ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
1892-ல் 'மின்சாரவியல், காந்தவியலில் அண்மை ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்' (Notes on Recent Researches in Electricity and Magnetism)என்ற நூலை வெளியிட்டார். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எழுதிய நூலின் விளக்கவுரையாக அவருடைய நூலுக்கு மூன்றாவது தொகுதியாக இது அமைந்திருந்தது. பேராசிரியர் பாண்டிங் (J.H.Poynting) என்பவருடன் இணைந்து இயற்பியலுக்கான பாடத்தைப் 'பொருளின் குணங்கள்'(Properties of Matter) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.
 
தாம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (Cathode Ray Tube) உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் எஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும். ஓர் எலக்ட்ரோ மீட்டரின் உதவி கொண்டு, குழாயில் பல வெட்டுத்துளைகளை உருவாக்கி காந்தப் புலத்தின் உதவி கொண்டு ஆராய்ந்தார். இக்கதிர்களிலிருந்து எதிர் மின்துகளைத் தனியே பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தார். இரண்டாவதாக மின்புலத்தினால் இக்கதிர்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அராய்ந்தார். அதற்கு வெற்றிடக் குழாயையும் ஒளிருன் தன்மையையும் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார்.
மூன்றாவது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட -நிறை விகிதத்தைக் (Charge-mass ratio) கண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் துகள்கள்(Corpuscles) என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை மின்னணு என்று உறுதிப் படுத்தினார்.
 
பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் நவீன அணு இயற்பியலின் தந்தை என்று போற்றப்பட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெ._தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது