சா. ஜே. வே. செல்வநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Sjv.jpg" நீக்கம், அப்படிமத்தை Denniss பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No source ...
*விரிவாக்கம்*
வரிசை 44:
 
இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார்.
இவருடைய மகன் வழிப்பேத்தி [[பூங்கோதை சந்திரஹாசன்]] [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] [[நடிகை]] ஆவார்
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[தெல்லிப்பளை]]யைச் சேர்ந்த தந்தை செல்வநாயகம் [[மலேசியா]]வில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் படித்தவர். [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே பதவி விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் [[இலங்கை சட்டக் கல்லூரி|சட்டக் கல்லூரி]]யில் சேர்ந்து [[சட்டம்]] படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/சா._ஜே._வே._செல்வநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது