"அன்னை பூபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

584 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (+விரிவு)
அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் ''அன்னம்மா டேவிட்'' தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு [[பெப்ரவரி 16]] ஆம் நாள் [[அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயில்|அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில்]] அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
 
==அன்னைபூபதி போராட்டத்தில் குதிப்புபோராட்டம்==
இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை [[மார்ச் 19]] [[1988]] இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய [[இராணுவம்]] கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
 
அன்னை பூபதியின் நினைவுநாள் [[தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்]] என்றும் நினைவு கூறப்படுகிறது.
23,105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1089783" இருந்து மீள்விக்கப்பட்டது