ஆரணி குப்புசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆரணி குப்புசாமி முதலியார்''' (1866/67-1925) ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[துப்பறியும் புனைவு|துப்பறியும் புதினங்கள்]] பலவற்றை எழுதியுள்ளார். ஒன்பது பாகங்களாக வெளியான ''இரத்தினபுரி இரகசியம்'' இவரது குறிப்பிடத்தக்க படைப்பு.
இவரது முதல் புதினத்தின் பெயர் ''லீலா''; மொத்தம் 75 புதினங்களை எழுதினார். [[சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்|சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும்]], [[சோ. சிவபாதசுந்தரம்|சோ. சிவபாதசுந்தரமும்]] இணைந்து எழுதிய ''தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்'' (1977) எனும் நூலில் 1911 இல் ஒரு இதழில் குப்புசாமி முதலியாரின் புதினமான ''மதன கண்டி'' விமர்சனம் செய்யப்பட்டது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இவர் 1911 அல்லது அதற்கு முன்பிருந்தே எழுதத் தொடங்கிவிட்டார் எனத் தெரிகிறது. 1917ம் ஆண்டு வரை 31க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியிருந்தார். ''[[ஆனந்த போதினி (இதழ்)|ஆனந்த போதினி]]'' இதழில் இவரது புதினங்கள் தொடர்களாக வெளியாகின. குப்புசாமி முதலியார் 1920கள் வரை தொடர்ந்து புதினங்கள் எழுதினார். [[ஷெர்லக் ஹோம்ஸ்]] கதாப்பாத்திரத்தைத் தழுவி ஆனந்த சிங் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இவரது படைப்புகள் [[ஆர்தர் கொனன் டொயில்]], [[ஜார்ஜ் டபிள்யு. எம். ரேனால்ட்ஸ்]] போன்ற ஆங்கில [[குற்றப்புனைவு]] எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி அமைந்தன. ''பூங்கோதை'', ''தினகரசுந்தரி அல்லது ஒரு செல்வச் சீமாட்டியின் அற்புதச் சரித்திரம்'', ''அரசூர் இலட்சுமணன் அல்லது அதியற்புதக் கள்ளன்'', ''இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்'', ''ஆனந்த சிங்கின் அற்புதச்செயல்கள்'', ''தீன தயாளன் அல்லது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்'', ''விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக்கொலை'', ''மின்சார மாயவன்'', ''தபால் கொள்ளைக்காரர்கள்'', ''இரத்தினபுரி ரகசியம்'', ''மதனகல்யாணி'', ''கடற்கொள்ளைக்காரன்'', ''அமராவதி பாலம்'' போன்றவை அவற்றுள் சில.
வரிசை 11:
*[http://books.google.co.in/books?id=sqBjpV9OzcsC&pg=PA258&dq=Arani+Kuppusami+Mudaliyar+1925&hl=en&sa=X&ei=mV89T4-YJIvzrQf46uzBBw&ved=0CEcQ6AEwAA History of Indian Literature: .1911-1956, struggle for freedom : triumph and tragedy, Sisir Kumar Das]
*[http://books.google.co.in/books?id=7ikiAAAAMAAJ&q=Arani+Kuppusami+Mudaliyar+1925&dq=Arani+Kuppusami+Mudaliyar+1925&hl=en&sa=X&ei=mV89T4-YJIvzrQf46uzBBw&ved=0CFIQ6AEwAg An introduction to Tamil literature. N. Subrahmanian]
*[http://tamilhelp.wordpress.com/2011/02/10/writer-sv-ramakrishnan-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/ விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக் கொலை எஸ்.வி.ராமகிருஷ்ணன்]
 
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரணி_குப்புசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது