இலந்தனைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
| Lu
|}
'''<big>இலந்தனைடுகள்</big>''' (''Lanthanides'', இலந்தனம் போன்றவை) என்பது 15 [[வேதியியல்]] [[தனிமம்|தனிமங்கள்]] கொண்ட ஒரு வரிசையாகும். இவ்வரிசையில் உள்ள தனிமங்கள் [[அணுவெண்]] 57 முதல் அணுவெண் 71 வரை உள்ளவை. அதாவது [[இலந்தனம்]] (அணுவெண் 57) முதல் [[லூட்டேட்டியம்]] (அணுவெண் 71) வரையிலான தனிமங்கள் வரிசை <ref>[http://www.iupac.org/reports/provisional/abstract04/connelly_310804.html IUPAC Provisional Recommendations for the Nomenclature of Inorganic Chemistry (2004)] (online draft of an updated version of the "''Red Book''" IR 3-6)</ref>. லூட்டேட்டியத்தைத் தவிர மற்ற எல்லா இலந்தனைடுகளும் 4f-[[எதிர்மின்னி]] வலயத்தை நிரப்பியிருக்கும் [[f-வலயக் குழு]]வைச் சேர்ந்தவை ஆகும். லூட்டேட்டியம் d-வலயக்குழுவைச் சேர்ந்த இலந்தனைடு ஆகும்.
 
== பெயரிடல் ==
[[புரொமீத்தியம்]] தவிர்த்த மற்ற இலந்தனைடுகளையும் [[ஸ்காண்டியம்]], [[இற்றியம்]] ஆகியவற்றை ஆங்கிலத்தில் அரிதாகக் கிடைக்கும் தனிமங்கள் (rare earth elements) என்னும் பெயரால் அழைத்து வந்தனர். ஆனால் இது ஏற்ற கலைச்சொல் இல்லை என்று தூய மற்றும் பயன்முக வேதியியலுக்கான அனைத்துலக ஒன்றியம் (IUPAC) பரித்துரைக்கின்றது. ஏனெனில் இவ்வரிசையில் பல தனிமங்கள் நிறையவே (மலிவாகக்) கிடைக்கின்றன. மேலும் ஆங்கிலக் கலைச்சொல்லில் உள்ள "earth" என்பது பொதுவாக நீரில் கரையா கடும் கார ஆக்ஸைடுகளைத் தரும் [[மாழை]]களை, 18 ஆம் நூற்றாண்டுகளில் உருக்குலையில் இட்டு மாழையாக பிரித்தெடுக்க இயலாத பொருட்களைக் குறிக்கப் பயன்படுத்தினர். அரிதாகக் கிடக்கும் என்று கூறுவது [[சீரியம்]] போன்ற தனிமங்களுக்குப் பொருந்தாது, ஏனெனில் அது உலகில் கிடைக்கும் பொருட்களில் 26 ஆவது நிலையில் அதிகமாகக் கிடைக்கும் பொருளாகும். நியோடைமியம் என்னும் தனிமம் [[தங்கம்|தங்கத்தை]] விட அதிகமாகக் கிடைக்கும் பொருள். சற்று அரிதாகக் கிடைக்கும் [[தூலியம்]] கூட [[அயோடின்|அயோடினை]] விடக் கூடுதலாகக் கிடைக்கின்றது <ref name="Aspinall">Helen C Aspinall, Chemistry of the f-block elements</ref>. எனவே அரிதாகக் கிடக்கும் தனிமங்கள் என்னும் சொல்லாட்சி தவிர்க்கப்படவேண்டியது. இலந்தனைடு என்பதைக்காட்டிலும் இலந்தனாய்டு என்னும் சொல்லை IUPAC பரிந்துரைக்கின்றது. தமிழில் ''இலந்தனம் போன்றவை'' என்றும் கூறலாம்.
 
== வேதியியல் ==
 
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
 
பண்புகளில் எல்லா இலந்தனைடுகளும் [[இலந்தனம்]] என்னும் தனிமத்தை ஒத்துள்ளன. வெண்மையாய் பளபளப்பாக உள்ளன. காற்று பட்டால் மங்கலான தோற்றம் கொள்ளுகின்றன. பலவும் எஃகு உற்பத்தியில் பயனாகின்றன. மாழையிலித் தனிமங்களுடன் மிகவிறுவிறுப்பாக வினையுறுகின்றது. இலந்தனைடுகள் மென்மையானவை. ஆனால் அணுவெண் கூடக்கூட கெட்டிப்பு (கடினத்தமை) கூடுகின்றது. இலந்தனைடுகள் காற்றில் தீப்பற்றக்கூடியன. உயர்ந்த [[உருகுநிலை]]யும் [[கொதிநிலை]]யும் கொண்டவை.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஆக்டினைடுகள்]]
* [[காரக்கனிமத் தனிமங்கள்]]
 
== வெளி இணைப்புகள் ==
வரி 86 ⟶ 79:
 
== மேற்கோள்கள், உசாத்துணை ==
 
<references/>
 
{{தனிம அட்டவணை பட்டி}}
<br clear=all>
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
{{PeriodicTablesFooter}}
 
[[பகுப்பு:லாந்த்தனைடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலந்தனைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது