நான் ஈ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு திருத்தம்
→‎கதை சுருக்கம்: கதை முடிவு சேர்ப்பு
வரிசை 24:
 
==கதை சுருக்கம்==
{{கதைச்சுருக்கம்}}
நானி தன் எதிர் வீட்டு பெண் பிந்து மீது 2 ஆண்டுகளாக காதல் கொண்டுள்ளார். தன் காதலை பலவிதங்களில் பிந்துவுக்கு தெரியப்படுத்துகிறார். பிந்துவும் நானியை காதலிக்கிறார் ஆனால் தன் காதலை நானியிடம் சொல்லாமல் மறைத்து அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.
 
வரி 36 ⟶ 37:
பிந்துவின் வீட்டை அடையும் ஈ (நானி) அவருக்கு ஈ உருவத்தில் உள்ளது நானி என புரியவைக்கிறது. தன்னைக்கொன்றது சுதிப் என சொல்கிறது. பிந்துவிற்கு சுதிப்பின் உண்மையான குணம் பற்றி தெரிகிறது அவர் ஈ (நானி) யுடன் இணைந்து சுதிப்பின் வாழ்வை சீரழிக்க திட்டமிடுகிறார். பிந்துவின் உதவியால் சுதிப்பின் வீட்டிற்குள் நுழையும் ஈ (நானி) அவருக்கு பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அவரின் பணம் முழுவதையும் எரித்துவிடுகிறது. சுதிப் மந்திரவாதியை அழைத்து ஈ (நானி)யை ஒழிக்க ஓமம் செய்கிறார், ஈ (நானி) அதிலிருந்து தப்பித்து மின் இணைப்பில் குறுஞ்சுற்றிணைவு கசிவு ஏற்படுத்துகிறது அதனால் மந்திரவாதி இறக்கிறார், சுதிப் மயக்கமடைகிறார்.
 
அடுத்த நாள் மயக்கம் தெளிந்த சுதிப் ஈ (நானி)யும் பிந்துவும் இணைந்து செயல்படுவதை கண்டுபிடிக்கிறார். கோபமடைந்த சுதிப் பிந்துவை தன் வீட்டுக்கு கூட்டி வந்து அவரை இழிவாக பேசுகிறார். ஈ (நானி)யின் இறக்கைகளை வெட்டி விடுகிறார், அதை ஊசியால் குத்துகிறார். இறக்கும் தருவாயில் சிறிய பீரங்கியில் தீ வைத்து சுதிப்பை கொல்லுகிறது.
 
பின்னர், பிந்து சாலையிற்செல்லும்போது ஓரிளைஞன் அவருடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றார். அப்போது, நானி மீண்டும் இன்னோர் ஈயாகப் பிறப்பெடுத்து அவ்விளைஞனைத் தாக்கி, எப்போதும் பிந்துவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றார்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நான்_ஈ_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது