இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: de:Parlamentswahlen in Sri Lanka 2004
No edit summary
வரிசை 53:
| after_party = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
}}
'''2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்''' [[இலங்கை]]யின் 13வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக [[2004]], [[ஏப்ரல் 4]] இல் இடம்பெற்றது. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|12வது நாடாளுமன்றத் தேர்தல்]] இடம்பெற்று மூன்றாண்டுகளுக்குள் அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் [[ரணில் விக்கிரமசிங்க]] தலைமையிலான [[ஐக்கிய தேசியக் கட்சி]] அரசு 82 இடங்களை மட்டும் கைப்பற்றி தேர்தலில் தோற்றது. எதிர்க்கட்சிக் கூட்டணி [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] 105 இடங்களை வென்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் போதாமல் இருந்தும் அது ஆட்சியமைத்தது. அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] முன்னாள் தொழிலமைச்சர் [[மகிந்த ராசபக்ச]]வை பிரதமராக அறிவித்தார்.
 
==கட்சிகள்==
அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யுடன் இடதுசாரி [[மக்கள் விடுதலை முன்னணி]] கூட்டுச் சேர்ந்து [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] என்ற கூட்டணியை அமைத்தது. [[மக்கள் கூட்டணி]]யின் ஏனைய கூட்டுக் கட்சிகளாக இருந்த [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி|பொதுவுடைமைக் கட்சி]], [[சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி]], [[லங்கா சமசமாஜக் கட்சி]], [[மகாஜன எக்சத் பெரமுன]], [[இலங்கை மக்கள் கட்சி]] ஆகியன பின்னர் ஐமசுகூ உடன் இணைந்தன. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 தேர்தலில்]], [[மக்கள் கூட்டணி]]யும் [[மக்கள் விடுதலை முன்னணி]]யும் வெவ்வேறாகப் போட்டியிட்டன. அப்போது மவிமு 9.1% வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
 
ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] சிறிய கட்சிகளான [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] போன்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து [[ஐக்கிய தேசிய முன்னணி]] (ஐதேமு) என்ற கூட்டணியில் போட்டியிட்டது.
 
[[பௌத்தம்|பௌத்த]], [[சிங்களவர்|சிங்கள]] தேசியவாதக் கட்சியான [[ஜாதிக எல உறுமய]], [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] (ததேகூ), [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]], [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]] (ஈபிடிபி) போன்றவையும் போட்டியிட்டு நாடாளுமன்ற இருக்கைகளைப் பெற்றது.
 
{{Sri Lankan elections}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_2004" இலிருந்து மீள்விக்கப்பட்டது