மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
==மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் முறைகள்==
*வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல்
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் மிதிவெடி அபயாத்தில் உள்ள மக்களை தனித்தனியே சந்திப்பதால் அவர்களுடைய பிரச்சினைகளை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டு அவர்களின் நடத்தை குணாதியங்களுக்கு ஏற்ப மிதிவெடி அபாயக் கல்வியை வழங்க இயலும்.
**இதில் உள்ள சிக்கல்கள் என்னவென்றால் பெரும்பாலும் ஆண்கள் உழைக்கபோய்விடுவதால் பெண்களே வீட்டில் உள்ளதால் பெண் மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுவிப்பாளர்களையே இதற்கு அனுப்புவது சிறந்தது. மிதிவெடி வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பெரிதும் ஆண்களே பாதிப்புக்குள்ளாகிறார்கள். மிதிவெடி அபாயக் கல்வியின்போது வீட்டில் உள்ள பெண்களிற்கு துண்டுப்பிரசுரம் போன்றவற்றை வழங்கி உங்கள் வீட்டுக்காரருக்குச் சொல்லுங்கள் என்று கூறினாலும் கூட இது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்று ஆய்ந்தறியப்படவில்லை. இம்முறையில் கூடுதலான மக்களைச் சந்திப்பது கடினமானது.
*மிதிவெடி அபாயக் கல்வி காட்சிகள்
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் அதிகமான மக்களை குறைந்த நேரத்தில் அணுக இயலும். இம்முறை பெரும்பாலும் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தயாரித்த திரைப்படத்துடன் மிதிவெடிகள் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்களுடன் சில சமயம் மிதிவெடித் தோட்டம் ஊடாகவும் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
**இதில் உள்ள சிக்கள் என்னவென்றால் இம்முறைமூலம் யார் யாருக்கு விளங்கியிருக்கிறது என்பதை உய்தறிவது கடினமானது. தவிர சீரான மின்சார இணைப்பைப் பெறுவதும் கடினமானது.
*சுவரொட்டிகள் - இதில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்கள் உள்ள சுவரொட்டி மிதிவெடி அபாயக் கல்வியை நடத்தும் அமைப்பின் தொலைபேசி இலக்கத்துடன் ஒட்டப்படும்.
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் இந்தச் சுவரொட்டிகள் எந்நேரமும் அங்கே இருக்கும் என்பதால் பிரயோசனமானது.
**இதில் உள்ள சில சிக்கல்கள் என்னவெறால் தொலைபேசி இலக்கங்கள் இருந்தாலும் அநேகமாக யுத்தம் நடந்த இடங்களில் இன்னமும் மின்சார வசதிகிடையாது ஆகவே [[தொலைபேசி]]யே [[நகர்பேசி]] வசதியோ கிடையாது.
 
மிதிவெடி அபாயக் கல்வி பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது.
 
==மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள்==
===மிதிவெடிகள்===
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது