சலாகுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
== நன்மதிப்பும் நற்பெயரும் ==
சலாகுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். தீவிரமான [[சன்னி இசுலாம்]] முறையைப் பின்பற்றிய இவர், மற்ற மதத்தினரையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்குப் பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களைத் தவிர மற்ற எவரையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களைத் தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். மீறி போர் செய்து அவர்கள் பிடிபட்ட பின்பும் கூட அவர்களைத் துன்புறுத்தவோ, சிறையில் அடைக்கவோ இல்லை. மாறாக அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி செல்ல அனுமதித்தார். [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரிலேயே அவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார். மேலும் இவரின் எதிரிகள் [[இஸ்லாம்|இசுலாமியர்களைத்]] தாக்கியபொழுதும்கூட, இவர் கிறித்தவர்களைத் தாக்கியதில்லை.
 
இவ்வாறு இவரது குணநலன்கள் அரேபியர்கள் மட்டும் அல்லாது ஐரோப்பியர்களையும் ஈர்த்தது. ஐரோப்பிய கிறித்தவர்கள் மத்தியில் ரிச்சர்ட்டை விட சலாகுத்தீன் அதிகம் பிரபலமானார். மேலும் ரிச்சர்ட்டும் சலாவுத்தீனும் தங்களுக்கு இடையே பல பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். இருப்பினும் இவர்கள் இருவரும் கடைசிவரை ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/சலாகுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது