தோள் சீலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 52:
==தாலி அறுத்தான் சந்தை சம்பவம்==
போராட்டத்தின் போது [[குப்பாயம்]] அணிந்த தாழ்த்தப்பட்டவர்களது ஆடைகள் கிழிக்கப்பட்டு தனியாகத் தொங்கவிடப்பட்டன. சில இடங்களில் அவற்றிற்குத் தீ வைக்கப்பட்டன. பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய [[அரிவாள்|அரிவாளை]], நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை [[தொரட்டி]] என்று [[திருநெல்வேலி]], [[தஞ்சாவூர்|தஞ்சை]] மாவட்டங்களிலும் [[தோட்டை]] என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் [[தீட்டு]] என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது [[தாலி]]க் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் [[தாலி அறுத்தான் சந்தை]] என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் ''இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை'' என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.<ref>http://jannal.blogspot.com/2006/01/blog-post.html</ref>
==சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்திட்ட சர்ச்சை கருத்துக்கள்==
 
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அது உடனே நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பமக, சமக ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன. இப்பாட திட்டத்தை ஜானகி நாயர் என்பவர் தயாரித்துள்ளார். அவர்கள் நீக்குவதற்கு முன் வைக்கும் முக்கிய காரணங்கள்.
*சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது. தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டம் மாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வகுடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வகுடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருக்கிறது.
*நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
*நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப் பட்டிந்ததாகவும், மேலாடை அணிவதற்காக நாடார் சமுதாய பெண்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் கூறப்பட்டிக்கிறது. 1836ம் ஆண்டிலிருந்து அய்யா வைகுந்தர் அவர்கள் நடத்திய போராட்டங்களை பற்றிய குறிப்புகளை பாட புத்தகத்தில் சேர்க்கவில்லை.
==இவற்றையும் பார்க்க==
*[[திருவிதாங்கூர் சாதி கொடுமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோள்_சீலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது