பெரும் பொருளியல் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
==மீட்பு நடவடிக்கைகள்==
ஹூவர் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1932-ஆம் ஆண்டு ஹூவரால் அமைக்கப்பட்ட புணரமைப்பு நிதி நிறுவனம், வங்கிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கடனுதவி அளிக்க முன்வந்தது. இம்முயற்சி உடனடியானத் தீர்வைத் தராத காரணத்தால் ஹூவரின் ஆட்சியின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
 
1932 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இப்பெரும் பொருளியல் வீழ்ச்சியை சரிசெய்வதாக உறுதியளித்தார். இதனால் தேர்தலில் வெற்றிபெற்று 1933, மார்ச்சு 4 ஆம் நாள் அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.
 
==புதிய பயனுரிமைக் கொள்கை==
பெரும் பொருளியல் வீழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் புதிய பயனுரிமைக் கொள்கை(New Deal) என்ற புதிய சீரமைப்புக் கொள்கையை உருவாக்கினார். இது உதவி மீட்பு சீர்திருத்தம் என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
 
===புதிய சீரமைப்புத் திட்டச் செயல்பாடுகள்===
# புதிய சீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இயற்கை வளத்தைக் கொண்டு தொழிற்பெருக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் விவசாயத்தை ஊக்குவிப்பது ஆகும். அதன் படி அணைகள் கட்டுதல் மினுற்பத்தி செய்தல், கப்பல் போக்குவரத்துக்கு வழி வகுத்தல், வெள்ளத்தடுப்புப் பணிகளில் ஈடுபடுதல், மண்வளத்தைப் பாதுகாத்தல், வனவளப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்றவை மேம்படுத்தப்பட்டன.
# கூட்டாட்சி அவசர நிவாரண் நிர்வாகம்(Federal Emergency Relief Administration)மூலம் ஐநூறு மில்லியன் டாலர்கள் மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
# கூட்டாட்சி ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) அமைக்கப்பட்டு வங்கி நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.
# பாதுகாப்பு பரிவர்த்தனைச் சட்டம்(The Security Exchange Act) மூலம் பங்குச் சந்தையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
# தேசியத் தொழில் மீட்புச் சட்டம் (The Natioanal Industrial Recovery Act) கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளில் சம்பள உயர்வு, பணிநேரக் குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
# வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் அரசு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க வகை ஏற்பட்டது. இம்மானியம் அவர்கள் உற்பத்தி செய்யும் தானியத்தின் அளவைக் குறைத்ஹ்டு விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
 
==விளைவுகள்==
புதிய பயனுரிமைச் சட்டத்தின் ஒரு சில திட்டங்களைத் தவிர மற்ற அனைத்தும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்தன. மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்தன. பொருளாதார மேன்மைக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.
 
புதிய பயனுரிமைச் சட்டத்தின் சில திட்டங்களான முதலாளி தொழிலாளி கூட்டுப் பேச்சு வார்த்ஹ்டை, பங்கு பரிவர்த்தனை முறைப்படுத்துதல் மற்ரும் வேலை நேரக்கட்டுப்பாடுகள் முதலியன் இன்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன. இந்தப் பயனுரிமைத் திட்டம் உலக நாடுகளின் நீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. இதன் விளைவால் மீண்டும்1940 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_பொருளியல்_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது