இருமுனையப் பிறழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: *திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 15:
}}
'''இருமுனையப் பிறழ்வு ''' (''Bipolar disorder'' அல்லது ''bipolar affective disorder'') அல்லது '''இருதுருவக் கோளாறு''' என்பது '''கிளர்ச்சி-சோர்வு கோளாறான''' ஓர் [[உளநோயியல்|உளநோய்]] ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[பித்து|அதீத உற்சாக நிலை]] நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட [[மனத்தளர்ச்சி|சோர்வு]] நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது இருமுனையப் பிறழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை [[பித்து]] என அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிக உயர்ந்த மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு. சில நேரங்களில் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் ''கலந்த உணர்நிலை''யிலும் அவர்கள் இருக்கலாம். {{sfn|Basco|2005| p=viii}} இத்தகைய இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே "வழமையான" உணர்நிலைகளிலும் இருப்பர்; ஆனால், சில நபர்களுக்கு தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் - இது ''விரைவுச் சுழற்சி'' எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும். இந்த மனக்கோளாறை உணர்நிலை மாற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருமுனையம் I, இருமுனையம் II, சைக்ளோதைமியா என்ற பிற துணை பகுப்புகளில் வகைப்படுத்துகின்றனர். இவை அனைத்துமே ''இருமுனையக் கற்றை'' (bipolar spectrum) எனப்படுகிறது.
 
== அறிகுறிகள் ==
இந்தக் கோளாறு உள்ளவர்களின் மூளை உயர் ஆற்றல் நிலையில் இருக்கும். அல்லது மிகக் குறைந்த ஆற்றல் நிலையில் இருக்கும். இரு முனையம் என்பது மூளையின் இந்த இரு தீவிரநிலைகளையேக் குறிக்கிறது. மூளை உயர்ந்த நிலையில் இருக்கும்போது உணர்ச்சிகள் தீவிரமாக இருக்கின்றன; பயம், மகிழ்ச்சி போன்றவை கடுமையாக உணரப்படும். இந்த நிலையில், பித்து, இருக்கும்போது தங்களுக்கான தெரிவுகளை சிந்தித்து செயலாற்றும் பொறுமை இருக்காது; பிறருக்கு கொடை அளிப்பதோ பணத்தைச் செலவழிப்பதோ இயல்புக்கு மாறாக இருக்கும். எது உண்மை எது மனத்தோற்றம் என்று பிரிக்க முடியாத நிலையில் இருப்பர். வெகுண்டெழும்போதும் வன்முறையில் இறங்குவர்; இருப்பினும் இது பொதுவான கருத்துக்கு மாறாக அடிக்கடி நிகழ்வதில்லை.
 
மேலும் பித்து பிடித்தவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நேர்மறை நோக்குடனும் காணப்படுவர்.இதனால் பெரும் தீவாய்ப்புள்ள செயல்களில் இறங்குவர். பணம் இல்லாதபோதும் நிறைய தங்களிடம் இருப்பதாக எண்ணுவர். இறந்தவர்களை உயிருடன் இருப்பதாக எண்ணிச் செயல்படுவர். மிகவும் உரக்கவும் விரைவாகவும் பேசுவர். இவை எல்லாமே ஒருவரிடம் காணப்படத் தேவையில்லை; உள நோயில் ஒவ்வொருவருமே வெவ்வேறானவர்கள்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/இருமுனையப்_பிறழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது