பிட்டின் இந்தியா சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''பிட்டின் இந்தியா சட்டம்''' (''Pitt's India Act'') அல்லது '''கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784''' என்பது [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானிய இராச்சியத்தின்]] நாடாளுமன்றத்தால் 1784 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இந்தியத் துணைகண்டத்தில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்]] ஆட்சியையும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இது இயற்றப்பட்டது. இச்சட்டம், இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கம்பனியும் பிரித்தானிய அரசும் கூட்டாக நிருவாகம் செய்ய ஒரு கட்டுபாட்டுகட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.
 
1773 இல் கிழக்கிந்திய நிறுவனம் தனக்கேற்பட்ட நிதிப்பற்றாக்குறையைப் போக்க பிரித்தானிய அரசின் உதவியை நாடியது. இந்தியாவிலிருந்த நிறுவன அதிகாரிகளிடையே ஊழல் மலிந்திருந்த காரணத்தால், நிதி உதவி செய்வதற்கு நிபந்தனையாக, நிறுவனச் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு சட்டத்தை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியது. [[1773 மேற்பார்வைச் சட்டம்]] (''Regulating Act of 1773'') என்றழைக்கப்பட்ட அச்சட்டம் தோல்வியடைந்தது. நிறுவனச் செயல்பாடுகளில் காணப்பட்ட முறைகேடுகளையும் ஊழலையும் அதனால் தடுக்க முடியவில்லை. இச்சட்டத்தின் குறைபாடுகளைத் தீர்க்க 1784 இல் பிரித்தானியப் பிரதமர் [[வில்லியம் பிட்]] 1784 இல் ஒரு புதிய சட்டத்தை இயற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/பிட்டின்_இந்தியா_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது