திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
1045 ஆம் ஆண்டு, [[ஒன்பதாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|ஒன்பதாம் பெனடிக்ட்]] காசுக்காக தனது பதவியினைத் துறந்தார். இவரிடமிருந்து திருச்சபையை காக்க இவருக்கு பணமளித்து இவரை பணி துறக்க கட்டயாப்படுத்திய [[ஆறாம் கிரகோரி (திருத்தந்தை)|ஆறாம் கிரகோரி]] இவருக்குப்பின் திருத்தந்தையானார். ஆயினும், ஆறாம் கிரகோரியின் செயல் பெரும்பாவமாக (simony) கருதப்பட்டதால் அவரும் தானாகவே பணியினைத் துறந்தார். இவருக்குப்பின் திருத்தந்தையான [[இரண்டாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|இரண்டாம் கிளமெண்ட்]] 1047இல் இறந்ததால் ஒன்பதாம் பெனடிக்ட் மீண்டும் திருத்தந்தையானார்.
 
நன்கறியப்பட்ட திருத்தந்தையின் பணி துறப்பு [[ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை)|ஐந்தாம் செலஸ்தீன்]] 1294இல் செய்தது ஆகும். இவரை கட்டாயப்படுத்தி திருத்தந்தையாக்கியதாலும், அக்காலத்தில் திருத்தந்தை பணி துறப்பினை பற்றி எந்த சட்டமும் இல்லாததாலும், திருத்தந்தை பணி துறப்பு என்பது நிகழ முடியத ஒன்றாகக் கருதப்பட்டதாலும், இவர் திருத்தந்தையான 5 மாதங்களுக்குப் பின்பு 'ஒரு திருத்தந்தைக்கு தனது பணியினை துறக்க அதிகாரம் உண்டு' என சட்டம் இயற்றி, அதனைப்பயன்படுத்தி தனது பணியினை துறந்தார். இதற்குப் பின் இரண்டு வருடங்கள் இவர் வனவாசியாக வாழ்ந்து மரித்தார். இவருக்கு [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம் அளிக்க படுள்ளதுஅளிக்கப்பட்டுள்ளது]] என்பது குறிக்கத்தக்கது.
 
[[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|பன்னிரண்டாம் கிரகோரி]] (1406-1415), மேற்கு சமயப்பிளவினை (Western Schism) முடிவுக்கு கொண்டு வர தனது பணியினைத் துறந்தார். இவரோடு சேர்ந்து பிசா எதிர்-திருத்தந்தை 23ஆம் யோவானும் பணியினை துறந்தனர். ஆயினும் அவிஞான் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் பணி துறக்க மறுத்ததால், அவர் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே நடப்பில் இருந்த காண்ஸ்டன்சு சங்கத்துக்கு தனக்குப்பின் வரும் திருத்தந்தையை தேர்வு செய்ய பன்னிரண்டாம் கிரகோரி அதிகாரம் அளித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது