மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *உரை திருத்தம்*
*பகுதிவாரியாக விரிவாக்கம்*
வரிசை 46:
தொழிலைக் குறிக்கும் விதமான பெயர்களும் இடப்படுவதுண்டு. குறிப்பிடத்தக்கவை பாட்டீல் (கிராமத் தலைவர்), தேஷ்முக் (சில கிராமங்களுக்குத் தலைவர்), இனம்தர், தனேகர், குல்கர்னி (கிராம கணக்கர்), ஜோஷி ( பூசாரி, ஜோசியர்). மராத்த ஆட்சியாளர்களின்
பெயர்களில் குறிப்பிடத்தக்கவை போஸ்லே, ஷிண்டே, கைக்வத், பவார் ஆகியவை. இவை ஆட்சியாளர்களின் பெயர்கள் மட்டுமின்றி பிற சாதியின பெயர்களிலும் காணப்படுகின்றன.
 
==பண்டிகைகள்==
===இந்து பண்டிகைகள்===
 
**குதி பத்வா
 
குதி என்றால் வெற்றிக் கம்பம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் சித்திரை முதல் நாள் (மார்ச்சு மாதத்தில்) மராத்தியர்களின் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இராமர் இராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பினார். ஆனால் வட இந்தியாவில் தீபாவளி பத்வா அன்று நடைபெற்றதாகக் கூறுவர். இந்த நாளில் மக்கள் புதுத் துணிகள், நகைகள் வாங்குவர். புதிய செயல்களைத் தொடங்க நன்னாளாக இந்நாள் உள்ளது. இந்நாளில் குழந்தைகள் சரசுவதிக்கு பூசை செய்வர்.
இது spring காலத்தின் தொடக்க காலமாகும்.
 
**அட்சய திரிதியை
 
இப்பண்டிகை வைகாசி மாதத்தின் மூன்றாம் நாளில் கொண்டாடப்படும். இந்து நாட்காட்டியின்படி இம்மாதத்தின் முக்கிய நாட்களில் ஒன்றாகும். இன்றைய நாளில் பெண்களுக்கான சுமங்கலி பூசை நடைபெறும். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களின் தோழியர், உறவினர், புதிய அறிமுகங்கள் போன்றோரை இப்பூசைக்கு அழைப்பர். இந்னிகழ்வின்போது, நிகழ்ச்சியினை நடத்துபவர் வளையல், இனிப்புகள், பரிசுகள், பூக்கள், வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம் போன்றவற்றை வழங்குவர். மாம்பழச் சாறும் வத்லி தாலும் சிற்றுண்டியாகத் தருவர்.
 
**வத் பூர்ணிமா
 
ஜ்யேஷ்ட பூர்ணிமா அன்று இப்பண்டிகை கொடாடப்படுகிறது.. இந்நன்னாளில் மகளிர் தங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்தோங்க, உண்ணாநோன்பிருந்து ஆலமரத்தை வழிபடுவர். திருமணமான பெண்கள் அருகிலுள்ள மரத்தில் சிவப்புக் கயிற்றைக்
கட்டி வழிபடுவர். இது போன்ற வழிபாடுகள் குடும்ப ஒற்றுமையைப் போற்றுவனவாக அமைகின்றன.
 
== மேலும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது