இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மின்காந்தவியல்: *விரிவாக்கம்*
சி →‎மின்காந்தவியல்: *விரிவாக்கம்*
வரிசை 74:
===மின்காந்தவியல்===
{{Main|மின்காந்தவியல்}}
[[Fileபடிமம்: Magnetosphere rendition.jpg | thumb | 200px | காந்தக் கோளப் பரப்பு.]]
[[மின்புலம்| மின் புலத்தினாலும்]] [[காந்தப் புலம்| காந்தப் புலத்தினாலும்]] செறிவூட்டப்பட்ட துகள்களின் வினையாற்றலை விவரிக்கும் இயற்பியல் பிரிவே மின்காந்தவியல் ஆகும். இது மேலும் நிலையான [[மின்மம்| மின்மங்களின்]] இடையேயான வினையாற்றலான [[நிலைமின்னியல்]], அசைவிலுள்ள மின்மங்களின் இடைவினைகளை ஆராயும் [[இயக்க மின்னியல்]] மற்றும் [[கதிர்வீச்சு]] என உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். மரபார்ந்த மின்காந்தவியல் கோட்பாடுகள் [[லாரன்சு விசை]] மற்றும் [[மாக்சுவெல்லின் சமன்பாடுகள்|மாக்சுவெல்லின் சமன்பாடுகளை]] அடிப்படையாகக் கொண்டவை.
 
வரிசை 80:
 
[[நுண்ணலை]], [[அலைவாங்கி]]கள், மின்கருவிகள், [[தகவல் தொடர்பு செயற்கைக்கோள்]], உயிரிமின்காந்தவியல், பிளாஸ்மா, அணுக்கரு ஆய்வுகள், [[ஒளியிழை]], மின்காந்த குறுக்கீடு மற்றும் ஒவ்வுமை, மின்னியந்திர ஆற்றல் மாற்றுதல், [[கதிரலைக் கும்பா]] மூலம் [[வானிலை]] மற்றும் சேய்மை கண்காணிப்பு போன்ற பல துறைகளில் மின்காந்தவியலின் தத்துவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. [[மின்மாற்றி]], [[உணாத்தி]]கள், [[வானொலி]] / [[தொலைக்காட்சி]], [[தொலைபேசி]]கள், மின் இயக்கிகள், அலைச்செலுத்திகள், [[ஒளியிழை]] மற்றும் [[சீரொளி]] ஆகியன சில மின்காந்தவியலைப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும்.
 
[[படிமம்: Cont emspec2.jpg | thumb | center | 500px |மின்காந்த அலைக்கற்றை.]]
===சார்புக் கோட்பாடு===
{{Main|சார்புக் கோட்பாடு}}
[[20ம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டின்]] துவக்கத்தில் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] அறிமுகப்படுத்திய சார்புக் கோட்பாடு இரு ஆய்வுப் பிரிவுகளாக பிரிந்துள்ளது:[[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] மற்றும் [[பொதுச் சார்புக் கோட்பாடு]].
 
சிறப்புச் சார்புக் கோட்பாட்டில், ஐன்ஸ்டைன், [[என்ட்ரிக் லொரன்சு]] மற்றும் [[ஹெர்மான் மின்கோவ்ஸ்கி]] போன்றோர் வெளி மற்றும் [[நேரம்]] குறித்த கருத்துக்களை ஒன்றிணைத்து நான்கு பரிமானங்களைக் கொண்ட [[வெளிநேரம்]] என்ற கோட்பாட்டை நிறுவினார். நியூட்டனின் அறுதியிட்ட நேரத்தைப் புறக்கணித்ததுடன் மாற்றவியலா [[ஒளியின் வேகம்]], [[கால விரிவு]], [[நீளக் குறுக்கம்]] மற்றும் பொருண்மைக்கும் ஆற்றலுக்கும் உள்ள சமானம் ஆகிய புதுக்கருத்துக்களை இக்கோட்பாடு அறிமுகப்படுத்தியது. நியூட்டனின் விதிகள் இக்கோட்பாட்டின் ஒரு சிறப்புநிலைத் தீர்வாக உள்ளது.
 
மேலும், [[பொதுச் சார்புக் கோட்பாடு]] [[வெளிநேரம்|வெளிநேரத்தின்]] வடிவியல் உருக்குலைவாக [[நியூட்டனின் ஈர்ப்பு விதி]]யை ஆராய்கிறது. [[திணிவு]]களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்ட முந்தைய கோட்பாடுகளைப் போலன்றி இந்தக் கோட்பாடு [[ஆற்றல்|ஆற்றலையும்]] வெளிநேர வளைவுகள் மூலம் கணக்கில் கொள்கிறது. இதற்கென தனியான கணிதப் பிரிவாக [[பல்திசையன் நுண்கணிதம்]] உருவாகியுள்ளது. ஈர்ப்புவிசையால் ஒளி வளைக்கப்படுதல், [[புதன் (கோள்)| புதனின்]] சுற்றுப்பாதையினால் மாற்றம் போன்ற நிகழ்வுகளை இக்கோட்பாட்டால் விளக்க முடிகிறது. பொதுச் சார்புக் கோட்பாட்டினால் [[வானியற்பியல்|வானியற்பியலில்]] பயன்படும் ஓர் புதிய ஆய்வுத்துறையாக [[அண்டவியல்]] உருவாகியுள்ளது.
 
== இயற்பியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது