பிரான்சின் முதலாம் நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பிரெஞ்சுப் புரட்சி சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
'''நெப்போலியன் பொனபார்ட்''' (''Napoléon Bonaparte'', [[15 ஆகஸ்ட்]] [[1769]] – [[5 மே]] [[1821]]) அல்லது '''முதலாம் நெப்போலியன்''' [[பிரான்ஸ்]] நாட்டின் படைத் தலைவனாகவும், [[அரசியல்]] தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் [[பிரெஞ்சுப் புரட்சி]]யில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், [[பிரெஞ்சுப் பேரரசன்]], இத்தாலியின் மன்னன், [[சுவிஸ் கூட்டமைப்பு|சுவிஸ் கூட்டமைப்பின்]] இணைப்பாளன், [[ரைன் கூட்டாட்சி]]யின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.
 
[[கோர்சிக்கா]]வில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான [[முதலாம் கூட்டணி]] மற்றும் [[இரண்டாம் கூட்டணி]]களுக்கு எதிரான [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்|போர்களை]] வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.<ref name="Schom 1998">{{cite book|last=Schom|first=Alan|title=Napoleon Bonaparte|year=1998|publisher=HarperPerennial|location=New York|isbn=0-06-092958-8|edition=1. HarperPerennial}}</ref> தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய [[நண்பர்]]களையும், [[உறவினர்]]களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.
 
[[1812]] இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்புஇப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்துஇத்தோல்வியிலிருந்து மீள்வதற்குநெப்போலியனால் அதற்கு முடியவில்லைமீளமுடியவில்லை. அக்டோபர் [[1813]] இல், ஆறாவது கூட்டணிகூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. [[1814]] ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி [[எல்பா]]த் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் [[1815]] [[ஜூன் 18]] இல் [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ]] என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த [[சென் ஹெலெனா]]த் தீவில் கழிந்தது.
 
==பிறப்பும் கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_முதலாம்_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது