ஈஸ்டர் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: yo:Erékùṣù Àjínde
வரிசை 121:
 
ஒவ்வொரு முறையும் இச்சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது. மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். உணவுப் பற்றாக்குறையால் ஒருவரோடொருவர் சண்டையிட்டு இறந்தார்கள். கூடவே மோவாய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது. எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேக்கப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். இதனைத் தொடர்ந்து அடிமை வணிகத்திற்காக தீவுவாசிகளை பிடித்துக்கொண்டு போனார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் ஒரு சிலர் தப்பி வந்தனர். அவர்கள் மூலமாக [[சின்னம்மை]] போன்ற தொற்றுநோய்கள் பரவின. இது போன்ற நோய்களுக்கு எதிர்ப்புர்த் திறன் கொண்டிராத தீவுவாசிகள் இவற்றுக்கு எளிதில் பலியானார்கள்.
 
உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஈஸ்டர் தீவும் ஒன்று .
ஈஸ்டர் தீவா ? அது எங்கே இருக்கிறது ?
 
பசிபிக் சமுத்திரத்தில் சிலி என்னும் நாட்டிற்கு மேற்கே 2200 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒதுக்கு புறமான தீவாகும் இது. 1722 ஆம் ஆண்டு ஈஸ்டர் திருநாளன்று ஒலாந்தரால் இத்தீவு கண்டுபிடிக்கபட்டது . இதனால் இத்தீவிற்கு ஈஸ்டர் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது.
 
இத்தீவின் பரப்பு 63 சதுர கி.மீ என்று கணக்கிடப்பட்டுள்ளது. சரி இத்தீவில் அப்படி என்னதான் மர்மம் காணப்படுகிறது ?
இத்தீவில் 887 மனித உருவச்சிலைகள் அமைந்துள்ளது . இவை அனைத்தும் தீவின் மத்தியப் பகுதியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரம் சுமார் 10 முதல் 40 அடி வரை காணப்படுகிறது. அதிக பட்சம் சிலை ஒன்றின் எடை 5 டன் வரை உள்ளதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு சிலையும் இடுப்பளவே செதுக்கப்பட்டுள்ளது .
 
 
இதனை மனித உருவச் சிலைகளை ஏன் செய்தார்கள் ? அதனை எதற்காக இங்கே வருசையாக நிற்க வைத்தனர் ? இதற்கான உண்மையான காரணம் என்ன ?
இதற்கான சரியான விடை இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டும் வருகின்றன . ஆனாலும் யூகத்தின் அடிப்படையிலான கணிப்புகளை மட்டுமே அவர்களால் வெளியிட முடிந்துள்ளன.
 
இது குறித்து பல தொல்பொருள் ஆய்வாளர்கள் என்ன மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் தெரியுமா ?
கி.பி 400 ஆம் ஆண்டில் போளிநேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் கடலில் காணப்பட்ட மின்னோட்டம் காரணமாக தவறுதலாக இந்த தீவிற்கு வந்துள்ளனர் . அதன் பின்னர்தான் அவர்களால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே வேறு வழியின்றி இத்தீவிலே நிரந்தரமாக தங்கிட நேர்ந்தது என்று கருதுகின்றனர்.
 
ஈஸ்டர் தீவின் மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்திருக்கின்றனர் . அவர்கள் வற்றாளை கிழங்கு என்ற ஒரு வகை கிழங்கையே உணவாக பயன் படுத்தியுள்ளனர். இது அமெரிக்காவில் தான் காணப்படுகின்றது இது எவ்வாறு இத்தீவிற்கு வந்ததென்று தெரியவில்லை .
 
 
ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் ஆண்டு கொண்டிருந்த பொழுது இத்தீவிற்க்கும் வந்து சேர்ந்தனர் . அப்பொழுது இங்கே வசித்தவர்கள் அநேகமாக இறந்து விட்டதாக கருதப்படுகின்றது . இது குறித்து உண்மைத்தகவல்கள் தெரியவில்லை.
இங்கு காணப்படும் மனிதச் சிலைகள் அனைத்திலும் காதுகள் நீண்டதாக தெரிகிறது. பாலினேசியர்கள் இடையே இரண்டு குழுக்கள் இருந்தன. ஒரு குழுவில் இருந்தவர்களின் காதுகள் நீண்டதாகவும், மற்ற குழுவில் இருந்தவர்களின் காதுகள் சிறியதாகவும் காணப்பட்டன. நீண்ட காதுகளை உடையவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று அழைத்துக் கொண்டனர். அவர்களே ஆட்சியும் செய்தனர் அவர்கள் மற்றவர்களை அடக்கி அடிமையாக நடத்தினர்.
 
அதிகாரத்தில் உள்ளர்வர்களது உருவங்களை அடிமைகள் சிலைகளாக செதுக்க கட்டளையிட்டனர். இதனால் தான் இங்குள்ள அனைத்துச் சிலைகளும் காதுகள் நீண்டதாக உள்ளது என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் எரிமலை அடிவாரத்தில் செதுக்கப்பட்டன என்றும் அவை கயிறு கொண்டு 150 அடிமைகளின் உதவியால் கொண்டுவர பட்டுள்ளன என்றும் தெரிவிகின்றது. இங்கு கயிறாக ஒரு வகை புற்கள் பயன்பட்டுள்ளன. இச்சிலைகளை தீவிற்கு கொண்டு வர ஒரு மாத காலம் ஆகி இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள் .
 
சுருக்கமாக சொல்லப்போனால் இச்சிலைகளை செய்ய அத்தீவில் உள்ள அனைவரின் உழைப்பும் தேவைப்பட்டிருக்க வேண்டும். இத்தீவில் உள்ள அனைவரும் சிலை வடிபதையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர் என்று தெளிவாக புலப்படுகின்றது.
 
எதற்காகச் சிலைகளை வடிப்பதை பற்றி மட்டுமே அவர்கள் கவலை பட்டிருக்க வேண்டும் ? தங்கள் உடல் உழைப்பை வேட்டையாடுதல்,மீன் பிடித்தல் போன்ற தங்கள் உணவுத் தேவைகளில் பயன்படுத்தாமல் இதற்காக மட்டுமே ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும் ?
அவர்களுக்கு தலைவராக இருந்தவர் அல்லது தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், இந்தச் சிலைகளை வடிக்குமாறு கடவுள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி இருக்க வேண்டும் . சிலைகள் வடிக்காமல் போனால் கடவுள் தண்டிப்பார் என்று பயமுருதிருக்க வேண்டும்.
 
 
இப்படித்தான் பல்வேறு ஆய்வாலர்கழலும் ஊகங்கள் அடிப்படையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் எதற்காக இத்தனை மனிதச் சிலைகளை இத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளன என்று இன்று வரை கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே இருக்கிறது. --[[பயனர்:Inbanila|Inbanila]] ([[பயனர் பேச்சு:Inbanila|பேச்சு]]) 10:40, 17 சூலை 2012 (UTC)inbanila --[[பயனர்:Inbanila|Inbanila]] ([[பயனர் பேச்சு:Inbanila|பேச்சு]]) 10:40, 17 சூலை 2012 (UTC)
 
தற்பொழுது இத்தீவில் மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் என்று கூறப்படுகின்றது .
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈஸ்டர்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது