"கீவ் சண்டை (1941)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,912 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{underconstruction}} {{Infobox military conflict | conflict = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{போர்த்தகவல்சட்டம் பர்பரோசா நடவடிக்கை}}
 
'''கீவ் சண்டை''' (''Battle of Kiev'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையில்]] [[சோவியத் ஒன்றியம்]], [[நாசி ஜெர்மனி]] இடையே நடைபெற்ற ஒரு படை மோதல். ஆகஸ்ட் 23 - செப்டம்பர் 26, 2011 காலகட்டத்தில் நடைபெற்ற இச்சண்டை [[பர்பரோசா நடவடிக்கை]]யின் பகுதியாகும். ஜெர்மனியப் படைகளுக்கு பெருவெற்றியாக முடிந்த இது, போர் வரலாற்றில் மாபெரும் சுற்றிவளைப்புச் சண்டையாகக் கருதப்படுகிறது. சோவியத் போர்வரலாற்றுத் தரவுகளில் இது கீவ் பாதுகாவர் நடவடிக்கை (''Kiev Defensive Operation. Киевская оборонительная операция'') என்றழைக்கப்படுகிறது.
 
ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று [[ஆர்மி குரூப் (படைப்பிரிவு)|ஆர்மி குரூப்புகளாக]] ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் தெற்கு ஆர்மி குரூப் [[உக்ரைன்]] பகுதியைத் தாக்கியது. முதலிரு மாதங்கள் இதன் முன்னேறறம் மந்தமாக இருந்தது. ஆகஸ்ட் முதல்வாரம் ஆர்மி குரூப் நடுவிலிருந்து பல கவசப் படைப்பிரிவுகள் தெற்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டன. இதனால் மீண்டும் வேகமாக முன்னேறிய ஜெர்மானியப் படைகள் ஆகஸ்ட் பின்பகுதியில் உக்ரைன் தலைநகர் [[கீவ்]] வரை முன்னேறி விட்டன. இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சோவியத் தென்மேற்குக் களம் படைப்பிரிவினை கீவ் நகர் அருகே சுற்றி வளைக்க ஜெர்மானியப் படைகள் முயன்றன. வடக்கிலிருந்து 2வது பான்சர்குரூப்பும், 2வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மியும்]] தென்கிழக்கிலிருந்து தெற்கு ஆர்மி குரூப்பும் கிடுக்கியின் இரு கரங்களாக செயல்பட்டு சோவியத் படைகளை சுற்றி வளைத்தன. ஜெர்மானியப் படைவளையத்துக்குள் சுமார் ஏழு லட்சம் சோவியத் வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
 
==குறிப்புகள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1067423" இருந்து மீள்விக்கப்பட்டது