தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கெலாங் ->கெலுக்
வரிசை 20:
| royal anthem =
}}
'''தலாய் லாமா''' (''Dalai Lama'') என்பது கெலாங்கெலுக் (கெலுக்பா) அல்லது மஞ்சள் தொப்பி என்ற [[திபெத்]]திய [[பௌத்தம்|புத்த]] மதப்பிரிவின் தலைமை [[லாமா]]வின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா ([[திபெத்திய மொழி|திபெத்தியம்]]: བླ་མ, ''bla-ma'', ஆசான், குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும்<ref>[http://www.etymonline.com/index.php?term=lama Online Etymology Dictionary]. Etymonline.com. Retrieved on 2011-04-10.</ref>. திபெத்திய மொழியில் "லாமா" என்னும் சொல் "குரு" என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையானது என்று [[14வது தலாய் லாமா|இன்றைய தலாய் லாமா]] விளக்கம் தருகிறார்.
 
மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் [[அவலோகிதர்|அவலோகிதரின்]] அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். குலாங் அல்லது மஞ்சள் தொப்பி பிரிவின் தலைவர் பதவியின் பெயர் [[கேண்டன் டிரிபா]] ஆகும். பலரும் தலாய் லாமா இப்பிரிவின் தலைவர் என கருதுவதுண்டு. தலைவர் பதவியில் ஒருவர் 7 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும் இத்தலைவரை நியமிப்பதில் தலாய் லாமாவிற்கு பெரும்பங்கு உண்டு. தலாய் லாமாக்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
வரிசை 30:
மத்திய ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம் [[திபெத்]] ஆகும். திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில் 'சாங்ட்சன் கேம்போ' (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கிணைத்தார், இவரே புத்த மதத்தை திபெத்திற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் என கருதப்படுகிறது. 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து 'தலாய் லாமா' என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை பெயரளவில் ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவரின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.
 
17 ம் நூற்றாண்டில் திபெத் பிளவுபட்டிருந்தது, மேலும் மஞ்சூரியாவிருந்து பின்வாங்கிய சக்கர் பகுதியை ஆண்ட லிக்டென் கான் (Ligten khan) என்ற மங்கோலிய தலைவர் கெலாங்கெலுக் புத்த மதபிரிவை அழித்துவிடுவதாக கூறி திபெத் மேல் படையெடுத்து வந்தார். அதை முறியடிக்கவும் திபெத்தை ஒன்றிணைக்கவும் 5-ம் தலாய் லாமா மங்கோலிய இனத் தலைவர் குஷ்ரி கானை கேட்டுக்கொண்டார். அதையேற்று குஷ்ரி கான், லிக்டென் கான் மற்றும் கெலாங் பிரிவின் எதிரிகளை அழித்து திபெத்தை ஒன்றிணைத்தார். இவர் கெலாங்கெலுக் பிரிவின் பாதுகாவலர் என்ற பட்டத்தை பெற்று 5-ம் தலாய் லாமா ஆன்மீகத்திலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்த உதவிபுரிந்தார்.
 
17 ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழியாக தலைநகரான [[லாசா]]வை இருப்பிடமாக கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவராக, மதம் மற்றும் நிருவாகப் பணி செய்துவந்தார்கள்.
வரிசை 38:
கிறித்தவ சகாப்ததிற்கு முன்பே திபெத் அரச வமிசத்தினரின் தனி ஆட்சிக்குட்பட்ட நாடாகவே இருந்து வந்தது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட திபெத்தியப் பீடபூமிப் பிரதேசத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "லோதான்" புத்த மதம் பரவியது. அதற்கு முன்பாக பான்(இலை) எனும் இயற்கை வழிபாடே திபெத்தில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்பட்டு வந்தது. <ref> [https://sites.google.com/site/rajesaravana/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE|தலாய் லாமா]</ref>
 
கிபி பதினான்காம் நூற்றாண்டில் 'இட்ஜோங்கபா' என்ற திபெத்திய புத்த குரு தோன்றினார். அப்பொழுது வழக்கிலிருந்த வேவ்வேறு புத்தமத பிரிவுகளின் சூத்திரங்களையும் யோக முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு தனிப்பெரும் புத்தமதப் பிரிவை இட்ஜோங்க்பா தோற்றுவித்தார். இப்பிரிவினர் 'கிலுக்கெலுக்' அல்லது 'கிலுக்பாகெலுக்பா' என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தமது மதச் சின்னமாக மஞ்சள் தொப்பி அணிய பணிக்கப்பட்ட காரணத்தால் 'மஞ்சள் சமயத்துறவிகள்' என அழைக்கப்படலாயினர். வெகுவிரைவில் ஏராளமான பிற புத்த லாமாக்களும் பொதுமக்களும் இந்தப் புதிய புத்தமதத்திற்கு ஆதரவு அளிக்கத் துவங்கினர்.
 
==முதல் தலாய் லாமா ==
வரிசை 48:
தலாய் லாமா அரசனுக்கு இணையாக எல்லா வலிமையும் வாய்ந்தவர் என்றபோது தனது மத சடங்குகளில் இடையூறு வரக்கூடாது என்பதற்காக ஐந்தாம் தலாய் லாமா [[பஞ்சென் லாமா]] என்ற இணைத்தலைவரை நியமித்து அரசை வழிநடத்தும் பொறுப்பை அவருக்கு தந்தார். திபெத்திய மத வழக்கப்படி, தலாய் லாமாவாக இருப்பவர்கள், தங்களுக்கு அடுத்த வாரிசாக சிறு வயதிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு 'பஞ்சன் லாமா' என்று பட்டம் சூட்டி விடுவார்கள். தலாய் லாமாவின் மறைவுக்குப் பின்னர் இந்த பஞ்சன் லாமாதான் அடுத்த தலாய் லாமாவாகப் பொறுப்பேற்பார்.
 
அந்த வகையில், தற்போதைய14-ம் தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவாக ஒரு சிறுவனைத் தேர்வு செய்தார். இதையடுத்து அதற்குப் போட்டியாக கடந்த 1995ம் ஆண்டு ஒரு கியால்ஸ்டன் நோர்பு என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக தேர்ந்தெடுத்தது சீன அரசு. தற்போது இவருக்கு 20 வயதாகிறது. தலாய் லாமா தேர்ந்தெடுத்த பஞ்சன் லாமா சிறுவனை அதற்குப் பிறகு யாருமே பார்க்கவில்லை. <ref> http://viduthalai.periyar.org.in/20100303/news12.html</ref> இந்த நிலையில் சீன அரசு தேர்ந்தெடுத்த பஞ்சென் லாமாதான் ஒரே வாரிசாக இருக்கிறார். எனவே அடுத்த தலாய் லாமா தேர்வின்போது பெரும் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் தலாய் லாமாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும், அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் பஞ்சன் லாமா நோர்புவுக்கு சீன அரசு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளது.
 
==திபெத் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது