பேச்சு:எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
# '''மறுக்கிறேன்''' - சுந்தர், சிறீதரன், சஞ்சீவி சிவகுமாரின் கருத்துகளுடன் உடன்படுகிறேன்--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:19, 18 அக்டோபர் 2012 (UTC)
# வணக்கம். இக் கட்டுரையில் முழுமையான பங்களிப்பை சுந்தர் செய்திருந்தால்! கண்டிப்பாக அவரின் பெயரை இடுவது நன்று. '''காரணம்:''' எட்டயபுரம் தமிழை மட்டும் வழக்கவிலை, தங்களின் ஊரின் பெருமையையும் வழத்திருக்கிறது. இதன் காரணமாக விக்கி என்னும் கலைக் களஞ்சியத்தில் தமிழ் மேன்பாட்டுகாக பாடு படுவதனாலும் இவரின் பெயர் இக் கட்டுரையில் இடுவது சிறந்ததே! இவர் விக்கியின் பங்களிப்பாளராக இருந்தாலும் தமிழின் வளர்ச்சிக்கு வேறு பல கலை பிரிவுகள் மூலமாகவும் பங்களிப்பு செய்கிறார். நன்றி.--சிவம் 08:42, 18 அக்டோபர் 2012 (UTC)
 
===விமர்சனங்கள்===
://எவ்விதப் பயனும் எதிர்பாராமல் விக்கியின் செயல்பாட்டில் பங்களித்து வரும் விக்கிப்பீடியர்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்//... எனும் போது யார்யார் முக்கியப் பயனர், யார்யார் முக்கியமற்ற பயனர் எனும் தரம் பிரித்தல் தோற்றுவிக்கப்படுகிறது. இது கண்டிக்கத் தக்கது.
 
://நிர்வாகி/அதிகாரி நிலையிலுள்ள...// முதலில் இந்த "நிர்வாகி", "அதிகாரி" எனும் பெயரையெல்லாம் தூக்கவேண்டும். '''நிர்வாகி''' என்றால் அங்கே ஒரு நிர்வாகம் இருக்கிறது என்றும், அந்த நிர்வாகத்தை நிர்வகிப்பவர் இருக்கிறார் என்றும், ஏனையோர் அந்த நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவோர் என்றும் பொருள் கொள்ளவேண்டியதாக இருக்கும். அதிலும் '''அதிகாரி''' எனும்போது, ஒரு அதிகாரியால் எவரையும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கவும், கட்டுப்படுத்தவும், சட்டங்களை பிறப்பிக்கவும் முடியும் எனும் நிலையை வெளிப்படுத்துகிறது. ஆனால் விக்கிப்பீடியா என்பது தன்னார்வப் பயனர்களால் கிடைக்கும் நேரத்தைப் பொருத்து பங்காற்றி வளர்க்கும் ஒரு திட்டம். தொடர்ந்து பங்களிக்கும் ஒரு பயனரின் பணியை எளிமையாகச் செய்ய, சில கூடுதல் வசதிகளைக் கொண்ட '''அணுக்கம்''' வழங்கப்படுகிறது. அதிலும் Sysop என்பவருக்கு கூடுதலான (கருவிகளை பயன்படுத்தும்) அணுக்கம் உள்ளது. இந்த இரண்டும் ஒருவர் தொடர்ந்து எத்தகைய பங்களிப்புகளை செய்துள்ளார், என்பதன் அடிப்படையில் ஏனையப் பயனரின் விருப்புக்கும், ஏனையப் பயனரின் நம்பிக்கைக்கும் அமைவாகவே பெற்றுக்கொள்ளும் ஒரு அணுக்கம் மட்டும்தான். அதனாலேயே அவர்களுக்கு விசமிகளை தடுக்கும், விசமத் தொகுப்புகளை அழிக்கும், சில பக்கங்களை காக்கும் கருவிகளை பயன்படுத்தும் அணுக்கம் வழங்கப்பட்டுள்ளன. மற்றபடி அனைவரும் விக்கியில் சமமானப் பயனர்களே!
 
: //பயனர் என்றில்லாமல், "பங்களிப்பாளர்" என்ற வகையில் சேர்க்கலாம்...// விக்கியில் பயனர் வேறு, பங்களிப்பாளர் வேறு அல்ல: பயனர்களே பங்களிப்பாளர்கள். இன்று விக்கியைப் பார்க்கும் ஒருவர் நாளை பங்களிப்பாளராகலாம். தமிழ் விக்கியில் பலரின் புகுபதிவு, பிழைகளை திருத்துவதற்கு நுழைந்து பயனர்களாக மாறியுள்ளோரை கவனிக்கவும்.
 
:தவிர விக்கியில் சில கூடுதல் வசதிகள் கொண்ட, கருவிகளைப் பயன்படுத்தும் அணுக்கங்களைப் பெற்றிருப்போர், விக்கியின் உள் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். இவை விக்கியெனும் உள்கட்டமைக்குகான அணுக்கம் மட்டுமே. '''விக்கிக்கு வெளியே''' "நிர்வாகி", "அதிகாரி" போன்ற சொற்கள் பயன்படுத்துவது ஒரு தேவையற்ற '''சுயவிளம்பரமாகவே''' கருத வேண்டியுள்ளது.
 
== பெயர் காரணி ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:எட்டயபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எட்டயபுரம்" page.