நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: fa:یادمانی
வரிசை 10:
நினைவுச் சின்னங்கள் குறித்த சமூகக் கருத்து, பொருள் சிலவேளைகளில் ஒன்றுபோலவோ நிலையானதாகவோ தெளிவானதாகவோ இருப்பதில்லை. இவை வெவ்வேறு சமூகக் குழுக்களால் வெவ்வேறு நோக்கில் பார்க்கப்படுவது உண்டு. ஒரு பிரிவினருக்கு [[வெற்றி]]ச் சின்னமாக இருப்பது இன்னொரு பிரிவினருக்கு ஆக்கிரமிப்பின் சின்னமாக இருக்கக்கூடும். ஒரு குழுவினர் [[விடுதலை]]யின் சின்னமாகப் பார்ப்பதை வேறொரு குழுவினர் புது [[அடிமைத்தனம்|அடிமைத்தனத்தின்]] சின்னமாக உணரக்கூடும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]]ப் பின் [[பேர்லின்]] நகரைப் பிரித்து அமைக்கப்பட்ட [[பேர்லின் சுவர்]], [[கிழக்கு ஜேர்மனி]]யின் ஆதரவாளர்களால், மேற்குலக அரசியல் கோட்பாடுகளில் இருந்தான ஒரு பாதுகாப்புச் சுவராகப் பார்க்கப்படும்; அதேவேளை, [[மேற்கு நாடு]]களின் ஆதரவாளர்கள் அதனை ஒரு [[பாசிசம்|பாசிச]], [[அடக்குமுறை]]ச் சின்னமாகப் பார்க்கின்றனர். பண்டைக்காலத்தின் வியக்கத்தக்க [[கட்டிடக்கலை]]ச் சாதனையின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படும் எகிப்தின் [[பிரமிடு]]கள், [[தஞ்சைப் பெரிய கோயில்]] போன்றவற்றை அக்காலத்து அடிமை முறை, அடக்குமுறை போன்றவற்றின் சாட்சியங்களாகப் பார்க்கும் பிரிவினரும் உள்ளனர்.
 
[[படிமம்:Lenin Statue at Grutas Park.jpg|thumb|150px|இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு [[குருத்தாஸ் பூங்கா]] என்னும் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள லெனின் சிலை]]
நோக்கு வேறுபாடுகளின் காரணமாக, நாடுகளின் வெற்றி, தோல்வி; அரசியல் அதிகார மாற்றங்கள்; சமயங்களின் எழுச்சி, வீழ்ச்சி; கருத்தியல் மாற்றம் போன்றவை நினைவுச் சின்னங்களையும் பாதிக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதன் தந்தை எனக் கருதப்பட்ட லெனினின் சிலைகள் அழிக்கப்பட்டமை, வேறிடங்களுக்கு அகற்றப்பட்டமை, [[ஈராக்]]கில் [[சதாம் உசேன்|சதாம் உசைனின்]] தோல்வியின் பின் அவரது சிலைகள் உடைக்கப்பட்டமை. என்பன அரசியல் அதிகார மாற்றங்கள் தொடர்பானவை. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றாக இருந்த [[லித்துவேனியா]]வில் இவ்வாறு அகற்றப்பட்ட சோவியத் காலச் சிலைகளின் காட்சிக்காகவே [[குருத்தாஸ் பூங்கா]] (Grūtas Park) எனப்படும் தனியார் காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கே இவ்வாறான 86 சிலைகள் உள்ளதாக அறியப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/நினைவுச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது