ஐக்கிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 141:
பிரிட்டிஷ் போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய இராச்சியத்தையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|NATO]] மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும்.
 
2004ஆம் ஆண்டில், [[பிரிட்டிஷ் நிலப்படை]] 112,700 வீரர்களையும் (இதில் 7,600 பெண் வீரர்களும் அடக்கம்), [[இராச விமானப்படை]] 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40,900 வீரர்களைக் கொண்ட [[இராசக் கப்பற்படை]] ஐக்கிய இராச்சியத்தின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு [[வேன்கார்ட் வகை நீர்மூழ்கி|டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக்]] கொண்டது. [[இராச கப்பற்படை வீரர்கள்]] நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|NATO]] நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும்.
 
[[பிரான்ஸ்]] மற்றும் [[ரஷ்யா]] ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த மற்றும் முழுமையானதொரு போர்ப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டனின் பரவலான செயல்திறன்களையும் தாண்டி, அண்மையில் நிலவும் பாதுகாப்புக் கொள்கையானது, பிரிட்டன் தனித்துப் போரிடாமல், தோழமை நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே பங்கு பெறுவது, என்பதே. பாஸ்னியா, கொசோவோ, ஆஃப்கானிஸ்தான், இராக் ( [[கிரேன்பி நடவடிக்கை]], விமானத்தடைப் பிராந்தியங்கள், [[டெசர்ட் ஃபாக்ஸ் நடவடிக்கை]], [[டெலிக் நடவடிக்கை]]) ஆகியவற்றை இக்கொள்கைக்கு உதாரணங்களாகக் கூறலாம். பிரிட்டிஷ் படை கடைசியாக தனித்துப் போரிட்டது 1982ஆம் ஆண்டு நடந்த [[ஃபாக்லாண்ட்ஸ் போர்|ஃபாக்லாண்ட்ஸ் போரில்தான்]].
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது