பேச்சு:மலையகத் தமிழர்
"இலங்கைஇந்திய பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு" என்றால் என்ன?, அப்படி ஒன்றை நான் பார்த்ததே இல்லை. "இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் 1948, 1948 Ceylon Citizenship Act" என்று தான் சட்டம் உள்ளது.
- நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரிதான் உரிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. Mayooranathan 10:33, 9 செப்டெம்பர் 2005 (UTC)
இக்கட்டுரைத் தலைப்பை இலங்கையின் மலையகத் தமிழர் எனத் தலைப்பிடுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 11:09, 2 ஆகத்து 2011 (UTC)
- மலையகத் தமிழர் என்று குறிப்பிடுவதே பொருத்தம். அவர்கள் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள். மலையகத் தமிழர் இலக்கியம், மலையகத் தமிழர் அரசியல் என்ற சொற்றாடல்களே வழக்கத்தில் உள்ளன. --Natkeeran 03:05, 3 ஆகத்து 2011 (UTC)
விளக்கங்கள்
தொகுமலையகத் தமிழர் என்பது வேறு, இலங்கையின் இந்தியத் தமிழர் என்பது வேறு.
- "மலையகத்தமிழர்" என்போர் இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில், போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களின் கீழ் வாழ்பவர்கள்.
- "இலங்கையின் இந்தியத் தமிழர்" எனும் போது மலையகத் தமிழரரும் உள்ளடங்கும். அதேவேளை இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கப்படும் (இறக்குமதி) பிடவை தொகை வணிகத்தில் (All sale) முன்னனியில் இருப்பவர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால், பிடவை கடைகளைப் பொருத்தமட்டில் 2000 ஆண்டுக்கு முன்பு வரை, இலங்கையில் பிரசித்திப் பெற்ற கடைகளாக கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள (ரஞ்ஞனாஸ், லலிதா, போன்ற) கடைகளுக்கு இணையாக எந்த கடைகளும் இருக்கவில்லை. இவை இந்தியத் தமிழர்கள் உடையதே.
தவிர (தங்கம்) நகை வணிகத்தில் இன்றளவும் இந்தியத் தமிழர் அளவுக்கு இலங்கையில் எவரும் கோளோச்சவில்லை. கொழும்பு செட்டியார் தெருவில் இருக்கும் பாரிய நகைக்கடைகளில் உரிமையாளர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இவை தவிர இன்னும் பல்வேறு மட்டங்களிலும் உயர் நிலையில் இந்திய வம்சாவளி தமிழர் உள்ளனர். முத்தையா முரளிதரன் போன்றோரும் கண்டி நகரில் வணிகர்களாக இருக்கும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒருவரே ஆவார். இவர்கள் எல்லோரையும் மலையகத் தமிழர் என்று கூறமுடியாது. எனவே கட்டுரையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும். தலைப்பு "இலங்கையின் இந்தியத் தமிழர்" என இட்டுவிட்டு, "மலையதத் தோட்டத்தொழிலாளர்கள்" குறித்து மட்டும் செல்கிறது! --HK Arun 04:17, 24 ஆகத்து 2011 (UTC)
- ஆய்வுக்குரியவை
இன்று இலங்கைத் தமிழர் என அழைக்கப்படுவோரும் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனும் கோட்பாடு உள்ளோரும் உளர். அவ்வாறாயின் நாமும் இந்த பகுப்புக்குள் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அல்லது தென்னிந்திய தமிழர்களின் ஆக்கிரமிப்பின் போது அவர்களுடன், இலங்கையில் வாழ்ந்த பூர்வ குடிகள், மொழி, சமயம் எனும் ஒருங்கிணைவால் உருவான இனமாகவும் இருக்கலாம். இவை ஆய்வுக்குறியவை.--HK Arun 04:39, 24 ஆகத்து 2011 (UTC)
- மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் கிடையாது. இக் கட்டுரை கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் பற்றியதே. அப்பெயரே பரவலான பயன்பாட்டில் உள்ளது. வேறு மக்கள் குழுக்கள் இருப்பின் வேறு கட்டுரைகள் எழுதலாம். --Natkeeran (பேச்சு) 18:11, 12 அக்டோபர் 2012 (UTC)
- //மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் கிடையாது. இக் கட்டுரை கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் பற்றியதே.// ஆம்! இதில் எந்த தவறும் இல்லை.
- ஆனால் இலங்கையின் இந்தியத் தமிழர் எனும் கட்டுரை மலையகத் தமிழர் எனும் கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டிருப்பதில் தவறு உண்டு. ஏனெனில் மலையகத் தமிழர் எனும் போது இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தோட்டத் தொழிலாளர்களையும், அதனைச் சார்ந்த பிற தொழில்கள் புரிவோரையும், 1983களில் இனவன்முறைகளின் போது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் என வடக்கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தோரையும் குறிப்பதாகக் கொள்ளமுடியும். ஆனால் இலங்கையின் போர்த்துகீசரின் வருகைக்கு முன்னர் இருந்து தற்போதும் கொழும்பில் தொகை வணிகர்களாகவும், நகை வணிகர்களாகவும் இருப்போர் மலையகத் தமிழர் என அழைக்கப்படுவதில்லை. அவர்களின் பலரின் வாழ்க்கை முறையே வேறுபட்டது. குறிப்பாக தொகை வணிகர்களின் கடைகள் காலை 10:00 முதல் மாலை 6:00 மணியுடன் மூடப்படும் கடைகளாகவே இருக்கும். கிழமையில் சனி கிழமை அறைநேரமும், ஞாயிறும் கடை மூடப்படும். இதில் பலர் சனிக்கிழமை மாலை விமானத்தில் தமிழ்நாடு சென்று திங்கள் காலை மீண்டும் இலங்கை வருவதை வாடிக்கையாக கொண்டோர் பலர் இருக்கின்றனர். இவர்களில் இலங்கை கடவுச்சீட்டு உள்ளோரும் உளர். இந்திய கடவுச்சீட்டையே கொண்டுள்ளோரும் உளர். இரண்டும் உள்ளோரும் உளர். இரண்டு நாட்டிலும் வீடும் இருக்கும். இவர்களின் இலங்கையின் இருப்பு என்பது வணிகம் சார்ந்ததாகவே உள்ளது. அதில் பலர் இந்தியத் தமிழர் என்றே அடையாளப் படுத்துகின்றனர். இவர்களை எவ்வாறு "மலையகத் தமிழர்" என்று கூறமுடியும்? இவர்களின் கடைகளில் பணிபுரிவோர் மலையகத்தை மையமாகக் கொண்டவர்கள் அதிகம் என்பது வேறுவிடயம்.
- அதேபோன்ற வாழ்க்கை முறையைக் கொண்ட இந்தியத் தமிழர் யாழ்ப்பாணத்திலும் உளர். எடுத்துக்காட்டாக நெல்லியடி "பரமசிவன் அரிசி ஆலை" உரிமையாளரைக் குறிப்பிடலாம்.
- நீங்கள் சுட்டிய இணைப்பிலும் [1] கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தமிழர் என்றே மேற்படி இரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.// என்பதனை அவ்வெழுத்தாளர் குறிப்பிடுவதையும் கவனிக்கவும். அதேவேளை //மலையத் தமிழர் என்ற பதத்தை உத்தியோக பூர்வமாக மாற்ற முயற்சிக்காமல் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்திற்காக குரல் கொடுப்பது அர்த்தமற்ற செயலாகும்.// எனும் கூற்றூடாக எழுத்தாளர் தன் கருத்தை முன்வைக்கிறார். இதில் எழுத்தாளரின் அபிலாசை வெளிப்படுகிறது. அவ்வெழுத்தாளரின் விருப்பு இந்தியத் தமிழர் என அழைக்கும் அனைவரையும் மலையகத் தமிழர் என அழைக்கவேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால் இந்திய வம்சாவளித் தமிழர் எல்லோரும் மலையத் தமிழர் அல்ல.
- தவிர நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் போர்த்துக்கீசரின் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கையில் வசிப்பவர்கள். இவர்கள் பற்றிய சரியான தரவுகள் எதுவும் இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் இல்லை. அதிகமானோர் தமிழ் பாடசாலைகள் அழிக்கப்பட்டு சிங்களப் பாடசாலைகளை நிறுவி சிங்கள மயமாக்கலினால் சிங்களமாகிப் போயினர். இவர்கள் பற்றிய செய்திகள் கூட எங்கும் வருவதில்லை. அவர்களுக்கும் மலையகத் தமிழருக்கும் எந்த தொடர்போ, உறவோ இல்லை. (மேலுள்ள இணைப்பின் உள்ள கட்டுரையாளர் அதுபற்றி குறிப்பிடவும் இல்லை) ஆனால் அவர்களில் சிலர் தம்மை இந்திய வம்சாவளியினாராக கூறிக்கொள்வோரும் உளர் என்பதனை அப்பிரதேசங்களுக்கு பயணித்து அறியலாம்.
- இந்தியத் தமிழர் என தம்மை அடையாளப் படுத்தும் முஸ்லீம்களும் உள்ளனர். எடுத்துக்காட்டு கம்பளைதாசன் எனும் பெயரை சூட்டிக்கொண்ட சாகுல் ஹமீது போன்றோரும் உளர். பார்க்க: கம்பளைதாசன்
- எனவே இந்திய வம்சாவளித் தமிழர் என்பதற்கும் மலையகத் தமிழர் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இன்றும் இலங்கையில் முன்னனி தமிழ் செய்தித்தாளான வீரகேசரியும் ஒரு இந்தியத் தமிழருடையது தான். எனவே இரண்டையும் இருவேறு கட்டுரைகளாக தொகுக்கப்பட வேண்டும். இரண்டினதும் வேறுபாட்டை முறையாக விளக்குதல் வேண்டும். முதலில் வழிமாற்றை நீக்கவும்.−முன்நிற்கும் கருத்து 219.77.138.138 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
இலங்கை இந்திய தமிழர்கள் வேறு ( இலங்கையில் இந்தியத் தமிழர் என்று சொல்வது இருநூறு ஆண்டுக்கு முன்பில் இருந்து இன்றுவரை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை குறிக்கும்). இலங்கை மலையகத்தமிழர்கள் வேறு, (இலங்கையில் தோட்டத் தொழிலுக்காகவும், வேறு சில அதிகாரிகளாகவும், வியாரபார நோக்கத்துக்காகவும், ஆங்கிலேயரால் அழைத்துவரப்பட்டவர்கள்). மற்றும் மலையகத்தில் வாழும் இலங்கையின் பூர்விக தமிழர்கள் இவர்களை மலையக தமிழர் என்பார்கள்.--சிவம் 19:10, 12 அக்டோபர் 2012 (UTC)
மலையக தமிழர் என்போர் யார்?
தொகுஇலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழும் ஓர் இனம் "இந்திய வம்சாவழியினர்", இந்திய வம்சாவழி தமிழர்", "மலையக தமிழர்" என பல்வேறு சொல்லாடல்களால் நீண்ட நாட்களாகவே அல்லோலக்கல்லோலப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையில் உள்ள தேசிய இனங்களில் ஒரு இனமாக "மலையக தமிழர்" அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இன்று மலையகத்தின் பேசுப்பொருள்.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் கோப்பி பயிர் செய்கைக்காகவும் பின்னர் தேயிைலை பயிர் செய்கைக்காகவும் தென்னிந்திய கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட பெரும்பான்மையானோரையும் அத்தொழிற்துறைகளோடு தொடர்புடைய ஏனையோரையும் இதர சிறு தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களையும் கொண்ட, இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் ஒரு மக்கள் கூட்டத்தையே பிரதானமாக "மலையக தமிழர்" என அழைக்கின்றோம். இப்பதத்தினுள் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களால் குடிபெயர்ந்தும், பல்வேறு கலவரங்களால் குடிப்பெயர்ந்தும் இலங்கையின் பல்வேறிடங்களில் (குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில்) வாழும் மக்களும் உள்ளடங்குவர். மத்திய மலைநாட்டில் மட்டுமின்றி காலி, மாத்தறை, களுத்துறை போன்ற கறையோர பிரதேசங்களிலும் பெருந்தோட்ட தொழிற்துறையை சார்ந்து வாழும் மக்களும் இதனுள் அடங்குவர். ஆக "மலையக தமிழர்" என்பதனை வெறும் புவியில் அடிப்படைகளைக் மட்டும் கொண்டோ அல்லது தொழிற்துறையை மட்டும் கொண்டோ வரையறை செய்துவிட முடியாது. இதனை ஒரு பரந்த அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 06:25, 5 செப்டம்பர் 2017 (UTC)