சாலமோனின் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கியாக்கம்
வரிசை 103:
கோவிலின் தூயகம் விலையுயர்ந்த தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. அப்பலகைகளும் பொன்னால் பொதியப்பட்டன. தூயகத்தின் மேல், பேரீச்சை,மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன (காண்க: 2 குறிப்பேடு 3:5). அவற்றின் மீதும் பொன்முலாம் பூசப்பட்டது. பொற்சங்கிலிகள் தூயகத்தைக் கருவறையிலிருந்து பிரித்தன.
 
தூயகத்தின் சுவர்களின்.உட்புறம் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் மூடப்பட்டன. தூயகத்தின் கீழ்த்தளம் நூக்கு மரப்பலகைகளால் பாவப்பட்டது. தூயகட்த்தின்தூயகதித்தின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும், விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை (காண்க: 1 அரசர்கள் 6:15-18).
 
==சால்மோன் கோவிலின் "முன் மண்டபம்"==
வரிசை 109:
இப்பகுதி "உலாம்" (''Ulahm'') என்று அழைக்கப்பட்டது. இது கோவிலின் நுழைவாயிலுக்கு முன்னால், கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது (காண்க: 1 அரசர்கள் 6:3; 2 குறிப்பேடு 3:4; 9:7). இப்பகுதியின் அளவைகள்: நீளம் = 20 முழம் (கோவிலின் அகலத்தைப் போல்); அகலம் = 10 முழம் (கோவிலுக்கு முன்னால்) (காண்க: 1 அரசர்கள் 6:3).
 
2 குறிப்பேடு 3:4 ஒருஓர் எதிர்பாராத அளவைக் குறிப்பிடுகிறது. அதாவது, முன் மண்டபத்தின் உயரம் 120 முழம் என்று அங்கே உள்ளது. இவ்வளவு உயரம் இருந்தால் அது ஒரு "கோபுரமாக" மாறிவிடும். எனவே இந்த 120 முழம் என்னும் அளவை ஒருவேளை விவிலிய பாடச் சிதைவின் காரணமாகத் தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.
 
கோவிலின் முன் மண்டபத்தை அதற்கு அடுத்திருந்த அறையிலிருந்து பிரிக்க ஒரு சுவர் இருந்ததா என்று குறிப்பு இல்லை.
வரிசை 122:
 
இத்தூண்கள் பற்றிய விரிவான விவரிப்பு 1 அரசர்கள் 7:15-22இல் உள்ளது:
{{cquote|சாலமோன் இரண்டு வெண்கலத் தூண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. அத்தூண்களின் உச்சியல்உச்சியில் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். அவர் அவ்விரு தூண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார். மேலும் அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் தூணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்; மற்றதற்கும் அவ்வாறே செய்தார். முன்மண்டபத் தூண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம். மேலும் தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன. இவ்விரு தூண்களையும் தூயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய தூணுக்கு 'யாக்கின்' என்றும் வடபுறம் நாட்டிய தூணுக்குப் 'போவாசு' என்றும் பெயரிட்டார். தூண்களின் உச்சியில் அல்லி மலர் வேலைப்பாடு இருந்தது. இவ்வாறு தூண்களின் வேலைப்பாடு முடிவுற்றது.}}
 
இங்கே சாலமோன் கோவில் தூண்கள் "வெண்கலத்தால்" ஆனவை என்றுளது. ஆனால் ஈயம் என்னும் உலோகம் அக்கால எபிரேயருக்குத் தெரியாததாலும், அதைக் கலந்தே தாமிரம் அல்லது துத்தநாகம் வெண்கலமாகும் என்பதாலும், இங்கே பயன்படுத்தப்படும் "nehosheth" என்னும் எபிரேயச் சொல் தாமிரம் அல்லது துத்தநாகத்தைக் குறிக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சாலமோனின்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது