பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: be:Інжынерная справа
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 6:
 
== பெயர்க்காரணம் ==
பொறியியல் என்ற தமிழ்ச்சொல், "Engineering" என்பதற்கு இணையாக பயன்படுத்தும் ஒன்றாகும். பொறி (கருவிகள் ஆக்குவது, இயங்குவது பற்றியது)+அறிவியல் = பொறியியல். பொறியியல் என்னும் சொல் தமிழில் பயன்பாட்டுக்கு வருமுன்னர் யந்திரவியல், இயந்திரவியல், எந்திரவியல் போன்ற வடமொழி மூலங்களைக் கொண்ட சொற்களும் பயின்று வந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் அறிமுகமான "Engineering" என்ற ஆங்கிலச் சொல் "Engineer" என்பதிலிருந்தும், இது, இயந்திரம் என்று பொருள்படும் "Engine" என்னும் சொல்லிலிருந்து உருவானதே. இதன் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான "ingenium" என்பதாகும். "Engineer" என்பதைக் குறிக்கும் ''engineour'' என்னும் நடு ஆங்கிலச் சொல் 14 ஆவது நூற்றாண்டில் இருந்து ஆங்கில-பிரெஞ்ச் மொழிகளில் பயின்று வந்துள்ளது<ref > Oxford English Dictionary; Merriam Webster Dictonary [http://www.merriam-webster.com/dictionary/engineer] </ref>
 
== வரலாறு ==
வரிசை 28:
=== தற்காலம் ===
1800களில், [[அலெசாண்ட்ரோ வோல்ட்டா]] செய்த சோதனைகளும், [[மைக்கேல் பாரடே]], [[ஜார்ஜ் ஓம்]] ஆகியோரின் சோதனைகளும், 1872 இல் [[மின் மோட்டார்]] கண்டுபிடிக்கப்பட்டதும் [[மின் பொறியியல்]] துறையைத் தொடக்கி வைத்தன எனலாம். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் [[ஜேம்ஸ் மக்ஸ்வெல்]], [[ஹென்றிக் ஹேர்ட்ஸ்]] ஆகியோருடைய ஆய்வுகள், [[மின்னணுவியல்]] தொடக்கமாக விளங்கின. தொடர்ந்து வந்த காலங்களில் [[வெற்றிடக் குளாய்]], [[படிகப் பெருக்கி]] (transistor) போன்றவற்றின் கண்டுபிடிப்பு, [[மின் பொறியாளர்]]களினதும், [[மின்னணுப் பொறியாளர்]]களினதும் எண்ணிக்கையைக் கூட்டியது. அக்காலத்தில் இவர்கள் பிற துறைகளைச் சேர்ந்த பொறியாளரைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
 
 
தாமஸ் சவேரியினதும், ஸ்காட்டியப் பொறியாளரான [[ஜேம்ஸ் வாட்]]டினதும் கண்டுபிடிப்புக்கள் தற்கால [[இயந்திரப் பொறியியல்]] துறையின் தோற்றத்துக்குக் காரணமாகின. சிறப்புத் தன்மைகளைக் கொண்ட இயந்திரங்களினதும், அவற்றைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளினதும் வளர்ச்சி, இயந்திரப் பொறியியல், அதன் பிறப்பிடமான பிரித்தானியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வேகமாக வளர்வதற்குத் துணை செய்தன.
 
 
இயந்திரப் பொறியியலின் தற்கால வடிவம் பிரித்தானியாவில் தோன்றியதாகக் கொள்ளப்பட்டாலும், இது, மிகப் பழங்காலத்தில் படைத்துறை மற்றும் குடிசார் தேவைகளுக்குப் பொறிகள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். வரலாற்றில் மிகப்பழைய பொறிமுறைக் கணினி எனக் கருதப்படும் [[ஆன்டிக்கிதீரா பொறிமுறை]] (Antikythera mechanism), [[ஆக்கிமிடீஸ்|ஆக்கிமிடீசின்]] கண்டுபிடிப்புக்கள் போன்றவை பழங்கால இயந்திரப் பொறியியலுக்கான எடுத்துக் காட்டுகளாகும். சில் ஆக்கிமிடீசின் கண்டுபிடிப்புக்களுக்கும், ஆன்டிக்கிதீரா பொறிமுறைக்கும், இயந்திரப் பொறியியலின் இரண்டு முக்கிய கொள்கைகளான [[வேறுபாட்டுப் பல்லிணை]]கள் (differential gearing) அல்லது [[வெளிவட்டகப் பல்லிணை]]கள் (epicyclic gearing) தொடர்பிலான சிக்கலான அறிவு அவசியமாகும்.
 
 
[[வேதிப் பொறியியல்]] துறையும், 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சிக் காலத்தின்போதே உருவானது. பெரும் அளவிலான உற்பத்திகளுக்கு புதிய பொருட்களும், வழிமுறைகளும் தேவைப்பட்டன. 1880 ஆம் ஆண்டளவில், வேதிப்பொருட்களுக்கு இருந்த தேவைகள் அதிகமாக இருந்ததால், பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி வேதிப்பொருட்களைப் பெருமளவில் உருவாக்குவதற்கான புதிய தொழில் துறை தொடங்கியது. வேதிப் பொறியாளரின் பணி இவ்வாறான இயந்திரத் தொகுதிகளையும், வழிமுறைகளையும் வடிவமைப்பது ஆகும்.
 
 
[[வானூர்திப் பொறியியல்]], வானூர்திகளை வடிவமைப்பது, பேணுவது தொடர்பான துறை. அதேவேளை [[விண்வெளிப் பொறியியல்]], வானூர்திப் பொறியியலுக்கும் அப்பால் [[விண்கலம்|விண்கலங்களின்]] வடிவமைப்புக்களையும் உட்படுத்திய விரிவான துறையாகும். இத்துறைகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படக்கூடிய, சர் [[ஜார்ஜ் கேலே]] என்பவரின் பணிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தனவாயினும், இத்துறைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு மாறுகின்ற காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதே பொதுக் கருத்து. இத் துறைகள் தொடர்பான பழங்காலத்து அறிவு, அனுபவ வாயிலானது என்பதுடன், சில [[கருத்துரு]]க்களும், திறமைகளும் பிற பொறியியல் துறைகள் வழியாகப் பெறப்பட்டனவுமாகும். 1920களில் [[ரைட் சகோதரர்]]களின் வெற்றிகரமான வானூர்திப் பறப்பு நிகழ்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னரே, முதலாம் உலகப் போருக்கான படைத்துறை வானூர்திகள் தொடர்பில் இத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. அதே வேளை, [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலுடன்]] சோதனைகளையும் பயன்படுத்தி இத்துறைகளுக்கு அடிப்படையான அறிவியலை உருவாக்குவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வந்தன.
வரி 43 ⟶ 39:
== முக்கிய கிளைத்துறைகள் ==
* [[ஒருங்கியம்|ஒருங்கியப்]] பொறியியல் - Systems Engineering
* [[குடிசார் பொறியியல்]] - civil Engineering
* [[இயந்திரப் பொறியியல்]] - mechanical Engineering
* [[மின்பொறியியல்]] - Electrical Engineering
வரி 66 ⟶ 62:
== பொறியியல் வழிமுறை ==
பொறியியலாளர்கள் இயற்பியல் மற்றும் கணித அறிவியல்களை பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை காண்பதற்கு அல்லது நிலையை மேம்படுத்துவதற்கு பிரயோகிக்கிறார்கள். முன்னெப்போதையும் விட அதிகமாக, தற்போது பொறியியலாளர்கள் அவர்களுடைய வடிவமைப்பு திட்டங்களுக்கு தேவையான அறிவியல் அறிவை பெறவேண்டியுள்ளது. இதன் விளைவாக அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் புதிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
 
 
பல தெரிவுகள் இருக்கும் போது பொறியியலாளர்கள் பல்வேறு வடிவமைப்புத் தேர்வுகளில் அவற்றின் தரத்தை ஆழ்ந்து எண்ணிப்பார்த்து தேவைக்கு மிகப் பொருத்தமான தீர்வை தெரிவு செய்வார்கள். வெற்றிகரமான விளைவை பெறுவதற்கு வடிவமைப்பிலுள்ள தடைகளை அடையளம் கண்டு, புரிந்து கொண்டு விளக்குவது பொறியியலாளரின் முக்கியமான மற்றும் தனிப்பட்ட பணியாகும். ஏனெனில், பொதுவாக ஒரு தயாரிப்பு தொழிநுட்பரீதியாக வெற்றிகரமானதாக இருப்பதோடு மேலும் பல தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.
 
 
கிடைக்கின்ற வளங்கள், பௌதீக, கற்பனையான அல்லது தொழிநுட்ப குறைபாடுகள், எதிர்காலத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்கான நெகிழ்வுத்தன்மை இன்னும் ஏனைய காரணிகள்: அதாவது செலவு, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் சேவை வசதிகளுக்கான தேவைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம். பொறியியலாளர்கள் இவ்வாறான கட்டுப்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் எவ்வாறான பொருட்களின் உற்பத்தி பொருத்தமானது மற்றும் எவ்வாறான இயக்க அமைப்பு பொருத்தமானது என்பது தொடர்பான வரம்புகளை நிர்ணயிக்கிறார்கள்.
வரி 119 ⟶ 113:
 
== உசாத்துணைகள் ==
* Nigel Cross.'' Engineering Design Methods: Strategies for Product Design''. 2nd ed. Toronto: John Wiley & Sons, 1994.
* Martyn S. Ray. ''Elements of Engineering Design''. Toronto: Prentice Hall, 1985.
* John W. Priest. ''Engineering Design for Producibility and Reliability''. New York: Marcel Dekker, 1988.
 
வரி 127 ⟶ 121:
 
[[பகுப்பு:பொறியியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Ingenieurswese]]
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது