்கு உதவுகிறது, இவை நிரலின், ஒவ்வொரு வரியாக செயல்பட்டு வழுக்களை கண்டறிய உதவும். குறி கோப்புகளில்(log file) உள்ள தகவல்களை கொண்டும் எந்த வழு ஏற்படுகிறது என அறியலாம். வழுநீக்கிகளை பயன்படுத்தினாலும் வழுக்களை கண்டறிவது எளிய செயல் அல்ல. நிரலின் ஒரு பகுப்பில்(section) உள்ள வழுவானது இப்பகுப்புக்கு தொடர்பே இல்லாத மற்றொரு பகுப்பு செயல்படுவதை பாதிக்கும். இவ்வகையான வழுக்கள் கண்டுபிடிப்பதற்கு கடினமானவை.
 
==வழு மேலாண்மை==
மென்பொருளானது சில வழுக்களுடன் பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிடப்படுவது வழக்கமானதே. இவை மென்பொருளின் முதன்மை செயல்பாட்டை பாதிக்காவண்ணம் உள்ள வழுக்கள். மோசமான, உடனடி தீர்வு தேவைப்படும் வழுக்களுடன் மென்பொருள் வெளிவராது. மென்பொருளானது பல்வேறு வகையான வழுக்களை கொண்டிருக்கலாம் அவை மென்பொருள் சோதனையின் போது கண்டுபிடிக்கபடாமல் இருக்கும். இவ்வகையான வழுக்கள் பயனர்களுக்கு தொந்தரவு தராதவை. பயனர்கள் சில வழுக்களை விரும்பாவிட்டால் உடனடியாக புதிய பதிப்பு அந்த வழுக்கள் இல்லாமல் வெளியிடப்படுவதும் வழக்கம். மேலும் மென்பொருளின் முதன்மை பயன்பாட்டுக்கு சிக்கல் விளைவிக்காத மென்பொருள் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட வழுக்கள் நிரலாளர்களுக்கு தெரியும். அதில் பெரும்பாலானவற்றை அடுத்த பதிப்பின் போது சரிசெய்துவிடுவார்கள். மென்பொருளை வெளியிடும் போதே பதிப்பு குறிப்பு ஒன்றையும் வெளியிடுவார்கள், இதில் எந்த வழுக்கள் உள்ளன என்றும், அதற்கு மாற்றுவழி இருந்தால் அதையும் குறிப்பிடுவார்கள்.
 
வழுக்களை சரிசெய்யாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
*நிரலாளர்களுக்கு போதிய நேரமின்மை
*நெருக்கடி இல்லாத வழுக்களை சரிசெய்வது பொருளாதார அளவில் பயன்னற்றதாக இருக்கலாம்.
*வழுவானது வெளியிடப்படாத புதிய பதிப்பில் சரிசெய்யப்படலாம்
*வழுவை சரிசெய்தால் அது புதிய வழுக்களை உருவாக்கலாம்.
*அது வழுவாக இல்லாமல் இருக்கலாம். பயனருக்கு ஏற்பட்ட புரிதலில் காரணமாக அந்த வழு பதியப்பட்டிருக்கலாம்.
*வழுவை சரிசெய்ய நிரலில் மாற்றம் செய்வது பெரியளவிலோ அல்லது வெளியீட்டை காலந்தாழ்த்துவதாகவோ இருக்கலாம்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது