சுரோடிங்கரின் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lt:Šriodingerio katė
No edit summary
வரிசை 4:
 
== சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன? ==
இந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள [[பூனை]] ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் [[நீர்|நீரில்]] [[ஐதிரோசயனைடு]] (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடியானது மூடிய ஒரு குழல்குப்பியில் உள்ளது. இக் காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் [[வளிமம்]] அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு [[கதிரியக்கம்|கதிரியக்கப்]] பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது. சோதனை செய்யும் காலத்தில், ஒரேயொரு [[அணு]] சிதைவுற்றாலும் ஓர் [[உணர்வி]]யின் உதவியால் இயங்கி, ஒரு [[சுத்தியல்]] சழன்று அடித்து, குழல்குப்பியை உடைத்து விடும். எனவே அதில் இருக்கும் ஐதரரசசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும். ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து, சுத்தியால் அடிபட்டு, குழல்குப்பி உடைந்து, ஐதரசசயனைடியக் காடி வெளியேறி பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று '''அறிய முடியாது'''. இப்படி ஒரு பார்வையளரால் ''அறிய முடியாததால்'', குவாண்டம் இயங்கியல் விதியின் [[நேரடுக்குப் பண்பு|நேரடுக்குப் பண்பின்]] படி, பூனை'' உயிருடனும் உயைரற்றும்உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில்'' உள்ளது என்னும் (பொதுவாழ்வில்) முரண்தரும் முடிவுக்கு
வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்தப்பின்தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது, குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது (பார்வையிடுவதால்), எனவே இரண்டில் ஒரு நிலையில்தான் காண முடியும். இதனை பார்வையாளரின் ''முரண்தருகுழப்பம்'' (observer’s paradox) ''முரண்சிக்கல்'' என்று அழைக்கப்படும். அதாவது பார்வையாளரானவர், என்ன நிலையில் உள்ளது என்று அறிய முற்படும்பொழுது, உண்மையாக ''உள்ளநிலை கெடுகின்றது.'' பார்வையிடுதல், உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகக் கொளளப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கரின்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது