வாயுப் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: kk:Газ алмасуы, ru:Газообмен
No edit summary
வரிசை 4:
 
[[வளிமம்|வளிமப்]] பரிமாற்றம் என்பது பொதுவாக [[உயிரினம்|உயிரினங்கள்]] தம் உடலுக்கு வெளியே இருக்கும் காற்றிலிருந்து தம் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத [[வளிமம்|வளிமப்]] பொருளான [[பிராணவாயு|பிராணவாயுவை]] (உயிர்வளியை, ஆக்ஸிஜனை) உள்வாங்கி, தம் உடலில் இருந்து உண்டாகும் கழிவுப்பொருளாய் உள்ள கரியமிலவாயுவை வெளியேற்றும் ஒரு அடிப்படை நிகழ்வு ஆகும். இது ஒரு கண்ணறை (ஒரு செல்) உயிரினம் முதல் மாந்தன் வரையிலும் எல்லா உயிரினங்களிலும் நிகழ்கின்றது. எளிய உயிரினங்களாகிய ஒற்றைக் கண்ணறை (ஒரு செல் கொண்ட) உயிரினங்களில், இவ்வளிமப் பரிமாற்றமானது கண்ணறையைச் சூழ்ந்திருக்கும் ஊடுருவும் தன்மையுடைய மென்படலம் வழியாகவே நிகழ்கின்றது. ஆனால் மாந்தன் (மனிதன்), மற்றும் பிற [[பாலூட்டி]] [[விலங்கு]]களில் இந்த வளிமப் பரிமாற்றம் நிகழத் தனி உறுப்புகள் உள்ளன. மாந்தர்கள் மூச்சை உள் வாங்கும் பொழுது, வெளியில் இருந்து காற்றணுக்கள் மூக்கின் வழியாக நுழைந்து, [[மூச்சுக்குழாய்]] வழியாக மார்புப் பகுதியில் உள்ள நுரையீரல்கள் என்னும் பகுதியை அடைகின்றன. அங்கே மிக நுண்ணிய காற்றுப்பைகளில் உள்வாங்கிய காற்றில் உள்ள பிராணவாயு மெல்லிய அழுத்த வேறுபாடால் ஈர்க்கப் படுகின்றது. நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் காற்றழுத்தம் சற்றுக் குறைவாக இருக்கும். வெளியே இருக்கும் காற்றழுத்தம் 760 மில்லி மீட்டர் அளவு பாதரச உயரமானால், அதில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் (PO2) 160 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். ஆனால் நுரையீரலின் நுண்ணறையில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் 100 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். எனவே உள்ளிழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராணவாயுவானது நுரையீரலின் நுண்ணறையை ஒட்டிக்கொண்டு ஓடும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்களில் குழாய்ச்சுவர் வழியாக ஊடுருவி இரத்ததில் கலக்கின்றது. அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கரியமிலவாயு - CO<sub>2</sub> (கரிமக்காடி, கார்பன்-டை-ஆக்ஸைடு) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது. பின்னர் மூச்சை வெளி விடும்பொழுது இந்த கரியமிலவாயு வெளியேற்றப்படுகின்றது. இப்படி பிராணவாயுவை ஏற்றுக் கொண்டு கரியமிலவாயுவை வெளியேற்றுவது வளிமப்பரிமாற்றம் எனப்படும்.
 
==மேலும் பார்க்க==
* [[மூச்சுவிடல்]]
* [[மூச்சியக்கம்]]
* [[உயிரணு ஆற்றல் பரிமாற்றம்]]
* [[சுவாசக் கட்டுப்பாடு]]
* [[வளிமப் பரிமாற்றம்]]
 
 
[[பகுப்பு:மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/வாயுப்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது