பகடிப்பட இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சில ஏற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Cartoon physics comic.jpg|thumb|200px|பகடிப்படத் [[தோற்றப்பாடு|தோற்றப்பாட்டைப்]] பற்றிய நகுபடம்]]
'''பகடிப்பட இயற்பியல் (''Cartoon physics'')''' என்பது [[இயக்கமூட்டல்|இயக்கமூட்டப்பட்ட]] பகடிப்படங்களில் [[நகைச்சுவை]] பொருட்டு பொதுவாக அறியப்பட்ட இயற்பியல் கோட்பாடுகளும் விதிகளும் [[நகைச்சுவை]] பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை [[புவியீர்ப்பு விசை]] செயல்படாதிருத்தலும்.<ref name="coyotusinterruptus">''புதிய விஞ்ஞானி'' அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற ''கொயாடஸ் இன்டெரப்டஸ்'' ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது.</ref>
 
''"இயக்குமூட்டப்படும் பகடிப்படங்கள் இயற்பியல் பொதுவிதிகளைப் பின்பற்றுகின்றன&mdash;வேறு விதமாக இருந்தால் நகைச்சுவை தருமென்றில்லாதபோது."'' என்று ஆர்டு பாப்பிட் என்ற பகடிப்பட வல்லுநர் மொழிந்ததாகக் கருதப்படும் கூற்று இந்த நிகழ்வை வரைவுபடுத்துகிறது. மேலும், பகடிப் படங்களில் வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் இசைவுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளதை இவ்விளைவு காட்டுகிறது.
 
மேலும், பகடிப் படங்களில் வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் இசைவுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளதை இவ்விளைவு உணர்த்துகிறது.
 
==வரலாறு==
வரி 10 ⟶ 8:
பகடிக்கதாபாத்திரங்கள் இயலுலகிலிருந்து மாறுபட்டு நடந்து கொண்டாலும் அவை குறிப்பில்வழியாக அல்லாமல் முன்னறியும் வகையில் இருக்கின்றன என்ற கருத்து இத்துறை துவங்கிய காலம் தொட்டே இருந்து வருகிறது. முற்காட்டாக 1956-ம் ஆண்டு [[வால்ட்டு டிஸ்னி]] ''த புளாசிபில் இம்பாசிபில்'' ("இயலக்கூடிய இயல்தகாமை" ) என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சியில் இயக்கமூட்டற் படங்களில் நடக்கமுடியாதவை கூடய உளம் ஏற்கும் வகையில் தென்படுகின்றன என்பதை விளக்கியுள்ளார்.
 
''கார்ட்டூன் ஃபிசிக்சு'' என்ற சொற்றொடர் முதன்முதலாக 1980-ம் ஆண்டு எஸ்கொயர் பருவ இதழில் வெளிவந்த "ஓ டொனெலின் பகடிப்பட நகர்வு விதிகள்" என்ற தலைப்புடைய கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது.<ref>O'Donnell's Laws of Cartoon Motion (ஓ டொனெலின் பகடிப்பட நகர்வு விதிகள்)", ''Esquire'', 6/80, ஐ.இ.இ.இ. அமைப்பின் மறுபதிப்பு, 10/94; V.18 #7 p.12. [http://remarque.org/~doug/cartoon-physics.html இணையப் பக்கம்]</ref> அதன் பின்னர் 1994-ம் ஆண்டி [[ஐஇஇஇ]] அமைப்பு இக்கட்டுரையின் ஒரு பதிப்பை [[பொறியாளர்]]களுக்கான இதழில் வெளியிட்டபின் இக்கருத்து பரவலாக அறியப்படவும் வெகுவாகச் சீர்திருத்தப்படவும் துவங்கியது.
 
இந்நிலைப்பாடு பரவலாக அறியப்பட்டிருந்ததன் அடையாளமாக 1949-ல் வெளிவந்த ஒரு பகடிப்படத்தில் "பக் பன்னி" என்ற [[முயல்]] கதாபாத்திரம் "இது புவியீர்ப்பு விசையின் விதிகளை/சட்டத்தை மீறுவது என்பது எனக்குத் தெரியுதெரியும்; ஆனால், நான் சட்டம் படிக்காததால் இது என்னைக் கட்டாது." என வேடிக்கையாகவும் வழக்கறிஞர்களைக் கேலி செய்யும் வகையிலும் கூறுவதாக வருகிறது.
 
அண்மையில் ரோகர் ரேபிட் மற்றும் போங்கர்ஸ் போன்ற பகடிப்படங்களில் கதாபாத்திரங்களே இந்த இயற்பியலைப் பற்றி கூறுவதும் எந்நேரங்களில் இது நகைச்சுவை விளைவை ஏற்படுத்தும் என்று விளக்குவதும் போன்ற காட்சிகள் வந்திருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பகடிப்பட_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது