காசுமீரி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: ca:Caixmiri
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: nn:Kasjmiri; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 23:
'''காஷ்மீரி மொழி''' ஒரு வடமேற்கு [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]]யாகும். இது, முக்கியமாக [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[ஜம்முவும் காஷ்மீரும்|ஜம்மு காஷ்மீரின்]] காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படுகிறது. இம் மொழி பேசும் 4,611,000 தொகையினரில், 4,391,000 பேர் இந்தியாவிலும் மிகுதிப் பேர் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலும்]] உள்ளனர். [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக்]] குடும்பத்தின், இந்திய-ஆரியப் பிரிவைச் சேர்ந்த இந்த மொழி [[புவியியல்]] அடிப்படையிலான துணைக் குழுவான [[தார்டிக் மொழிகள்]] குழுவில் அடங்குகிறது. இது இந்தியாவின் அட்டவணைப் படுத்தப்பட்ட 23 மொழிகளுள் ஒன்றாகும்.
 
== எழுத்து வடிவம் ==
காஷ்மீரி ஒரு வினை இரண்டாவதாக வரும் சொல் ஒழுங்கு (V2 word order) கொண்ட ஒரு மொழியாகும். [[ஷாரதா எழுத்து முறை]]யில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் இருந்தபோதும் காஷ்மீரி மொழி அண்மைக்காலம் வரை பேச்சு மொழியாகவே இருந்தது. பின்னர் இது [[பார்சிய-அரபி எழுத்து]]க்களில் எழுதப்பட்டது. தற்போது இம்மொழி, பார்சிய-அரபியில் அல்லது [[தேவநாகரி]] எழுத்தில் எழுதப்பட்டு வருகிறது. எழுதும் போது உயிர் எழுத்துக்களை எப்பொழுதும் பயன்படுத்துவதனால், பார்சிய-அரபியில் எழுதப்படும் மொழிகளுள் காஷ்மீரி தனித்துவமானது ஆகும்.
 
== மொழிப் பயன்பாடு ==
பல்வேறு அரசியற் காரணங்களினாலும் போதிய கல்வி வசதிகள் இல்லாமையாலும் காஷ்மீரி மொழிக் கல்வி பெரிதும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. இதனைப் பேசுவோர் தொகையும் குறைந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உத்தியோக மொழி காஷ்மீரி அல்ல என்பதும், இத் தகுதியை [[உருது மொழி]]யே பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. காஷ்மீரி பேசுவோரிற் சிலர் இரண்டாவது மொழியாக [[ஆங்கிலம்]] அல்லது [[ஹிந்தி]]யைப் பயன்படுத்துகின்றனர். கடந்த சில பத்தாண்டுகளாக காஷ்மீரி மொழி இப் பகுதியிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது [[பாடசாலை]]களுக்கான [[பாடத் திட்டம்|பாடத் திட்டங்களிலும்]] இதனைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
 
== இலக்கியம் ==
ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் என்பவர், 1919 ஆம் ஆண்டில் எழுதும்போது, தார்டிக் மொழிகளில் காஷ்மீரி மட்டுமே இலக்கியத்தைக் கொண்ட மொழி என்று குறிப்பிட்டார். காஷ்மீரி மொழியில் காணப்படும் [[இலக்கியம்|இலக்கியங்கள்]] சுமார் 750 ஆண்டுகள் வரை பழமையானவை. இதுவே ஆங்கிலம் உள்ளிட்ட பல நவீன மொழி இலக்கியங்களின் வயதாக உள்ளது.
 
== வெளியிணைப்புகள் ==
{{InterWiki|code=ks}}
* கிரியர்சன், ஜார்ஜ் ஆபிரகாம். [http://dsal.uchicago.edu/dictionaries/grierson/ ஒரு காஷ்மீரி மொழி அகரமுதலி.] கல்கத்தா: வங்காள ஆசிய சங்கம், 1932. {{ஆ}}
வரிசை 43:
* [http://www.Dunwoodypress.com/ ''நவீன காஷ்மீரி இலக்கணம்'' - ஓம்கார் என் கௌல், காஷி வாலி ஆகியோர்] ஸ்பிரிங்ஃபோல்ட்: டன்வூடி பதிப்பகம், 2006. {{ஆ}}
* [http://www.iils.org/ ''பேச்சுக் காஷ்மீரி: ஒரு மொழிப் பாடநெறி'' - ஓம்கார் என் கௌல்] டெல்லி: மொழி ஆய்வுக்கான இந்திய நிறுவனம், 2006. {{ஆ}}
 
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
வரி 85 ⟶ 84:
[[ms:Bahasa Kashmir]]
[[nl:Kasjmiri]]
[[nn:Kasjmiri]]
[[no:Kasjmiri]]
[[pl:Język kaszmirski]]
"https://ta.wikipedia.org/wiki/காசுமீரி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது