தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 26:
'''தலாய் லாமா''' (''Dalai Lama'') என்பது கெலுக் (கெலுக்பா) அல்லது மஞ்சள் தொப்பி என்ற [[திபெத்]]திய [[பௌத்தம்|புத்த]] மதப்பிரிவின் தலைமை [[லாமா]]வின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா ([[திபெத்திய மொழி|திபெத்தியம்]]: བླ་མ, ''bla-ma'', ஆசான், குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும்<ref>[http://www.etymonline.com/index.php?term=lama Online Etymology Dictionary]. Etymonline.com. Retrieved on 2011-04-10.</ref>. திபெத்திய மொழியில் "லாமா" என்னும் சொல் "குரு" என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையானது என்று [[14வது தலாய் லாமா|இன்றைய தலாய் லாமா]] விளக்கம் தருகிறார்.
 
மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் [[அவலோகிதர்|அவலோகிதரின்]] அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். குலாங்கெலுக் அல்லது மஞ்சள் தொப்பி பிரிவின் தலைவர் பதவியின் பெயர் [[கேண்டன் டிரிபா]] ஆகும். பலரும் தலாய் லாமா இப்பிரிவின் தலைவர் என கருதுவதுண்டு. தலைவர் பதவியில் ஒருவர் 7 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும் இத்தலைவரை நியமிப்பதில் தலாய் லாமாவிற்கு பெரும்பங்கு உண்டு. தலாய் லாமாக்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
 
5-வது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார். அதிலிருந்து தலாய் லாமாக்கள் ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை தலாய் லாமாக்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். 14-வது தலாய் லாமா மார்ச் 14, 2011 வரை மத்திய திபெத்திய நிருவாகத்தின் (நாட்டுக்கு வெளியே அமைந்த திபெத் அரசு) தலைவராக இருந்தார். மார்ச் 14, 2011ல் அப்பொறுப்பில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். வருங்காலத்தில் தலாய் லாமா என்ற அமைப்பு நீக்கப்படலாம் என்றும் அடுத்த தலாய் லாமா திபெத்துக்கு வெளியே தேர்த்தெடுக்கப்படுவார், அவர் பெண்ணாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார் <ref>http://www.newser.com/story/13544/next-dalai-lama-may-be-female.html</ref>. இதை சீன அரசு உடனடியாக மறுத்து அடுத்த தலாய் லாமா [[சீன மக்கள் குடியரசு|சீன]] அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது. <ref>[http://www.tricycle.com/blog/chinese-government-we-will-choose-next-dalai-lama அடுத்த தலாய் லாமாவை நாங்கள் தேர்ந்தெடுப்போம் - சீனா]</ref><ref>[http://www.voanews.com/english/news/asia/east-pacific/China-Warns-Dalai-Lama-About-Choosing-Successor-130556513.html அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்க தற்போதய தலாய் லாமாவிற்கு அதிகாரம் இல்லை - சீனா]</ref>
வரிசை 43:
 
கிபி பதினான்காம் நூற்றாண்டில் 'இட்ஜோங்கபா' என்ற திபெத்திய புத்த குரு தோன்றினார். அப்பொழுது வழக்கிலிருந்த வெவ்வேறு புத்தமத பிரிவுகளின் சூத்திரங்களையும் யோக முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு தனிப்பெரும் புத்தமதப் பிரிவை இட்ஜோங்க்பா தோற்றுவித்தார். இப்பிரிவினர் 'கெலுக்' அல்லது 'கெலுக்பா' என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தமது மதச் சின்னமாக மஞ்சள் தொப்பி அணிய பணிக்கப்பட்ட காரணத்தால் 'மஞ்சள் சமயத்துறவிகள்' என அழைக்கப்படலாயினர். வெகுவிரைவில் ஏராளமான பிற புத்த லாமாக்களும் பொதுமக்களும் இந்தப் புதிய புத்தமதப் பிரிவிற்கு ஆதரவு அளிக்கத் துவங்கினர்.
 
==தலாய் லாமா பெயர் தோற்றம்==
1578ல் மங்கோலி அரசர் அல்டான் கான் தலாய் லாமா என்ற பட்டத்தை சோனம் கியட்சோவுக்கு (3வது தலாய் லாமா) வழங்கினார். இந்தப்பட்டம் இவருக்கு முன் இருந்த இருவருக்கும் 1578ல் இருந்து குறிக்கப்பட்டது. 14 வது தலாய் லாமா இந்த பட்டத்தை அல்டான் கான் வழங்கவேண்டும் என்று நினைக்கவில்லை இது சோனம் கியட்சோ என்பதன் மங்கோலிய மொழிபெயர்ப்பாகும் என்கிறார்.
 
2வது தலாய் லாமாவிலிருந்து அனைத்து தலாய் லாமாக்களும் கியட்சோ என்ற பெயரை தாங்கி வருகிறார்கள் இதன் பொருள் பெருங்கடல் என்பதாகும். முதல் பெயர் மட்டுமே மாறி வரும். தலாய் என்பதற்கு [[திபெத்திய மொழி|திபெத்திய மொழியில்]] எந்த பொருளும் இல்லை, இது பட்டத்திற்கான பெயராக நிலைத்து விட்டது என்று [[டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா|14வது தலாய் லாமா]] கூறுகிறார். <ref>Laird (2006), p. 143.</ref>
 
சோனம் கியட்சோவுக்கு தலாய் லாமா என்ற பட்டம் முதலில் கிடைத்தாலும் இவர் தலாய் லாமா பரம்பரையில் 3வது ஆவார். இவருக்கு முன் இருந்த இருவருக்கும் மரணத்திற்கு பின் அப்பட்டம் அளிக்கப்பட்டது.
 
==முதல் தலாய் லாமா ==
[[File:Gushi Khan Fresco.jpg|thumb|right|150px|குஷி/குஷ்ரி கான் (1582–1655)]]
பத்மா டோர்ஜே என்ற இயற்பெயருடைய முதல் தலாய் லாமா 7 வயது வரை மேய்ப்பானாக வளர்ந்தார். 1405ல் நார்தங் புத்த மடத்தில் சேர்ந்து அம்மடத்தின் தலைமை புத்த ஆசானிடம் முன்னிலையில் தன் முதல் உறுதிமொழியை செய்தார். 20 வயதாகும் போது புத்த மத கோட்பாடுகளை நன்கு கற்றுணர்ந்ததால் அவருக்கு "கெடுங் ட்ருப்" (கெண்டுன் ட்ரப்) என்ற பெயர் சூட்டப்பட்டு முழு புத்த துறவி ஆனார்<ref name="thubten75">Thubten Samphel and Tendar (2004), p. 75.</ref>. அவ்வயதில் சிறந்த ஆசானான இட்ஜோங்க்பாவிடம் மாணவனாக சேர்ந்தார் ,<ref>Farrer-Halls, Gill. ''World of the Dalai Lama''. Quest Books: 1998. p. 77</ref>. இவர் இட்ஜோங்க்பாவின் அண்ணன் மகன் என்றும் சிலர் சொல்லுகிறார்கள் <ref name="Tibet p. 35">Thubten Samphel and Tendar (2004), p.35.</ref>. இவருக்கு அரசியல் அதிகாரம் எதுவும் கிடையாது. அதை சிவப்பு தொப்பி புத்த மத பிரிவு, மங்கோலிய கான்களிடம் இருந்தது.
இந்த புதிய மதப்பிரிவின் ஆதி குருவான இட்ஜோங்க்பா தனது அண்ணன் மகனான "கெடுங்ட்ராப்" (கெண்டுன் ட்ரப்) என்பவரை மதக்கோட்பாடுகளுக்கேற்ப வளர்த்து வந்தார். அவரை இட்ஜோங்க்பா மரணத்தறுவாயில் மஞ்சள் புத்த சமயத்தின் மதகுருவாக தலைமைப் பீடத்தில் அமர்த்தினார். அந்த மதகுருதான் முதல் தலாய் லாமா(மஞ்சள் புத்தமதத் தலைவர்) என அங்கீகரிக்கபட்டார். கி பி 1391 முதல் 1474 ஆம் ஆண்டு வரை இருந்த முதல் தலாய் லாமாவை சீனாவை ஆண்ட அரச குடும்பங்களும் அங்கீகரித்தன.
 
இவர் தாசிகும்போ (Tashilhunpo) என்ற மடத்தை நிறுவினார். இறக்கும் வரை இதுவே இவரின் வசிப்பிடமாகவும் இருந்தது. இது தற்போது பஞ்சென் லாமாக்களின் இருப்பிடமாக உள்ளது.
 
==பஞ்சென் லாமா==
வரி 134 ⟶ 143:
| 13. || துப்டென் க்யட்சோ(1876-1933) || [[File:BMR.86.1.23.3-O-1- cropped.jpg|60px]] || 1878 || 1879
|-
| 14. || [[டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா|டென்சின் கியாட்சோ]] (1935-தற்போது) || [[File:Tenzin Gyatzo foto 1.jpg|60px]] || 1937 || 1950 (தற்போது நாடு கடத்தப்பட்டுகடந்து வாழ்கிறார்)
|}
 
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது