பாறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bg:Скален цикъл
No edit summary
வரிசை 1:
'''பாறை வட்டம்''' (''Rock cycle'') என்பது [[நிலவியல்|நிலவியலின்]] அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது முதன்மையான மூன்று பாறை வகைகளாகிய [[தீப்பாறை]], [[படிவுப் பாறை]], [[உருமாறிய பாறை]] ஆகியவற்றிடையே எற்படுகின்ற இயங்கியல் மாற்றங்களை விளக்குகிறது. ஒவ்வொரு வகைப் பாறையும் அதன் சமநிலைச் சூழலிலிருந்து அகற்றப்படும்போது, அது மாற்றமடைகிறது அல்லது அழிந்துபோகிறது. சிலவகைப் [[பாறை|பாறைகள்]] வளிமண்டலத்துக்குக் கொண்டுவரப்படும் போது சிதைந்து அல்லது கரைந்து போகின்றன. பாறை வட்டம், நீர் வட்டம், [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] (plate tectonics) ஆகிய இயக்குவிசைகள் காரணமாக, புதிய சூழலை எதிர்கொள்ளும்போது, பாறைகளின் சமநிலை குலைந்து மாற்றமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
 
[[படிமம்:800px-Rock cycle nps ta.png|right|thumb|300px500px|''பாறை வட்டத்தை'' விளக்கும் ஒரு வரைபடம்.]]
 
== வரலாற்று வளர்ச்சி ==
வரிசை 8:
== பாறை வட்டம் ==
=== தீப்பாறைகளாக மாறுதல் ===
[[படிமம்:Rockcyc ta.png|thumb|300px500px|பாறை வட்டம் - USGS]]
[[பாறை|பாறைகள்]] புவி மேற்பரப்புக்குக் கீழே ஆழத்திற்குத் தள்ளப்படும்போது அவை உருகிக் [[கற்குழம்பு]] ஆகின்றன. மேற்படி கற்குழம்பு உருகிய திரவ நிலையில் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் இல்லாது போகும்போது, அது குளிர்ந்து திண்மமாகித் தீப் பாறையாக உருவாகும். இவ்வாறு புவிக்கடியில் உருவாகும் தீப் பாறைகள், ஊடுருவிய பாறைகள் (intrusive rocks) அல்லது [[பாதாளப் பாறைகள்]] (plutonic rocks) என அழைக்கப்படுகின்றன. இந்த நிகழ்முறையின் போது கற்குழம்பு மிக மெதுவாகவே குளிர்ந்து திண்மமாவதால், இவ்வாறு உருவாகும் பாறைகள் கரடுமுரடான (பெருப்பருக்கை = coarse-grained) பரப்புத்தோற்றம் (texture) கொண்டு அமைகின்றன. கற்குழம்பு, [[எரிமலை]] வெடிப்புப் போன்ற நிகழ்வுகள் காரணமாக வெளியேறி [[வளிமண்டலம்|வளிமண்டலத்துள்]] வரும்போது அது விரைவாகக் குளிர்ச்சியடைகிறது. இவ்வாறு உருவானவை [[தள்ளற் பாறைகள்]] (extrusive rocks) அல்லது [[எரிமலைப் பாறைகள்]] (volcanic rocks) எனப்படுகின்றன. இத்தகைய பாறைகள் கரடுமுரடற்ற (நுண்பருக்கை = fine-grained) அல்லது வளவளப்பான [[பரப்புத்தோற்றம்]] கொண்டவையாக உருவாகின்றன. சில சமயம் இக் கற்குழம்பு குளிர்தல் மிக வேகமாக நடைபெறுவதால் [[படிகம்|படிகங்களாக]] (crystals) உருவாக முடியாமல் [[இயற்கைக் கண்ணாடி|இயற்கைக் கண்ணாடியாக]] மாறுகிறது. மூன்று வகைப் பாறைகளில் எதுவும் உருகித் தீப்பாறையாக ஆகமுடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாறை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது