எயித்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பின் புலம்: *விரிவாக்கம் தொடரும்...
சி →‎பின்புலம்: *திருத்தம்*
வரிசை 24:
'''எயித்தியப் புரட்சி ''' அல்லது '''ஹைட்டியின் புரட்சி''' (''Haitian Revolution'', 1791–1804) [[பிரான்சு|பிரெஞ்சுக்]] [[குடியேற்ற நாடு|குடியேற்ற நாடான]] [[செயிண்ட் டொமிங்கு]]வில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டதுடன் [[எயிட்டி]] [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்களால்]] ஆளப்பட்ட முதல் [[குடியரசு|குடியரசாக]] மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சி யாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் [[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களின்]] எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது.
==பின்புலம்==
[[கரிபியன்|கரிபியன் தீவுகளின்]] செல்வச்செழிப்பு ஐரோப்பிய [[சர்க்கரை]]த் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த [[கரும்பு]]த் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.<ref name="Thomas E. Weil 1985">Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, ''Haiti: A Country Study''. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).</ref> 1730களில் பிரெஞ்சு பொறியாளர்கள் சிக்கலான [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசன]] அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் [[ஜமைக்கா]]வும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆபிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விட பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர். <ref name="brief">{{cite book|first=Jan|last=Rogozinski|year=1999|title=A Brief History of the Caribbean|edition=Revised|publisher=Facts on File|location=New York|pages=85, 116–117, 164–165|isbn=0-8160-3811-2}}</ref><ref name="kreyol-004">{{cite web|url= http://www.kreyol.com/history004.html|title=The Slave Rebellion of 1791|accessdate=27 November 2006}}</ref>இதனால் அடித்து கொடுமைப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் [[பதினான்காம் லூயி]] இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ''கோட் நாய்ர்'' என்ற ''கருப்பு விதியை'' கொணர்ந்தார். ஆனால் இதனை தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர். <ref name="Laurent Dubois 2004">Laurent Dubois, ''Avengers of the New World: The Story of the Haitian Revolution''. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).</ref>
 
==பின் விளைவுகள்==
புதிய குடியரசு உருவானபோதும் சமூகத்தில் பிரெஞ்சுக் குடியேற்றவாத ஆட்சியில் நிறுவப்பட்ட நெறிமுறைகளின் தாக்கம் தொடர்ந்தது. பல தோட்ட உரிமையாளர்கள் ஆபிரிக்க அடிமை மனைவியரால் பெறப்பட்ட கலப்பின சிறுவர்களுக்கு கல்வியும் படைப்பயிற்சியும் வழங்கியிருந்தமையால் ''முலட்டோக்கள்'' என்றழைக்கப்பட்ட இந்த கலப்பினத்தவர்கள் புரட்சிக்குப் பிந்தைய ஆட்சியில் சீர்மிகுந்தவர்களாக விளங்கினர். போர் முடிவடைந்த சமயத்தில் இவர்களில் பலரும் தங்கள் சமூக நிலையால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தனர். இவர்கள் அடிமைகளோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாது தங்களுக்குள்ளேயே வட்டம் அமைத்துக் கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/எயித்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது