உப்புச் சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
 
==பின்விளைவுகள்==
காந்தி மேற்கொண்ட தனது சுறுசுறுப்பான ஈடுபாட்டினை நடைப்பயணத்திற்குப் பிறகு தவிர்த்தார், இருந்தாலும் இந்தியா முழுதுமான படிப்படியான வளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்தார். அவர் தண்டிக்கு அருகில் தற்காலிக ஆசிரமத்தை உருவாக்கினார். அங்கிருந்தபடியே, பெண் தொண்டர்களை பம்பாயில் (தற்போது [[மும்பை]]) மதுக் கடைகளையும் அந்நியத் துணிகளை புறக்கணிக்கச் செய்யவும் வலியுறுத்தினார். அவர் அந்நியத் துணிகளைக் கொண்டு ஒரு சொக்கப்பனை கொளுத்தச் செய்ய வேண்டினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் புறக்கணிக்கப் பட்டு வெறுமையடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்."<ref> name="Wolpert, 2001, p. 149"</ref>
 
காந்தி தனது அடுத்த பெரிய நடவடிக்கையாக, [[குஜராத்]]தின் தாராசனா உப்பு நிறுவனத்தை திடீர்த் தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். அவர் மீண்டும் இர்வின் பிரபுவிற்கு கடிதம் எழுதி தனது திட்டங்களைக் கூறினார். மே 4 நள்ளிரவில், காந்தி மெத்தையில் மாமரத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சூரத்தின் மாவட்ட நீதிபதி, இரு இந்திய அதிகாரிகள் மற்றும் முப்பது கனரக ஆயுதங்தாங்கிய காவல்துறையினருடன் வந்திறங்கினார்.<ref>Gandhi & Jack, 1994, p. 244-245.</ref> அவர் 1827 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி புனா (தற்போது [[புனே]]) அருகில் தங்கவைக்கப்பட்டார்.<ref>Riddick, p. 108.</ref>
"https://ta.wikipedia.org/wiki/உப்புச்_சத்தியாகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது