மினெர்வா மேல் புனித மரியா கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: he:סנטה מריה סופרה מינרווה
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sk:Bazilika Panny Márie nad Minervou; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox religious building
| building_name=மினெர்வா மேல் புனித மரியா பெருங்கோவில்<br /> <small>{{lang|it|Basilica di Santa Maria sopra Minerva}} {{it icon}}<br />{{lang|la|Basilica Sanctae Mariae supra Minervam}} {{la icon}}</small>
| image= Roma-Santa Maria sopra Minerva.jpg
| caption= 19ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட கோவில் முகப்புத் தோற்றம்
வரிசை 36:
 
இக்கோவில் எழுகின்ற இடத்தில் பண்டைக்காலத்தில் ஐஸிஸ் என்னும் எகிப்திய தெய்வத்துக்கு ஒரு கோவில் இருந்தது. அக்கோவில் கிரேக்க-உரோமை தெய்வமாகிய மினெர்வாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகத் தவறாகக் கருதப்பட்டது. அக்கோவில் இருந்த இடத்திலேயே, [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவுக்குக்]] கோவில் எழுப்பப்பட்டதால் ''மினெர்வா மேல் புனித மரியா கோவில்'' என்னும் பெயர் தோன்றிற்று. இக்கோவிலின் முகப்பு பார்வைக்கு எளிமையாக இருந்தாலும், கோவிலின் உட்பகுதியில் விலைமதிப்பற்ற கலைச் செல்வங்கள் உள்ளன. சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களைப் பின்னணியாகக் கொண்ட உட்கூரையில், விண்மீன் குறிகள் பதித்த சித்திரங்கள் உள்ளன. கோத்திக் கலைப் பாணி 19ஆம் நூற்றாண்டில் இக்கோவிலில் புகுத்தப்பட்டது. உரோமை நகரில் கோத்திக் கலைப்பாணியில் அமைந்த ஒரே கோவில் இதுவே என்பதும் சிறப்பு.
[[Imageபடிமம்:Lazio Roma SMMinerva1 tango7174.jpg|thumb|left|மினெர்வா மேல் புனித மரியா கோவில் உள்பகுதியின் எழில்மிகு தோற்றம்]]
== கோவிலின் வரலாறு ==
 
இன்று மினெர்வா மேல் புனித மரியா கோவில் எழுகின்ற இடத்தைச் சூழ்ந்த பகுதியும், கோவிலை அடுத்த துறவியர் இல்லப் பகுதியும் முற்காலத்தில் உரோமை கலாச்சாரத்தைச் சார்ந்த மூன்று கோவில்களை உள்ளடக்கியிருந்தன. அக்கோவில்கள்:
வரிசை 48:
கி.பி. 1665இல் மரியா கோவிலுக்கு அருகிலுள்ள சாமிநாதர் சபைத் துறவியர் இல்லத் தோட்டத்தில் ஓர் எகிப்திய ஊசித்தூண் (obelisk) அகழ்ந்தெடுக்கப்பட்டது. பின்னர் மரியா கோவிலருகே மேலும் பல எகிப்திய ஊசித்தூண்கள் வெவ்வேறு காலங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நூற்றாண்டில் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு, இரண்டு இரண்டாக ஐஸிஸ் கோவில் நுழைவாயிலில் நாட்டப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
== மரியா கோவிலின் உள்பகுதி ==
 
மரியா கோவிலின் உள்ளே, அடிமட்டத்திற்குக் கீழ் பண்டைய உரோமைக் கலாச்சாரத் தடயங்கள் உள்ளன. உரோமை சமயக் கோவில்கள் அழிந்து கிடந்த நிலை [[சக்கரியா (திருத்தந்தை)|திருத்தந்தை சக்கரியா]] காலம் வரை (741-752) நீடித்தது. அவர் காலத்தில் இப்பகுதி கிறித்தவ மயமாக்கப்பட்டது. கீழைச் சபைத் துறவியரிடம் இப்பகுதி ஒப்படைக்கப்பட்டது. அத்திருத்தந்தை காலத்தில் எழுந்த கட்டடம் இன்று இல்லை.
 
[[நான்காம் அலக்சாண்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை நான்காம் அலக்சாண்டர்]] மரியா கோவில் பகுதியில் ஒரு துறவற இல்லத்தை 1255இல் நிறுவினார். கிறித்தவ சமயத்தைத் தழுவிய பெண்களுக்கென அவ்வில்லம் அமைந்தது. பின்னர் அத்துறவியர் சான் பங்கிராசியோ என்னும் பகுதிக்கு மாற்றப்பட்டனர். 1275இல் சாமிநாதர் சபைத் துறவியர் கோவிலையும் துறவற இல்லத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். இத்துறவியர் இக்கோவிலையும் துறவற இல்லத்தையும் தம் தலைமையிடமாக்கினர். பிற்காலத்தில் அவர்களின் தலைமையிடம் சாந்தா சபீனா என்னும் இடத்திற்கு மாறியது. மரியா கோவிலும் துறவற இல்லமும் இன்று சாமிநாதர் சபையினரின் பொறுப்பிலேயே உள்ளன.
[[Imageபடிமம்:Bernini-Elefant.jpg|thumb|left|மரியா கோவில் முற்றத்தில் உள்ள ஊசித்தூண். உரோமை நகரில் உள்ள எகிப்திய ஊசித்தூண்கள் பதினொன்றில் ஒன்றாகிய இத்தூணின் அடியில் ஜான் லொரேன்சோ பெர்னீனி உருவாக்கிய புகழ்பெற்ற யானை உருவம் உள்ளது]]
 
இன்று கோத்திக் கலைப் பாணியில் அமைந்துள்ள இந்த மரியா கோவில் கட்டடம் 1280இல் வடிவமைக்கப்பட்டது. [[மூன்றாம் நிக்கோலாஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் நிக்கோலாஸ்]] என்பவரின் ஆட்சிக் காலத்தில் எழுந்த இந்த கோத்திக் கட்டடம் சாமிநாதர் சபைத் துறவியரால் கட்டப்பட்டது. அச்சபையைச் சார்ந்த ஃப்ரா சிஸ்தோ ஃபியரென்டீனோ, ஃப்ரா ரிஸ்தோரோ தா காம்பி என்னும் திறமைவாய்ந்த இரு துறவியர் இக்கோவில் கட்டட வரைவை உருவாக்கியதாகத் தெரிகிறது. புளோரன்சு நகரில் சாமிநாதர் சபைப் பொறுப்பில் "புனித மரியா புதிய கோவில்" என்று சீரமைக்கப்பட்ட கோவிலின் அமைப்பை மாதிரியாகக் கொண்டு இத்துறவியர் "மினெர்வா மேல் மரியா கோவிலின்" வரைவை எழுதினர். உரோமையில் கட்டப்பட்ட முதல் கோத்திக் பாணிக் கோவில் என்னும் சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.
வரிசை 65:
1556இல் இக்கோவில் "இளம் பெருங்கோவில்" (minor basilica) நிலைக்கு உயர்த்தப்பட்டது.
 
== கோவிலின் வெளித் தோற்றம் ==
 
இக்கோவிலின் வெளித் தோற்றம் பரோக்கு கலைப்பாணியில் உள்ளது. இதை கார்லோ மதேர்னா 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடிவமைத்தார். பின்னர் "புது-நடுக்காலக் கலைப் பாணியில்" (neo-medieval style) வெளித் தோற்றம் திருத்தப்பட்டது. 16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் [[டைபர்]] ஆற்றில் வெள்ளம் எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை இக்கோவிலின் வெளி முகப்பில் பதிந்த அடையாளங்களிலிருந்து கணிக்க முடிகிறது. நீர் மட்டம் 65 அடி (20 மீட்டர்) உயர்ந்ததும் தெரிகிறது.
 
== யானை மீது ஊசித்தூண் ==
 
கோவிலின் வெளிமுற்றத்தில் அமைந்துள்ள விசித்திரமான ஒரு கலைப் பொருள் யானை மீது எழுகின்ற ஊசித்தூண் ஆகும். இதன் வரலாற்றில் சுவையான செய்திகள் உள்ளன. [[உரோமை]] நகர் முழுவதிலும் பதினொன்று எகிப்திய ஊசித்தூண்கள் உள்ளன. அவை அனைத்திலும் மிகச் சிறியது இதுவே. இத்தூணின் உயரம் 5.47 மீட்டர். தூணின் மேல் இணைப்பு, தூண் நிற்கின்ற யானை, அடித்தளம், அதன் கீழ் உள்ள நான்கு படிகள் ஆகிய அனைத்தையும் சேர்த்தால் 12.69 மீட்டர் ஆகும்.
வரிசை 79:
இந்த ஊசித்தூண் சிலைத்தொகுப்பு "மினெர்வாவின் கோழிக்குஞ்சு" (இத்தாலியம்: il pulcino di Minerva) என்றும் விளையாட்டாகக் குறிக்கப்படுவதுண்டு.
{{கிறித்தவக் கோவில்கள் (உரோமை)}}
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
வரிசை 102:
[[pt:Santa Maria sopra Minerva]]
[[ru:Санта-Мария-сопра-Минерва]]
[[sk:Bazilika SantaPanny MariaMárie sopranad MinervaMinervou]]
[[sv:Santa Maria sopra Minerva]]
[[uk:Санта Марія сопра Мінерва]]
"https://ta.wikipedia.org/wiki/மினெர்வா_மேல்_புனித_மரியா_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது