ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5,005 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் நவீன அணு இயற்பியலின் தந்தை என்று போற்றப்பட்டார்.
 
1895-ல் 'கணிதவியலின் ஆதாரக் கூறுகள்','மின்சர, காந்தவியலின் கோட்பாடுகள்' என்ற இரு நூல்களையும் வெளியிட்டார். அவை 1921-ல் ஐந்தாவது வெளியீடாகவும் வெளியிடப்பட்டன. 1896-ல் தாம்சன் அமெரிக்கா சென்றர். இவருடைய அணமைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலண்டன் இராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது தான் கண்டறிந்த மின்னணு துகளைப் பற்றி அறிவித்தார். 1897 ஏப்ரல் 30 வெள்ளியன்று இதை அறிவித்தார். 1903-ல் அவர் வெளியிட்ட "வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல் " என்ற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். 'கேவண்டிசு ஆய்வுக்கூடத்தில் தாம்சனின் முக்கியமான பெரிய நாள்கள்' என்ற தலைப்பில் இந்த நூல் இவருடைய மகன் ஜார்ஜ் தாம்சனால் பிற்காலத்தில் (1928,1933 ஆகிய ஆண்டுகளில்) இரண்டு பதிப்புகளில் வெளியிடப்பட்டது. 1904-ல் மீண்டும் அமெரிக்கா சென்றார். பொருள்கள் மற்றும் மின்சாரம் பற்றி யேல் பலகலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். 'அணுவின் அமைப்பு' பற்றிய இவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டன. நேர்மின் கதிர்களைக் கொண்டு வெவ்வேறு வகையான அணுக்களையும் மூலக்கூறுகளையும் பிரிப்பது பற்றிய ஆஸ்டன், டெம்ப்ஸ்டர் போன்ற அறிவியலறிஞர்களுடைய கருத்துகளின் மூலமாகப் பல ஐசோடோப்புகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு முறையைப் பற்றி விளக்கினார். நியான் வாயுவைப் பகுத்து இவர் செய்த ஆய்வின் மூலம் அசோடோப்புகளின் கலவையாக சில தனிமங்கள் இருப்பதைத் தெளிவாக்கினார். அதன் அடிப்படையில் இவருடைய மாணவர்கள் ஆசுடன், டெம்ப்ஸ்டெர் ஆகியோர் இணைந்து நிறை நிலைமானி (Mass spectrograph)உருவாக்கினர். 1906-ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒளி, பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான ரூதர்போர்டுக்கு உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது.
 
 
{{commons|Joseph John Thomson}}
 
15,149

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1027287" இருந்து மீள்விக்கப்பட்டது