திண்மம் (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Quartz Crystaloisan.jpg|thumb|200px|right|[[சிக்கிமுக்கிக் கல்]] படிக வடிவில் திண்மம்]]
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''திண்மம்''' என்பது பொருள்களின் இயல்பான நான்கு<ref>பொருள்களின் நான்கு நிலைகள்: [[திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]], [[பிளாஸ்மா (இயற்பியல்)|மின்மவளிம நிலை]]</ref> நிலைகளில் ஒன்றாகும். '''திண்மப்பொருள்''' என்பது '''திடப்பொருள்''' என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள [[அணு|அணுக்கள்]] ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. அதாவது ஓரணுவுக்குப் பக்கத்தில் உள்ள வேறு ஓர் அணு அதன் பக்கத்திலேயே இருக்கும். சூழலின் [[வெப்பநிலை|வெப்பநிலையில்]] அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும். ஆனால் ஒரு [[நீர்மம்|நீர்மத்திலோ]] அல்லது ஒரு [[வளிமம்|வளிமத்திலோ]] அணுக்களுக்கு இடையேயான இடைவெளி அணுவின் விட்டத்தைப் போல பல மடங்காக (பன்னூறு அல்லது பல்லாயிரம் மடங்காக) இருக்கும். ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் பலவாறு பகுக்கப்படுகின்றன.
* '''[[படிகம்]]''': திண்மத்தில் உள்ள அணுக்கள் ஒரே சீரான அமைப்பில், அணியணியாய், ஒரு சீரடுக்காய் இருப்பின் அத்திண்மத்தைப் [[படிகம்]] என்று அழைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/திண்மம்_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது