உருசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 226:
 
1991ன் போது, பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படத் தொடங்கின. இதனால் பால்டிக் குடியரசு நாடுகள் ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்லத் தீர்மானித்தன. மார்ச் 17ல், பொது வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. இதில் பங்குபற்றிய பெரும்பாலான மக்கள் சோவியத் ஒன்றியத்தை புதிய கூட்டரசாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகஸ்ட் 1991ல், கோர்பச்சேவுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் கொம்யூனிசக் கட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க, கோர்பச்சேவின் அரசாங்க உறுப்பினர்கள் புரட்சியொன்றை நடத்தினர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டிசம்பர் 25, 1991ல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறியது.
 
===ரசியக் கூட்டரசு===
 
[[File:Moscow, City May 2010 03.JPG|thumb|கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மொஸ்கோ சர்வதேச வர்த்தக மையம்]]
 
ரசிய வரலாற்றிலேயே முதலாவதாக, சூன் 1991ல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில், [[போரிஸ் யெல்ட்சின்]] சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் ஒன்றியத்தின் சிதறலின் போதும், அதன் பின்னரும் தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கல் ஆகியவை உட்பட பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.<ref name=OECD/> இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவாலும், [[சர்வதேச நாணய நிதியம்|சர்வதேச நாணய நிதியத்தினாலும்]] பரிந்துரைக்கப்பட்ட, அதிர்ச்சி வைத்தியம் எனப்பட்ட விரைவான பொருளாதார மாற்றமும் அடங்கும்.<ref>{{Cite news|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9F0CEED91F39F932A15751C1A965958260|title= U.S. is abandoning 'shock therapy' for the Russians|author=Sciolino, E.|work=The New York Times|accessdate=20 January 2008|date=21 December 1993}}</ref> இம் மாற்றங்கள் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1990-95 காலப்பகுதியில், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யிலும், கைத்தொழில் விளைபொருட்களிலும் 50% வீழ்ச்சி ஏற்பட்டது.<ref name=OECD/><ref>{{cite web|title=Russia: Economic Conditions in Mid-1996|publisher=Library of Congress|url=http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+ru0119)|accessdate=4 March 2011}}</ref>
 
தனியார்மயமாக்கலால், வணிக நிறுவனங்களின் கட்டுப்பாடு, அரசாங்க முகவர்களிடமிருந்து, அரச முறைமையில் தொடர்புகளைப் பேணிய தனியாரிடம் சென்றடைந்தது. பல புதிய செல்வந்த வணிகர்கள் பில்லியன் கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் நாட்டுக்கு வெளியில் எடுத்துச் சென்றமையால் பாரிய மூலதன வெளியேற்றம் ஏற்பட்டது.<ref>{{cite web|title=Russia: Clawing Its Way Back to Life (int'l edition)|work=BusinessWeek |url=http://www.businessweek.com/1999/99_48/b3657252.htm|accessdate=27 December 2007}}</ref> நாட்டினதும் பொருளாதாரத்தினதும் வீழ்ச்சியால், சமூக சேவைகள் சீர்குலைந்தன. பிறப்பு வீதம் குறைவடைந்து, இறப்பு வீதம் அதிகரித்தது.{{Citation needed|date=April 2012}} பிந்திய சோவியத் யுகத்தில் 1.5%மாக இருந்த வறுமை மட்டம், 1993ன் நடுப்பகுதியில் 39-49%மாக ஆகியது. இதனால் மில்லியன் கணக்கானோர் வறுமையில் மூழ்கினர்.<ref name=worldbank>{{Cite book|author=Branko Milanovic|title=Income, Inequality, and Poverty During the Transformation from Planned to Market Economy|publisher=The World Bank|year=1998|pages=186–189}}</ref> 1990களில் கடுமையான ஊழல் மற்றும் ஒழுங்கீனம், குற்றவியல் குழுக்களின் எழுச்சி மற்றும் வன்முறைகள் என்பன காணப்பட்டன.<ref>{{Cite journal|author=Jason Bush|title=What's Behind Russia's Crime Wave?|journal=BusinessWeek Journal|date=19 October 2006|url=http://www.businessweek.com/globalbiz/content/oct2006/gb20061019_110749_page_2.htm}}</ref>
 
1990களில், வட காக்கசசில் உள்நாட்டு இனக்கலவரங்கள் மற்றும் இசுலாமியக் கிளர்ச்சி ஆகியவற்றால் ஆயுதப் போராட்டங்கள் ஏற்பட்டன. 1990களின் ஆரம்பத்தில் [[செச்னியா|செச்சென்]] பிரிவினைவாதிகள் சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து, போராளிகளுக்கும், ரசிய ராணுவத்துக்குமிடையில் கெரில்லாப் போர் நடைபெற்றது. பிரிவினைவாதிகளால், மக்களுக்குக்கெதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மொஸ்கோ திரையரங்குப் பணயக் கைதிகள் பிரச்சினை மற்றும் [[பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்|பெஸ்லான் பாடசாலை முற்றுகை]] என்பன குறிப்பிடத்தக்கன. இதனால் நூற்றுக்கணக்கானோர் இறந்ததோடு உலகத்தின் கவனமும் ரசியா நோக்கித் திரும்பியது.
 
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின்போது, ரசியாவின் மக்கள்தொகை சோவியத் ஒன்றிய மக்கள்தொகையின் அரைப்பங்காக இருந்த போதிலும், ரசியா சோவியத் ஒன்றியத்தின் வெளிக்கடன்களைத் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டது.<ref>{{cite web|title=Russia pays off USSR's entire debt, sets to become crediting country|publisher=Pravda.ru|url=http://english.pravda.ru/russia/economics/22-08-2006/84038-paris-club-0|accessdate=27 December 2007}}</ref> உயர் பாதீட்டுப் பற்றாக்குறை காரணமாக 1998ல் நிதி நெருக்கடி ஏற்பட்டது.<ref>{{cite web|url=http://www.iie.com/publications/papers/aslund0108.pdf|title=Russia's Capitalist Revolution|author=Aslund A|accessdate=28 March 2008|format=PDF}}</ref> இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் வீழ்ச்சியடைந்தது.<ref name=OECD>{{cite web|title=Russian Federation|publisher=Organisation for Economic Co-operation and Development (OECD)|url=http://www.oecd.org/dataoecd/7/50/2452793.pdf|accessdate=24 February 2008|format=PDF}}</ref>
 
டிசம்பர் 31, 1999ல் யெல்ட்சின் சனாதிபதிப் பதவியிலிருந்து விலகி ஆட்சிப்பொறுப்பை அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த [[விளாடிமிர் பூட்டின்|விளாடிமிர் புட்டினிடம்]] ஒப்படைத்தார். 2000ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலிலும் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். வட காக்கசஸ் பகுதிகள் சிலவற்றில் வன்முறைகள் இடம்பெற்றாலும், செச்சென் கிளர்ச்சியை புட்டினால் அடக்கக் கூடியதாயிருந்தது. உள்நாட்டுத் தேவை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றிலான உயர்வு, உயர் எண்ணெய் விலை மற்றும் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியன காரணமாக அடுத்த ஒன்பது வருடங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் ரசியாவின் வாழ்க்கைத்தரமும், அதன் உலகளவிலான ஆதிக்கமும் அதிகரித்தது.<ref name=cia/> புட்டினின் பதவிக்காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் மேற்கத்தேய நாடுகளால் சனநாயக முறையற்றது என விமர்சிக்கப்பட்டாலும்,<ref>{{cite web|author=Treisman, D|title=Is Russia's Experiment with Democracy Over?|url=http://www.international.ucla.edu/article.asp?parentid=16294|publisher=UCLA International Institute|accessdate=31 December 2007}}</ref> புட்டினின் தலைமைத்துவத்தின் கீழான நாட்டின் உறுதிநிலை மற்றும் வளர்ச்சி காரணமாக ரசியா முழுவதும் புடினின் செல்வாக்கு அதிகரித்தது.<ref>{{Cite news|author=Stone, N|title=No wonder they like Putin|url=http://www.timesonline.co.uk/tol/comment/columnists/guest_contributors/article2994651.ece|work=The Times |location=UK |accessdate=31 December 2007|date=4 December 2007}}</ref>
 
மார்ச் 2, 2008 அன்று, [[திமித்ரி மெட்வெடெவ்]] ரசிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, புட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 சனாதிபதித் தேர்தலையடுத்து, புடின் சனாதிபதியானதுடன், மெட்வடேவ் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
 
==அரசியல்==
"https://ta.wikipedia.org/wiki/உருசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது