பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ms:Polimorfisme (biologi)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
[[Image:Jaguar head shot.jpg|thumb|right|வெளிர்-உருவ [[ஜாகுவார்]] (இயல்புமாறாத் தோற்றம்)]]
[[Image:Black jaguar.jpg|thumb|right|கருமை-உருவ அல்லது கரியநிற ஜாகுவார் ([[தென்னமெரிக்கா]] விலுள்ள 6 % ஜாகுவார் இந்த வகையைச் சார்ந்தது)]]
[[உயிரியல்|உயிரியலில்]] '''பல்லுருத்தோற்றம்''' (''Polymorphism'')<ref>([[Classical Greek|Greek]]: ''πολύ'' = many, and ''μορφή'' = form, figure, silhouette)</ref> எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட [[இனம் (உயிரியல்)|இனத்தில்]], அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு [[தோற்றவமைப்பு]]க்கள் காணப்படுதல் ஆகும்.

ஓர் இனத்தின் எண்தொகையில் (population), அல்லது அவ்வினம் வாழ்கின்ற சேர்ந்திருப்பில் (colony) உள்ள உறுப்பினர்களிடையே, ஆண்-பெண் இனப்பெருக்கத்துக்குரிய [[பால் (உயிரியல்)|பாலின]] வேறுபாடுகள் தவிர்த்த, வேறுபட்ட தோற்றவமைப்புகள் காணப்படுதலே,
வரிசை 52:
பாலினமற்ற [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] (asexual reproduction) முறையிலிருந்து கூர்ப்படைந்தே பாலின இனப்பெருக்க (sexual reproduction) முறை உருவாகியது என நம்பப்படுகின்றது. பாலின இனப்பெருக்கத்திலும், [[அழிதூஉ|இருபால் உடலி]] இனப்பெருக்கத்திலும் (hermaphroditic reproduction) மீள்இணைதல் (recombination) மூலம், [[மரபியல் பல்வகைமை]] (genetic diversity) ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது<ref name="Smith 1998">Smith, John Maynard. 1998. ''Evolutionary Genetics'' (2nd ed.). Oxford: Oxford U. Pr.</ref>p234<ref>Gillespie J.G. 2004. ''Population genetics: a concise guide''. 2nd ed, Johns Hopkins University Press, Baltimore.</ref>ch7. இந்த காரணத்தால் அவை பாலினமற்ற இனப்பெருக்கத்தைவிட உயர்வானதாகக் கொள்ளப்படுகின்றது. ஆனால், இருபால் உடலியின் இனப்பெருக்கத்தை விடவும் பாலின இனப்பெருக்கம் எவ்வகையில் உயர்ந்தது என்பது இன்னமும் தெளிவற்று இருக்கின்றது. இருபால் உடலியில் ஒரேபால் மீளிணைதலும் நடக்கும் சாத்தியம் இருப்பதனால் அங்கேயே அதிகளவு மரபியல் பல்வகைமை ஏற்பட முடியும் என நம்பப்படுகின்றது.

பாலினமற்ற இனப்பெருக்கம் எளிமையானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கின்றது. இருபால் உடலி முறை இனப்பெருக்கம் அதிகளவு மரபியல் பல்வகைமையைத் தோற்றுவிக்கின்றது. அப்படியிருந்தும் முன்னேறிய இனங்கள் பாலின இனப்பெருக்கத்தைக் (ஆண், பெண் தனியாக உள்ள உயிரினங்கள்) கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. ஆண், பெண் என தனித்தனி பாலின தனியன்கள் இருக்கையில், ஆண்களில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு செல்வது அதிகமாக இருக்கும் வேளையில், பெண்களில் ஏற்கனவே இருக்கும் [[மரபணுவமைப்பு]] பேணப்படலாம் எனக் கூறப்படுகின்றது<ref>Geodakyan, V. A. 2000. Evolutionary chromosomes and evolutionary sex dimorphism. ''Biology Bulletin'' '''27''', 99–113.</ref>. இதன்மூலம் குறிப்பிட்ட இனத்தில் [[நோய்த்தொற்று]], தீங்கு விளைவிக்கும் [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]], [[கொன்றுண்ணல்|கொன்றுண்ணிகள்]] போன்றவற்றை எதிர்த்து வாழும் தன்மை கூடலாம் என நம்பப்படுகின்றது<ref>Fisher, Ronald. 1930. ''The {{sic|hide=y|Gen|etical}} Theory of Natural Selection''</ref><ref> Hamilton, W. D.]] 2002. ''Narrow Roads of Gene Land, Vol. 2: Evolution of Sex''. Oxford: Oxford U. Pr.</ref><ref name="Smith 1978">Smith, John Maynard. 1978. ''The Evolution of Sex''. Cambridge: Cambridge U. Pr.</ref>.

====எதிருரு பல்லுருத்தோற்றம் (Allelic polymorphism)====
வரிசை 77:
====சாதியமைப்பு (Caste system)====
[[படிமம்:Atta.cephalotes.gamut.selection.jpg|150px|thumb|left|[[எறும்பு|எறும்பில்]] பல்லுருத்தோற்றம்.
இடது: 7 உம் 'வேலையாள்', வலது: 2 உம் இராணி எறும்புகள்.]]
[[எறும்பு]], [[தேனீ]], [[கறையான்]], [[குளவி]] (wasp) போன்ற பூச்சியினங்களில் அவற்றின் தொழிலுக்கு இசைவான வெவ்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுகின்றன. இந்த தோற்றவமைப்புக்கள் உருவம், நடத்தை அடிப்படையிலும் சிறப்பான வேறுபாட்டைக் காட்டுகின்றன. இங்கே தோற்றவமைப்பு வேறுப்பாடானது மரபியலை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல், [[ஊட்டச்சத்து]] போன்ற சூழல் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

[[கருக்கட்டல்]] நடைபெறாத [[மடியநிலை#ஒருமடியம்|ஒருமடிய]] [[கருமுட்டை]] உயிரணுக்களில் இருந்து [[ஆண்]] [[பூச்சி]]களும், கருக்கட்டலுக்குட்பட்ட இருமடிய உயிரணுக்களில் இருந்து [[பெண்]] பூச்சிகளும் உருவாகும். பெண் பூச்சிகள் [[குடம்பி]]களாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப அவை இராணியாகவும், வேலையாள்/போராளிகள் பூச்சியாகவும் மாற்றமடையும்.

====வேறுபட்ட சூல்தண்டு (தம்பம்) உள்ள தன்மை (Heterostyly)====
[[Image:Distyly primula.jpg|thumb|right|150px|''Primula vulgaris'': '''A.Pin''', '''B.Thrum''' பூ நெடுக்கு வெட்டுத் தோற்றம்

1.அல்லிவட்டம், 2.புல்லிவட்டம், 3.மகரந்தக்கேசரம், 4.சூல்தண்டு (தம்பம்)]]
[[Image:Primrose_pinPrimrose pin.jpg|thumb|left|100px|right|''Primula vulgaris'' இன் '''Pin''' வகைப் [[பூ]]]]
[[Image:Primrose_thrumPrimrose thrum.JPG|thumb|left|100px|right|''Primula vulgaris'' இன் '''Thrum''' வகைப் பூ]]
[[தாவரவியல்|தாவரவியலில்]], இந்த 'வேறுபட்ட சூல்தண்டுள்ள தன்மை' பல்லுருத்தோற்றத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். வெவ்வேறு தோற்றவமைப்புக்களில் மகரந்தக்கேசரமும், சூலகமும், அதன் வெளிநீட்டமாக இருக்கும் சூல்தண்டும் (style) வேறுபட்ட விதங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் தன் [[மகரந்தச் சேர்க்கை]] தவிர்க்கப்பட்டு, அயன் மகரந்தச் சேர்க்கையைக் கூட்டுவதாகும். இதனால் தாவரப் பெருக்கம் அதிகரிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, Cowslip [[தாவரம்|தாவரத்தில்]] இரு வகையான [[பூ]]க்கள் கொண்ட [[தாவரம்|தாவரங்கள்]] உள்ளன.

அவற்றில் "pin" வகைத் தாவரத்தில், சூலகத்திலிருந்து வெளியேறும் சூல்தண்டு என்னும் நீண்ட பகுதி அல்லிவட்டத்திற்கு வெளியாக நீண்டு, அதன் நுனியிலுள்ள குறி/சூலகமுடிப் பகுதி வெளியே தெரியுமாறும், மகரந்தக் கேசரம் அல்லிவட்டக் குழாயின் உள்ளேயே பாதித் தூரத்தில் மறைந்த நிலையிலும் காணப்படும்.

"thrum" வகைத் தாவரங்களில், எதிர்மாறாக, மகரந்தக்கேசரம் நீண்டு அல்லிவட்டக் குழாய்க்கு வெளியாக அமைந்திருக்க, சூலகத்திலிருந்து வெளியேறும் சூல்தண்டுப் பகுதியும், அதன் நுனியில் இருக்கும் குறி/சூலகமுடிப் பகுதியும் அல்லிவட்டக் குழாயின் உள்ளே மறைந்திருக்கும்.

====தொழில் வேறுபாட்டிற்கான பல்லுருவமைப்புக்கள்====
வரி 100 ⟶ 96:

சில உயிரினங்களில், பொதுவாக Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த, தனியன்களின் [[வாழ்க்கை வட்டம்|வாழ்க்கைவட்டத்தின்]] வெவ்வேறு நிலைகளில், வேறுபட்ட தோற்றவமைப்புக்களைக் கொண்டிருக்கும் தன்மை காணப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, பல Hydrozoa தொகுதியிலுள்ள பல இனங்களில், ஒரு தனியன் தன் வாழ்க்கை வட்டத்தின் ஒருநிலையில் பாலினமற்ற தோற்றவமைப்பையும் (asexual phenotype), இன்னொரு நிலையில் [[பாலினம்|பாலினத்]] தோற்றவமைப்பையும் (sexual phenotype) மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றது. பாலினமற்ற தோற்றவமைப்பின் உருவமானது ஒரு குழாய் போன்ற அமைப்பின் உச்சியில் பல உணர்கொம்புகள் அமைந்திருப்பதுடன், அவை அசையாமல் ஓரிடத்தில் நிலையாக நிற்பனவாக இருக்கும். இவை '''Polyp''' என அழைக்கப்படும். இவற்றின் தொழில் முக்கியமாக உணவைப் பெற்றுக் கொள்ளலாகும். பாலின தோற்றவமைப்பின் உருவம் ஒரு [[குடை]] அல்லது மணி போன்ற அமைப்பின் உச்சியில் பல நகரிழைகளைக் கொண்டிருக்கும். இவை '''Medusa''' என அழைக்கப்படும். இவை நீரில் சுதந்திரமாக நீந்தித் திரிவதுடன், [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்]] தொழிலையும் செய்கின்றன. சில இனங்கள் Polyp எனப்படும் தனியாக பாலினமற்ற தோற்றவமைப்பையோ (எ.கா. [[பவளம்]], [[கடற் சாமந்தி]]), அல்லது Medusa எனப்படும் தனியாக பாலின தோற்றவமைப்பையோ (எ.கா. பெட்டி சொறிமுட்டை (Box jellyfish) எனப்படும் Cubozoa வகுப்பைச் சேர்ந்த [[சொறிமுட்டை|இழுதுமீன்/சொறிமுட்டை]]) மட்டுமே கொண்டிருப்பதுமுண்டு. உண்மையான சொறிமுட்டை (True jellyfish) என அழைக்கப்படும் Scyphozoa வகுப்பைச் சார்ந்த இழுதுமீன்கள் பொதுவாக Medusa தோற்றவமைப்பையே கொண்டிருக்கும்.

Hydrozoa விலுள்ள வேறு சில இனங்களில் மேலும் விருத்தியடைந்த பல்லுருத்தோற்றத்தைக் காணலாம். இவ்வினங்கள் உணவைப்பெற, பாதுகாப்பிற்காக, பாலினக் கலப்பில்லா இனப்பெருக்கம் (asexual reproduction), பாலினக் கலப்புள்ள இனப்பெருக்கம் (sexual reproduction), போன்ற வெவ்வேறு தொழில்களுக்கேற்ப தோற்றவமைப்புக்களைக் கொண்டிருக்கும்.

===மாறுகின்ற பல்லுருத்தோற்றம் (Transient Polymorphism) ===
வரி 128 ⟶ 122:
இதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது.

மரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையில் இருந்து, அதன்மூலம் [[பூச்சியுண்ணி|பூச்சியுண்ணும்]] [[பறவை]]களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்த தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் [[பூச்சி]]களிலோ, அல்லது [[பட்டாம்பூச்சி]]களிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை<ref name="Majerus 1998"/><ref name="Ford 1965">Ford, E. B. 1965. "Heterozygous Advantage". In ''Genetic Polymorphism''. Boston/London.: MIT Pr./Faber & Faber</ref><ref name="Majerus 1998"/><ref>Kettlewell H.B.D. 1973. ''The Evolution of Melanism''. Oxford: Oxford U. Pr.</ref>.

====சூழலுக்கேற்ற வேறுபாடு காட்டல் (Polyphenism)====
வரி 150 ⟶ 144:

[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]

[[cs:Genetický polymorfismus]]
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது