"பேச்சு:மலையகத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,763 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
:::நீங்கள் சுட்டிய இணைப்பிலும் [http://www.nichamam.com/2008/06/blog-post_30.html] கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தமிழர் என்றே மேற்படி இரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.// என்பதனை அவ்வெழுத்தாளர் குறிப்பிடுவதையும் கவனிக்கவும். அதேவேளை //மலையத் தமிழர் என்ற பதத்தை உத்தியோக பூர்வமாக மாற்ற முயற்சிக்காமல் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்திற்காக குரல் கொடுப்பது அர்த்தமற்ற செயலாகும்.// எனும் கூற்றூடாக எழுத்தாளர் தன் கருத்தை முன்வைக்கிறார். இதில் எழுத்தாளரின் அபிலாசை வெளிப்படுகிறது. அவ்வெழுத்தாளரின் விருப்பு '''இந்தியத் தமிழர் என அழைக்கும் அனைவரையும்''' மலையகத் தமிழர் என அழைக்கவேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால் இந்திய வம்சாவளித் தமிழர் எல்லோரும் மலையத் தமிழர் அல்ல.
 
:::தவிர நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் போர்த்துக்கீசரின் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கையில் வசிப்பவர்கள். இவர்கள் பற்றிய சரியான தரவுகள் எதுவும் இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் இல்லை. அதிகமானோர் தமிழ் பாடசாலைகள் அழிக்கப்பட்டு சிங்களப் பாடசாலைகளை நிறுவி சிங்கள மயமாக்கலினால் சிங்களமாகிப் போயினர். '''இவர்கள் பற்றிய செய்திகள் கூட எங்கும் வருவதில்லை.''' அவர்களுக்கும் மலையகத் தமிழருக்கும் எந்த தொடர்போ, உறவோ இல்லை. (மேலுள்ள இணைப்பின் உள்ள கட்டுரையாளர் அதுபற்றி குறிப்பிடவும் இல்லை) ஆனால் அவர்களில் சிலர் தம்மை இந்திய வம்சாவளியினாராக கூறிக்கொள்வோரும் உளர் என்பதனை அப்பிரதேசங்களுக்கு பயணித்து அறியலாம்.
 
:::இந்தியத் தமிழர் என தம்மை அடையாளப் படுத்தும் முஸ்லீம்களும் உள்ளனர். எடுத்துக்காட்டு [[கம்பளைதாசன்]] எனும் பெயரை சூட்டிக்கொண்ட சாகுல் ஹமீது போன்றோரும் உளர். பார்க்க: [[கம்பளைதாசன்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1232062" இருந்து மீள்விக்கப்பட்டது