கோட்டாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டம் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 6:
|state_name = [[தமிழ்நாடு]]
|nearest_city = [[நாகர்கோவில்]]
|parliament_const = [[நாகர்கோவில்கன்னியாகுமரி]]
|assembly_const =[[நாகர்கோவில்]]
|civic_agency =
வரிசை 29:
}}
'''கோட்டாறு''' எனும் ஊரானது [[நாகர்கோவில்]] நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். மேலும் நகரின் முக்கிய [[சந்தை]] பகுதியாகவும் விளங்குகிறது. சங்க காலத்தில் முக்கிய வணிகதலமாகவும் விளங்கியுள்ளது.
 
==கோட்டாறு வரலாறு==
‘கோட்டாறு’ என்ற சொல் கோட்டையையும் ஆற்றையும் தொடர்புப் படுத்துகின்ற ஒரு சொல்லாகும். இதன் வரலாற்றுப் பின்னணி யாது என்று தெளிவாக அறிந்து கொள்வது இன்று சிரமமாக உள்ளது. இருப்பினும் இந்த ஊர் பழமைக்காலத்தில் இன்றைய நாகர்கோவில், வடசேரி, கோட்டாறு, இடலாக்குடி, வல்லன் குமாரவிளை, வெட்டூர்ணிமடம், இராமன் புதூர் போன்ற சிற்றூர்களை எல்லாம் உள்ளடக்கிய கோட்டார் என்ற பேரூர் ஆக இருந்திருக்கின்றதை, தவிரவும் இந்த ஊர் ஒரு பெரும் வியாபாரத்தலமாகவும் இருந்திருக்கின்றது. இந்த ஊரைக்குறித்து முதன் முதலாக உலகிற்குக் கூறியவர் கிரேக்க நாட்டுப் பயணியான பிளினியாவார். கிரேக்க நாட்டுக்காரரான இவர் கி.பி. முதலாம் நூற்றாண்டில் கோட்டாறு வந்ததாகத்தகவல் உண்டு. அவர் தனது பயணக்குறிப்பில் கோட்டாறை ‘கோட்டியாறை’ (Kotearai) என்று குறிப்பிடுகிறார். அவரைத் தொடர்ந்து, இரண்டாம் நூற்றாண்டில் இங்கு வருகை தந்த உரோமாபிரிப் பயணியான ‘ஸ்டிராபேம’ (Strabo) என்பவரும் கோட்டாறை ‘கோட்டியாறை’ என்றே குறிப்பிடுகிறார். இவர்களைத் தொடர்ந்து, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்க நாட்டைச் சார்ந்த பிரயாணியான பெரிப்பிளஸ் (Peroplus of Eretherean Sea) என்பவரும் கோட்டாறை ‘கொட்டியாறை’ என்று தான் குறிப்பிடுகிறார். ஆகையால் கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்கு முன்பிலிருந்தோ கோட்டாறு என்ற ஊர் சேர நாட்டின தென் கோடி ஊரில் இருந்துள்ளது என்பதை மேலே குறிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுப் பிரயாணிகளின் குறிப்பிலிருந்து அறியப்படுகிறது. ஒரு வேளை கோட்டாறுக்கு ‘கோட்டியாறை’ என்ற பெயரை முதன் முதலாக சூட்டியவரும் கிரேக்க நாட்டுக்காரரான பினினி ஆவார் என்று ஊகிப்பதில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. பிற்காலத்தில் கோட்டியாறை மருவி கோட்டாறு ஆகுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இந்த ஊர் ஒரு முக்கிய வியாபாரத்தலமாக அன்று இருந்தமையால் அதைக்குறித்து வெளிநாட்டுப பயணிகள் உயர்வாக எழுதுகின்றனர். சங்ககாலம் கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகள் ஆகும். அதன் முன்பிருந்தே இப்பகுதி கோட்டியாறை என்ற பெயரால் வெளிநாட்டவர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகையால் சங்க காலம் தொட்டே கோட்டாறு என்ற பெரும் வணிகத்தலம் சேர நாட்டின் தென்பாகத்தில் செயல்பட்டுவந்தது என்றது தெளிவு. இன்றும் இந்த ஊர் பெரும் வணிகத் தலமாகத்தான் சிறந்து நின்று அதன் பெருமையை உலகிற்கு பறை சாற்றி வருகிறது.
 
==புராண வரலாறு==
பலநூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆகம சமயத்தார் கோட்டாறைக் குறித்து ஐதீகம் ஒன்றைப் புனைந்தனர். அகலிகை என்பவருடன் இந்திர நாட்டு; மன்னன் தேவேந்திரன் முறை தவறிய உறவு கொண்டமையால், அவன் பிணிவாய்ப்பட்டான். இந்திர லோகத்து வைத்தியத்தால் நோய் தீரவில்லை. ஆகையால் அந்நாட்டு முனிவர்கள் இந்திரனிடம் சென்று, சேரநாடு சுசீந்திரம் சென்று முக்கடவுளர்களை வேண்டி கடும் தவம் செய்தால்தான் நோய் குணமாகும் என்று ஆரூடம் கூறினர். இதற்கிணங்க இந்திரன் தனதுவாகனமான ஐராவதத்துடனே சுசீந்திரம் வந்து அருகாமை இடத்தில் ஆசிரமம் அமைத்து தாணுமாலையனை நிலைப்படுத்தி கடும் தவம் புரிந்தான். பல்லாண்டுகளாக தவமிருந்தான். இந்திரனின் பக்தி வைராக்கியத்தை சோதிப்பதற்காக சிவபெருமான் இவ்வரில் கடும் வறட்சியை உருவாக்கி அனைத்து நீராதாரங்களையும் வற்றச்செய்தான். குடிப்பதற்க்குக் கூட தண்ணீர் இல்லாமல் போய் விட்டது. நீரின்றி அனுஷ்டானங்கள் செய்து தன்னை சுத்தீகரிப்பதற்கு தண்ணீரின்மை பெருந்தடங்கலானது. நிலைமையை புரிந்து கொண்ட இந்திரனின் யானை ஐராவதம் நீர்தேடி அருகாமை மலைக்குச்சென்றது. தாடகை மலையில் நீர் தேங்கியிருப்பதைக்கண்டு, அதை சுசீந்திரம் கொண்டு வருவதற்கு தனது நான்கு தந்தங்களின் துணையுடன் ஓடை அமைத்து தண்ணீரை சுசீந்திரத்திற்கு இட்டுவந்து, தனது எசமான விசுவாசத்தை வெளிப்படுத்தியது. கோடைகாலத்தில் ஆறு (நதி) வெட்டிவந்து தண்ணீர் கொண்டு வந்தாமையால் இவ்ஊருக்கு ‘கோடையாறு’ என்ற பெயர் வந்ததாக இந்த ஐதீகம் கூறுகிறது. நாளடைவில் ‘கோடையாறு’ ‘கோட்டாறு’ ஆயிற்று. பரசுராமனின் மருவால் கடலிலிருந்து உயர்த்தியெடுத்து உருவாக்கிய இடம் தான் கேரளம் என்ற ஐதீகம் உண்மையென்றால் கோடையாற்றின் ஐதீகமும் உண்மையே!
 
==கோட்டாறும் சமணமும்==
கோட்டாறு ஒரு சமண மையமாகவும் இருந்ததற்குப் பல ஆவணச்சான்றுகள் உள்ளன என்று திரு.அ.க.பெருமாள் கூறுகிறார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில், அதாவது சங்க காலத்தில் சமணம் சேழநாட்டில் அறிமுகமானதாகவும் அவர் கூறுகிறார். மேலும் அவர்கூறுகையில், இலங்கை வம்சாவளி நூலான மகாவம்சத்தின் படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சேரநாட்டிலிருந்து, கோட்டார் வழி சமணம் இலங்கைக்குச்தான் சென்றிருக்க வேண்டும் என்கிறார். இதுவும் ஏற்புடையதான். கோட்டாறிலிருந்து கன்னியாகுமரி லீபுரம்வழி இலங்கைக்கு கடல்வழிச் செல்வது எளிதானது என்று ஆட்கள் சொல்லுகிறார்கள். தவிரவும் லீபுரத்தில் இயற்கையான துறைமுகம் ஒன்று அன்று இருந்ததாகவும் வாய்வழிச் செய்திகள் கூறுகின்றன. துறைமுகம் இருந்ததற்கான கல்வெட்டு சான்றும் காணக்கிடைக்கின்றது.
 
கோட்டாறு சேர நாட்டின் தெற்கில் அமைந்த முக்கிய வணிகத்தலம் என்பதால், சேர நாட்டில் கி.மு. 300 ஆம் ஆண்டுவாக்கில் குடியேறிய சமணர்கள், தென்னகத்தில் நெருக்கமாக ஆங்காங்கே குடி அமர்ந்து கல்விப்பணி செய்தனர். சமண முனிவர்கள் தென்தமிழகத்தில் தங்கியிருந்தனர் என்பதை இங்கே கிடைக்கின்ற பிராமிக்கல் வெட்டுகள் வழி முடிவு செய்துள்ளதாக திரு. அ.க.பெருமான் கூறுகிறார். இவர்களில்ஒரு குழு தென் சேரநாட்டில், குறிப்பாக கோட்டாறிலும், அதன் சுற்றுப்புற இடங்களிலும் குடியமாந்திருப்பர். பாண்டி நாட்டில் சமணமதம் பரவியிருந்தது. சமணர்கள் எழுதிய நூல் நாலடியார் ஆகும். சமணர்கள் தொகுத்தமையால் இதன் தனி ஆசிரியர் தெரிவதற்கில்லை. பாண்டியன் கடுங்கோன் சமணத்தை தழுவிய களப்பிரர்களை விரட்டியமையால் அவர்கள் தொகுத்த நாலாடியாரையும் வைகை ஆற்றிலிலும் எறிய ஆணையிட்டான். நூல் வைகை நதிபோக்கை எதிர்த்து சேகரிக்கப்பட்டது எனவே சமண பாண்டிய நாட்டில் இருந்தார்.
 
சேரநாட்டையடைந்த சமணர்கள் சேரமன்னர்களின் ஆதரவு பெற்று சமயத் தொண்டாற்றினர் இவர்கள் சேர நாட்டில் குடியமர்ந்த காலம் சங்க காலமாகும். சமணர்களின் காலத்தில் சிறப்புடைய பத்து சேர மன்னர்களைக்குறித்து ‘பதிற்றுப்பத்து’ என்ற நூல் வழியாக அறிய முடிகிறது. சேர மன்னர்கள் அரச அடையாளமாக பனம் பூவையும், நார்முடியைச்சூடி நல்லாட்சி புரிந்தனர். சமண முனிவர்களும் அரசனை கவுரவிக்கும் முகமாக பனம்பூவை அணிந்து கொண்டனர். தவிரவும் சமண சமயத்தை ஏற்றுக்கொண்டவர்களும் பனம்பூவை அணிவித்து, தீட்சை கொடுத்தனர். பனை மரத்துடன் சார்புடையவர்கள் சேர நாட்டுச் சான்றோர்களே சமணத்தைத் முதன்முதலாக தழுவியவர்கள் ஆவர். இதனால் தான் எனவோ இவர்களும் நாடாண்டவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்றனர். மன்னனைத்தொடர்ந்து முதன்முதலாக சமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால் இவர்களும் நாடாண்ட சேர மன்னர்கள் வழிவந்தோன்றல்கள் என்று கருதுவதற்கு இடமுண்டு. பனம்பூவை அணிந்து சேரமன்னர்களின் வழிவந்த இவர்கள் ஆங்காங்கே, மன்னனுடன் ஒத்து நின்று நாடாண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆரியசமயம், ஸ்ரீஆதிசங்கரின் அத்வைதியத்தால் சிறுகச்சிறுக பொலிவிர்ந்து கி.பி. 16 – ம் நூற்றாண்டுவரை நீடித்து நின்றது. அதற்குப்பிறகு ஆகம மதத்தார் சமணப்பள்ளிகளை இந்து கோயில்களாக மாற்றி, தெய்வ வழிபாட்டை புகுத்தியதன் காரணமாக சமணம் வீழ்ச்சியுற்றது. ஆரிய தாக்கத்தால் சமணம் வீழ்ச்சி கண்ட வேளையில், எஞ்சிய சமணர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவர்களை “சாணார்கள்” என்று கூறி இழிவு சமூகத்தாராக்கினர். ஆங்கிலேயர் காலத்தில், அதாவது கி.பி. 1921 மதிராவி மாகாண அரசு “சாணார்” என்பதை களைந்து “நாடாம்” என்றச் சிறப்புப் பட்டையமாக அளித்தனர்.
 
‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை குமரி மாவட்டத்தில் சமண மதத்தைத் தழுவிய மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். பின்னர் இவர்கள் இந்து மதத்தினரால் பிற்படுத்தப்பட்ட சாதியினராக ஆக்கப்பட்டனர்’ என்று அ.க.பெருமாள் கூறுகிறார். இந்த நிலையிலும் நாடார்கள் சமண கோட்பாடுகளில் பலவற்றை பின்பற்றி, சமணத்தை இன்றும் சிறப்பிக்கின்றனர். உயிர் நீத்தோரை உட்கார்ந்த நிலையில் சமாதி வைப்பது, பெரிய கடவுளர்களை வழி படுவதை தவிர்ப்பது, சிலைவழிபாடு செய்யாதது, மூதாதையர் வணக்கம் செய்வது போன்ற சமண கோட்பாடுகளை இச்சமுதாயம் இன்றும் ஆங்காங்கே கடைபிடிக்கின்ற படியால் இவர்களின் மூதாதையர்கள் சமணர்களாக இருந்தனர் என்று கருதலாம்.
“கி.பி.7 –ஆம் நூற்றாண்டில் திகம்பர சமணர்கள் இங்கே இருந்தனர் என்று கொள்ளலாம். உத்தானந்த அடிகள், விமலசட்சந்திரர், பாகடூலத்தான், அரங்கன்மாறன் ஆகிய சமணப்புலவர்களும் அறிஞர்களும் கோட்டாற்றில் வாழ்ந்தனர் என்பதற்கு தென்னிந்திய கல்வெட்டுகளில் சான்றுகள் உண்டு. கோட்டாற்றில் ஒரு சமணர்பள்ளி இருந்தது. நாகர்கோவிலிலுள்ள நாகராஜா ஆலையம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை சமணக்கோயிலாகவும், சமண முனிவர்களின் இருப்பிடமாவும் இருந்தது என்பதை தொல்பொருள் ஆய்வாளர் டி.டி. கோபி நாதராவ் கூறுகிறார்”. குமரிமாவட்டத்திலுள்ள விளவங்கோடு தாலுகாவின் வடமேற்கு அற்றத்தில் சமணர்தங்கிய இடங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. சிதறால் ஊரிலுள்ள திருச்சாணத்து மலைகள் இத்தங்குமிடங்கள் காணப்படுகின்றன.
.<ref>அ.கா.பெருமான் - தென்குமரியின் கதை – 2003 பக்கம் - 242-243.</ref>
 
கோட்டாறு, பிற்காலத்தில் ஒரு முக்கிய வணிகத்தலமாகவும், சமண இருப்பிடமாகவும் திகழ்ந்ததைப் போன்று, பிற்காலத்தில், அதாவது கி.பி. 985-1010 வரை நிலப்படை (Army) நிறுத்தும் தாவளமாகவும் மாறியது. சோழர்களின் பெரும் படையை கோட்டாற்றில்; தான் நிலைப்படுத்தினர். இப்படையின் தலைமைத் தளபதி வல்லன் குமரன் என்பாரின் தாவளத்தளம் இன்று ‘வல்லன் குமாரவிளை’ என்ற பெயருடன் சோழர்களின் படையெடுப்பை நினைவு கூறும் விதமாக அழைக்கப்படுகிறது. இந்த வல்லன் குமாரவிளையும் கோட்டார் கம்போளத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளதை நினைத்துப் பார்க்கலாம். அவ்விடத்தில் வாழ்கின்ற மக்களில் பெருவாரியானவர்கள் சாணார்கள் என்ற சமணர்களேயாவார். எனவே ‘கோட்டாறு’ தென்னிதியாவின் முக்கிய வணிகத்தலங்களில் பழமையானதாவும், சமணச்சமயப்பள்ளியாகவும், படைத்தாவளமாகவும், இந்திரன் பிணிதீர்த்த புண்ணியத்தலமாகவும் விளங்கியிருக்கிறது. ஆகம மதமாகிய இந்து மதம் தென்திருவிதாங்கூரில் கோலோச்சிய நாட்களுக்குப்பிறகு கோட்டாறு வெறும் ஒரு வணிகத்தலமாக மட்டும் விளங்குகிறது. பிற்காலத்தில், அதாவது 19 – ஆம் நூற்றாண்டில் தீர்திருத்த கிறிஸ்தவ மிஷனறியான கனம் ரிங்கல் தௌபே சூட்டினார் என்று ஆய்வுகளஞ்சி ஆசிரியர் திரு. பத்மநாபன் கூறுகிறார். அதற்கு முன்பு வரை இந்த தலம் கோட்டாறு என்றே அறியப்பட்டது.
 
== உள்ளடக்கிய பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோட்டாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது