விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- Sundar 05:39, 30 ஜூன் 2005 (UTC)

I hope this is Mathy Kandhasamy, if yes, unga style la "vaanga vaanga to Tamil Wikipedia" :)) - Santhoshguru 10:15, 30 ஜூன் 2005 (UTC)

சு. வில்வரத்தினம்தொகு

Category:கவிஞர்கள் பக்கத்தில் உங்கள் பங்களிப்பைப் பார்த்தேன். Category பக்கங்கள் பகுப்புக்களே. அவற்றிலிருந்து பிற பக்கங்களுக்கு இணைப்பு தானாக உருவாக நாம் அப்பக்கங்களில் [[Category:கவிஞர்கள்]] என உள்ளீடு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் உள்ளீடுகளை சு. வில்வரத்தினம் என்ற தனிக்கட்டுரைக்கு நகர்த்தியுள்ளேன். -- Sundar 05:57, 30 ஜூன் 2005 (UTC)

கட்டுரைத் தலைப்புக்கள்தொகு

மதி, புதிய கட்டுரைகள் தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களியுங்கள். விக்கிபீடியாவில் தலைப்பிடும் போது அடைப்புக்குறிகளுள் தகவல்களையும் இணைப்பதைத் தவிர்ப்பது வழக்கமாதலால் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் இரண்டு பெக்கி கிரிப்ஸ் அப்பையா, குவாம் ஆந்தனி அப்பையா ஆகிய தலைப்புக்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நன்றி. கோபி 17:35, 26 ஜனவரி 2007 (UTC)

பெயர்கள் தலைப்புக்களாக அமையும் போது முதலெழுத்துக்களிற்கு இடையியில் இடைவெளி இடுவதே வழக்கமாகும். உதாரணமாக பொ. ரகுபதி. மேலும் கட்டுரைத் தொடக்கத்தில் தலைப்பு bold ஆக இருத்தலும், பகுப்பு இடப்படுவதும் பயனுள்ளது. விக்கியாக்கப்பட்ட சில கட்டுரைகளைத் தொகுப்புப் பார்வையிற் பார்த்தால் இதனை எளிதில் பின்பற்ற உதவியாயிருக்கும். பார்க்க: Wikipedia:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு

--கோபி 21:01, 26 ஜனவரி 2007 (UTC)

கட்டுரைகளுக்கு இணையான ஆங்கில விக்க்க் கட்டுரைகள் இருப்பின் அவற்றுக்கான இணைப்பைத் தருவது கட்டுரையை விரிவாக்க உதவியாயிருக்கும். நபர்கள் தொடர்பான கட்டுரைகளில் பெயரை ஆங்கிலத்தில் பிறைக்குறிக்குள் குறிப்பிடுவதும் பொருத்தமானது. --கோபி 21:25, 26 ஜனவரி 2007 (UTC)

நல்வரவுதொகு

நல்வரவு! உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்களின் பங்களிப்பு த.வி. மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்களைப் பற்றி பயனர் பக்கத்தில் சிறு குறிப்பு தந்தால் நன்று. நன்றி.--Natkeeran 21:24, 26 ஜனவரி 2007 (UTC)

தகவல்களுக்கு நன்றி. --Natkeeran 01:35, 16 பெப்ரவரி 2007 (UTC)

பயனர் பக்கம்தொகு

உங்கள் பயனர் பக்கத்தில் யாரோ K.P.ASHMALKHAN என்று இட்டு உள்ளார்கள். அது நீங்கள் இல்லை என்றால் பக்கத்தை திருத்தலாம். இல்லை, நீங்கள் விரும்பினால் அதை அழித்து தருகிறேன். மற்றபடி, உங்கள் தொடர் பங்களிப்புகளை காண மகிழ்ச்சி--Ravidreams 10:39, 11 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள் தொடர்பாகதொகு

நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் நீங்கள் எடுத்தவையா? அவற்றின் copyright தொடர்பாகத் தயவுசெய்து குறிப்பிடவும். அவ்வாறு குறிப்பிடப்படாத படிமங்கள் படிப்படியாக நீக்கப்படுவது வழக்கமானதாகும். நன்றி

ஏற்கனவே நீங்கள் பதிவேற்றிய  , 70px ஆகியன நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவையும் உங்களது சொந்தப் படிமங்களாயின் பொருத்தமான உரிமம் வழங்கி உதவுக. நன்றி.

பேச்சுப் பக்கங்களில் எந்தப் பதிலும் அளிப்பதில்லை என்ற முடிவுடன் இருப்பதாகத் தெரிகிறது. ஒருபடிமத்துக்கு author நீங்கள் என்பதையும் {{GFDL}} இன் கீழ் வழங்குவதாயும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏனைய படிமப் பக்கங்களையும் தொகுத்து உரிய உரிமங்களை இட்டால் உதவியாக இருக்கும். அவற்றைப் பதிவேற்றியவர் நீங்களென்பதால் அவற்றுக்கான உரிமங்களை உங்களாலேயே வழங்க முடியும். மேலும் பேச்சுப் பக்கங்களில் பதிலளிப்பது ஏனைய பயனர்களின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதோடு நன்னம்பிக்கையையும் வளர்க்கும். நன்றி. −முன்நிற்கும் கருத்து 202.124.183.119 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மதி, அவர்கள் தனது செந்த படங்களையே கோப்பேற்றியுள்ளார். உரிமங்கள் சேர்ப்பது எப்படி என்பதாக நானும் அவரும் ஒரு உரையாடிலில் இருக்கின்றோம். அனேகமாக அவர் பொதுவில் அளிப்புரிமையுடன் உரிமங்களை தருவார் என்றே நம்புகின்றேன். மேலும் அனோமதய அல்லது அடையாளம் காட்டாத பயனர்கள் கோப்புக்களை நீக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்க. --Natkeeran 03:26, 2 மே 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:41, 21 சூலை 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mathygrps&oldid=823542" இருந்து மீள்விக்கப்பட்டது