அய்யன்காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: அய்யன்காளி (பி.28 ஆகஸ்டு 1863) திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அ...
(வேறுபாடு ஏதுமில்லை)

04:21, 17 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

அய்யன்காளி (பி.28 ஆகஸ்டு 1863) திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார்.

அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பார்ப்பனீய வர்ணாஸ்ரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை மிருகத்திற்கு இணையாக ஏரில் பூட்டி வயலை உழுதனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யன்காளி&oldid=104540" இலிருந்து மீள்விக்கப்பட்டது